மாமனிதர் சிவராம் பற்றி, சோமிதரன் எழுதும் தொடரை படிக்கும் போது, அவரது இழப்பு ஈழத்தமிழ் ஊடகத்துறைக்கு, எத்தகைய பாதிப்புகளை ஏறபடுத்தியிருக்கிறது என்பதை உணரக்கூடியதாக இருக்கிறது. உண்மையில் சிவராமின் முக்கியத்துவம் வெகுவாகக் குறைத்தே மதிப்பிடப்படுகிறது. அதற்கு அவர் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தில் (புளொட்) இணைந்திருந்த போது மேற்கொண்ட சில நடவடிக்கைகள் காரணமாக இருக்கலாம். அவரது தனிப்பட குணவியல்புகள், அல்லது அவர் மீது கொண்ட தொழிற்துறைசார்ந்த பொறாமை, காழ்ப்புணர்வு எனப்பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் ஒரு ஊடகவியலாளனாக, அதுவும் தனது இனத்தின் மீது பற்றுறுதி கொண்ட ஒரு தமிழ்தேசியவாதியாக அவரிடம் நாம் நிறைளையன்றி, எவ்வித குறைகளையும் காணமுடியாது.
ஐ.எம்.எப் என்கிற சர்வதேச நாணய நிதியம் சிறிலங்காவிற்கு 2.6 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்க முன்வந்துள்ளது. இக்கடனுதவி பகுதி பகுதியாக வழங்கப்பட இருப்பதாகவும், அதன் முதற்பகுதியாக 322 மில்லியன் டொலர் உடனடியாக வழங்கப்படவிருப்பதாகவும் மேற்படி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இன்று அகதி முகாம்களில் உணவுக்காக பிச்சைப் பாத்திரமேந்தி நிற்கும் தமிழர்களைப் பார்க்கப்
பரிதாபமாக இருக்கிறதுழூ. (ஆடு நனைகிறதே என ஓநாய் அழுததாம்!) மீண்டும் வடக்கு
மாநிலத்தில் விவசாயம் செழிக்க வேண்டும். அது சாத்தியம். வரும் அக்டோபர்
மாதத்திலேயே அங்கே விவசாயப் பணிகள் ஆரம்பிக்க இருக்கின்றன'' என்கிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி முனைவர் எம்.எஸ். சுவாமிநாதன் என்கிற மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் (பிறப்பு ஆகஸ்ட் 7, 1925, கும்பகோணம், தமிழ்நாடு, இந்தியா). அண்மையில் இவர் ராஜபக்ஷேவின் அழைப்பின் பேரில் இலங்கை சென்று, அங்கே விவசாயப் பணிகள் தொடங்குவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்துவிட்டு வந்திருக்கிறார்.
மேலும் சுவாமிநாதன் கூறுகிறார் கேளுங்கள்:
புலம் பெயர்நாடுகளில் நடைபெறுகிற எழுச்சி நிகழ்வுகளுக்கு தமிழ்நாட்டிலிருந்து பேச்சாளர்கள் அழைக்கப்படுவதும், அவர்களது உணர்ச்சிபூர்வமான அழகு தமிழிலான பேச்சினைக் கேட்கவென மக்கள் திரளுவதும், பேச்சினைக் கேட்டு சிலிர்த்துப் போவதும் இங்கு வழக்கமாக இருந்தது. ஆண்டு தோறும் நடைபெறும் மாவீரர் தின நிகழ்வுகளுக்கு யார் யாரெல்லாம் தமிழ்நாட்டிலிருந்து சிறப்புரையாற்ற வருகிறார்கள் என்பதனை அறிவதில் பலரும் ஆர்வம் காட்டுவார்கள். ஜேர்மனிக்கு அவர் போகிறாராம், பிரான்சுக்கு இவராம், சுவிசுக்கு அவராம் என மக்கள் ஆர்வத்துடன் பேசிக் கொள்வதை அவதானித்திருக்கிறேன்.
கடந்த ஒரு பேப்பரில் “பிரித்தானிய தமிழர் தேசியப்பேரவை” பற்றிய வரைபு பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அதையொட்டிய சில கருத்துகள் எங்களை வந்தடைந்துள்ளன. அவை பற்றி வரும் இதழ்களில் பார்ப்போம். அதுபோல் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை ஐனநாயக முறையில் வெளிப்படுத்துவது தொடர்பாக பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவை ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டுள்ளதால், இம்முயற்சிகள் ஒருமுகப்படுத்துப்பட வேண்டும் என்ற கருத்து பலராலும் முன்வைக்கப்படுகிறது. தமிழ்மக்கள் மத்தியில் இவை பற்றிய முழுமையான கருத்துப்பரிமாற்றம், வெளிப்படையாக நடைபெறவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் மக்களிடம் இருந்து வருகிறது. ஏற்கனவே புலத்திலுள்ள தமிழ் தொலைக்காட்சிகள், வானொலிகள், இது விடயமான கருத்தாடல்களுக்கு களம் அமைத்து கொடுத்துவருகின்றன.
எழுபதுகளில் ஈழத்தில் ஒற்றைக்குழல் துப்பாக்கிகள், ஒருசில கைத்துப்பாக்கிகள்;..உள்ளுரில் தயாரித்த வெடிகுண்டுகள் என்பனவற்றுடன் திக்கொன்றாய் திரிந்த சில இளைஞர்களால் தொடங்கப்பட்ட சிறீலங்கா அரசிற்கெதிரான போராட்டம் பலவாகி பல்லாயிரம் பிரச்சனைகளாகி பின்னர் ஒன்றாகி, பலவித படையணிகளுடன் பலம்வாய்ந்த புலியாகி, முப்பத்தி நான்காண்டு காலப் போராட்டத்தின் பின்னர் முள்ளிவாயக்காலில் முடிவாகிப் போய்விட்டது...
தமிழீழ மக்கள் நடத்திய ஆயுதப் போராட்டத்தை சிறிலங்கா அரசு உலக வல்லரசுகளின் துணையோடு தோற்கடித்து விட்டது. இன்றைக்கு தமிழினம் தன்னுடைய தலைமையையும் படை வலிமையையும் இழந்து விடுதலைப் போரை தொடர்ந்து நடத்து முடியாத நிலையில் நிற்கின்றது.
தமிழீழப் போராட்டத்தை வேறு வடிவில் தொடர வேண்டிய கட்டாயத்திற்கு தமிழினத்தை காலம் தள்ளிவிட்டிருக்கிறது.
தனக்கு என்று ஒரு மொழியை, பண்பாட்டை, நிலப்பரப்பை கொண்டிருக்கும் ஒரு தேசிய இனமாகிய தமிழினம் ஒரு அரசை தமிழீழத்தில் நடத்திக் கொண்டிருந்தது. அரசுக்கான கட்டமைப்புகளையும், முப்படையினரையும் கொண்டிருந்த தமிழீழத்தை சிங்களம் மீண்டும் ஆக்கிரமித்து விட்டது.
கடந்த பல வருடங்களாக இயங்கிவந்த தமிழீழ அரசு நோக்கிய அரசு (de-facto government) சிறிலங்கா ஆட்சியாளர்களால், அதன் துணைநின்ற அரசுகளுடன் இணைந்து அசுரபலம் கொண்டு, நிர்மூலப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஒரு நிரப்ப முடியாத வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.
விடுலைப்புலிகளினால் நிர்வகிக்கப்பட்டு வந்த அக்கட்டடமைப்பு தனித்து உள்நாட்டில் மட்டுமல்ல ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் அனைத்து நாடுகளிலும் கிளை பரப்பியிருக்கிறது. இக்கிளை அமைப்புகள் தாயகத்தில் உள்ள தலமைச் செயலகத்துடனும், மற்றய நாடுகளிலுள்ள தம்போன்ற அமைப்புகளுடனும் தொடர்பாடலை நடாத்தி இணைவாகச் செயற்பட்டு வந்தன. அவை நாடுகளின் தூதாராலயங்களை விட நேர்தியாக பணியாற்றி வந்தன என்பதனை சிறிலங்கா அரச தலைவர்களே முன்னர் வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார்கள்.
“ஒஸ்டவிற்சிலும் வோட்டர்லூவிலும் உடல்களைக் குவியுங்கள். உயரமாக. (எனக்கு) கீழே அள்ளிக் கொட்டுங்கள். நான் எனது வேலையைப் பார்க்க, நான் தான் புல். நான் எல்லாவற்றையும் மூடி விடுவேன்”
- கார்ல் சான்ட்பேர்க் (1878 – 1967)
இறுதியாக ஒரு பேப்பர் வெளிவந்த போதிருந்த சூ+ழலுக்கும் தற்போது பல வார கால இடைவெளியின் பின் மீண்டும் இப்பத்தியை எழுதும் போதுள்ள சூழலுக்கும் இடையில் பாரிய மாற்றங்கள் நடந்தேறி விட்டன. முள்ளிவாய்க்கால் அனர்த்தம் தமிழர் வாழ்வில் என்றுமே அழியாத வடுவாக விளங்கும். தமிழ் பிரக்ஞையில் எப்போதுமே அதிர்ந்து கொண்டு இருக்கும்.
பிரிட்டிஸ் ஆட்சியாளர்களால் தமிழ் மக்களின் தலைவிதி சிங்கள
ஆட்சியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பின்பிலிருந்தான கடந்த 60 ஆண்டு காலப்
பகுதியில் தமிழினம் அனுபவித்த கொடுமைகள் சொல்லிலடங்கா.
இந்தக்
கொடுமைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த தமிழனத்தின் உரிமைப் போருக்கு "பயங்கரவாத" முலாமிட்டு அந்த உரிமைப் போரை நசுக்குவதற்கு உலகமே திரண்டு
முயன்று அந்த முயற்சியில் ஓரளவு வெற்றியும் கண்டு விட்டன.
மாற்றம் வரும் - சிறிக்காந்தா
மாற்றம் ஏற்பட்டே ஆகவேண்டும் - வைகோ
ஈழத்தமிழர்களின் நிலை தொடர்பாக தமிழக மக்களிடையே உணர்வலைகள் நாளாந்தம் அவர்களால் நடாத்தப்படும்; அமைதிப்போராட்டங்களின் மூலம் வெளிப்படுத்தப்பட்டு வருகிறது. தனித்து அரசியற்கட்சிகளினதும் அவர்களது ஆதரவாளர்களுடன் அடங்கிவிடாமல். தொழிலாளர்கள். கலைஞர்கள், தகவல் தொழினுட்ப வல்லுனர்கள், வலுவிழந்தோர் என தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்ட்டுவருகின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டு மக்களின் போராட்டங்கள் இந்திய நடுவண் அரசின் நிலைப்பாட்டில் மாற்றத்தினை ஏற்படுத்துமா எனற் வினா இயல்பாகவே எழுகின்றது.
தமிழீழப் போராட்டம் ஒரு முக்கியமான கட்டத்தை அடைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டிலிருந்து ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான குரல்கள் பலமாக ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இந்தக் குரல்கள் தமிழீழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் வாழும் தமிழர்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளன. இதுவரை ஈழத் தமிழர்கள் பிரச்சனையில் பாராமுகமாக இருந்த கட்சிகளும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பத் தொடங்கியிருப்பது இதில் ஒரு முக்கியமான விடயம். தமிழ் நாட்டில் வாழும் தமிழர்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக திரும்பியுள்ளதை இது எடுத்துக் காட்டுகின்றது.
கடந்த ஒரு பேப்பரில் வெளிவந்த எனது “குறிவைக்கப்படும் ஈழத்தமிழர்களும், மேடைக்கு அலையும் புத்திஜீவிகளும்” என்ற கட்டுரையில் மலேசியாவில் நடைபெற்ற மாநாடு பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். இம்மாநாட்டில் தான் கலந்து கொண்டமை தொடர்பாக பேராசியர் செல்வா செல்வநாதன் “ஒரு பேப்பர்” க்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார். மேற்படி மாநாட்டில் அவர் தனது சொந்தச் செலவில் கலந்து கொண்டதாகவும், அங்கு தன்னால் முடிந்தவரையில் தமிழர் பக்க நியாயங்களை விளக்கியதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஈழம் என்ற வார்த்தையும், அது குறித்து நிற்கும் அங்கீகரிக்கப்படாத ஒரு புவியியல் அலகு தொடர்பான பதிவுகளும் இணைய தளப் பக்கங்களை நிறைத்துக் காணப்படுவது, கல்வியாளர் சிலருக்கு அதனை ஒரு ஆய்வுப்பொருளாக ஆக்கியுள்ளது. இவ்விடயத்தினை ஆய்வு செய்த ஒரு சிங்களக் கல்வியாளர், இல்லாத ஒரு தேசத்திற்கு இவ்விதம் மாயத்தோற்றம் கொடுக்கப்படுவது புலம்பெயர்ந்த தமிழர்கள் சிலரின் இயலாத்தனத்தின் வெளிப்பாடு எனக்குறிப்பிட்டிருக்கிறார். வேறு சில கல்வியாளர்களோ, இது விடுதலைப்புலிகளினதும் அவர்களது ஆதரவாளர்களினதும் பிரச்சாரம் என்கிறார்கள்;.
உலகையே நடுங்க வைத்த சர்வாதிகாரி ஹிட்லரை தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஜேர்மனியின் சர்வாதிகாரியாக 1934இல் இருந்து 1945 வரை ஆட்சி புரிந்த ஹிட்லர் நடத்திய அழிவுகள் எண்ணில் அடங்காதவை. ஹிட்லர் உருவாக்கிய இரண்டாம் உலக யுத்தத்தில் ஐரோப்பாவில் மட்டும் 39 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டிருந்தார்கள்.
ஹிட்லரின் நாசிப் படைகள் செய்த படுகொலைகள் மனிதகுலத்தை இன்று வரை நடுங்கச் செய்பவை. எக் குற்றமும் செய்யாத 6 மில்லயனுக்கும் அதிகமான யூத மக்கள் ஹிட்லரின் படைகளால் கொல்லப்பட்டார்கள். யூதர்களை கொல்வதற்கு என்றே உருவாக்கப்பட்ட பிரத்தியேக முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட யூத மக்கள் அங்கு பல விதமான சித்திரவதைகளின் ஊடாக கொல்லப்பட்டார்கள்.
Recent comments
3 weeks 3 days ago
3 weeks 3 days ago
3 weeks 3 days ago
3 weeks 3 days ago
3 weeks 3 days ago
14 weeks 1 day ago
14 weeks 2 days ago
1 year 5 days ago
1 year 6 days ago
1 year 6 weeks ago