நினைவில்:
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன்
(29.07.1967 -02.11.2007)
நேற்றுவரை புன்னகை பூத்தபடி ஊடகவியலாளர்களையும், சர்வதேச இராசதந்திரிகளையும் ஏன் தனது எதிர்தரப்பில் உள்ள சிறிலங்கா அரசியல் தலைவர்களையும் எதிர்கொண்ட, அரசியற்பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் கடந்த 2ம் திகதி வெள்ளியன்று காலை சிறிலங்கா வான்படையின் தாக்குதலில் வீரச்சாவடைந்தார்.
உண்மையில் அவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியற் பொறுப்பாளர். ஆனால் எங்களின் பிரதிநிதியாக உலக அரங்கில் செயற்பட்டவர் என்பதனால் அவர் எங்களில் ஒருவராய், ஒட்டுமொத்த தமிழினத்தின் பிரதிநிதியாக எங்கள் உணர்வுகளில் நிறைந்திருக்கிறார். இதன் தாற்பரியத்தை மற்றவர்கள் புரிந்து கொண்டார்களோ இல்லையோ, சிங்கள தேசம் நன்றாகப்புரிந்து கொண்டிதிருந்தது. அதானால்தான், அவர் மரணத்தையிட்டு மகிழ்ந்து ஆரவாரித்தது. இந்த மனிதாபிமானமற்ற செய்கைகள் மூலம் சிங்களம் தன்னை இனங்காட்டிக் கொண்டதுடன், உலகத்தமிழனத்தின் உணர்வுகளை உலுப்பிவிட்டுள்ளது. தமிழ்ச்செல்வன் என்ற தமிழர்களின் புதல்வன் தன் மரணத்தின் மூலமும் தன்னினத்தின் மனக்கதவுகளைத் தட்டிச்சென்றிருக்கிறான்.
ஈழப் புரட்சிகர அமைப்பு (ஈரோஸ்) அமைப்பின் தாபகரான திரு. இளையதம்பி இரத்தினசபாபதியை நினைவுகூருமாக மார்ச் 24ம் திகதி; “Sri Lanka at Ethnic Crossroad” எனும் தலைப்பில் மாநாடு ஒன்று நடாத்தப்பட்டது.
லண்டன் பல்கலைக்கழக மண்டபத்தில் நடைபெற்ற இம்மாநாடு காலையில் திரு. இரவிச்சந்திரா சுந்தரலிங்கத்தின் வரவேற்புரையுடன் ஆரம்பமானது.
Recent comments
5 weeks 3 days ago
5 weeks 3 days ago
5 weeks 4 days ago
6 weeks 1 day ago
6 weeks 1 day ago
6 weeks 6 days ago
7 weeks 2 days ago
7 weeks 6 days ago
8 weeks 6 days ago
8 weeks 6 days ago