திரை உலகம்

Brick Lane: லண்டனில் ஒரு வங்காளி நகரம்

by:
- தேவபுத்திரன்

Brick Laneபுலம்பெயர்ந்து ஆண்டுகள் பல கடந்து விட்டாலும், இந்த வாழ்க்கைக்கு நாங்கள் பழக்கப்பட்டு இங்கு காலூன்றிவிட்டது போன்று மற்றவர்களுக்குத் தெரிந்தாலும். உள்ளத்தில்; எங்கள் சொந்த ஊருக்கு திரும்பிப் போகவேண்டும் என்ற தவிப்பு இருக்கத்தான் செய்கிறது. அடுத்தவருடம் போவோம், தப்பினால் அதற்கு அடுத்தவருடம் போவோம் என்ற எதிர்பார்ப்புடன் ஆண்டுகள் பல கழிந்து விடுகிறது. ஒன்றில் பொருளாதாரம் இடம் கொடுக்காது அல்லது எமது தேசத்தின் நிலவரம் அதற்கு தோதாக அமையாது. இந்த அங்கலாய்ப்புடன், எதிர்பார்ப்புக்கள் நிறைவேறாமல் நரைப்பருவம் எய்திய பலரை நாம் சந்தித்திருக்கிறோம்.

குப்பி

by:
தேவபுத்திரன்

ஈழத்தமிழர் பற்றிய மற்றுமோர் திரைப்படத்தை கடந்தவார இறுதியில் லண்டனில் பார்க்கக் கிடைத்தது. இந்த திரைப்படத்தின் தலைப்பே தமிழ்போராளிகள் பற்றிய கதையென்பதை சொல்லி நிற்கிறது. இந்தியாவின் பிரதமராகவிருந்த ராஜிவ் காந்தியின் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் என கருதப்பட்ட சிவராசன், சுபா உடப்பட்ட ஈழத்தமிழர்களை இந்திய காவல்துறை தேடி வலைவிரித்ததையும் அவர்கள் மரணிப்பதற்கு முந்திய 21 நாட்களில் அவர்களது தலைமறைவு வாழ்க்கையில் நடைபெற்றதாகக் கருதப்படும் சம்பவங்களை ஒரு விவரணப்பாணியில் (Melodrama)
புடமாக்கப்பட்டுள்ளது.

ஆழப்பதிந்திருக்கிறது ஆணிவேர்

by:
தேவபுத்திரன்

ஈழத்தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு இரண்டு ஆதங்கங்கள் இருக்கின்றன. ஒன்று, நாற்பது வருடங்களுக்கு முன்னர் தோற்றம் பெற்ற நம்மவர் திரைப்படத்துறை சர்வதேச தரத்துக்கு இல்லாவிட்டாலும் சிங்கள திரைப்படங்களின் தரத்திலாவது ஒரு படத்தை தராதா? மற்றயது, வியட்நாம் போரை, கம்பூச்சிய உள்நாட்டு யுத்தத்தை, அங்கு மக்கள் பட்ட அவலங்களை திரைப்படங்கள் மூலம் வெளியுலகுக்கு தெரியப்படுத்தியது போல் கலைப்படைப்புக்களின் வாயிலாக எம்மக்களின் துயரங்களை உலகமக்கள் அறிந்து கொள்ள வாய்ப்புக் கிட்டாதா?

ரஜினி அங்க்கிள்! நாங்க இங்க இருக்கோம்...!"

by:
இளவஞ்சி

Rajini

"எங்க ரஜினி ஒரே நேரத்துல 5 பேர ஒரே கைல அடிச்சிடுவாரு!"

"போடா! எங்க கமலு 20 பேர ஒரே ஒதைல சாகடிச்சுடுவாரு!"

"போடா புழுகு! எங்க ரஜினி ஒரு ஒதை உட்டாருன்னா ஒரு செவுரே இடிஞ்சி உழுந்துடும்.."

"அய்ங்க்க்... எங்க கமலு கையவச்சி ஒரு தள்ளு தள்ளுனா இந்த பில்டிங்கே தூள் தூள் ஆகிடும்!"

எதிர்நீச்சல்

இம்மாதம் 3ம் திகதிவரை நடைபெற்று வந்த 48வது லண்டன் திரைப்படவிழாவில் காண்பிக்கப்பட்ட ஒரு சிஙகளத் திரைப்படம் “உடுகன் யாமய” (Against the Tide) அல்லது “எதிர்நீச்சல்” எனத் தமிழில் அர்த்தம் கொள்ளலாம்.

1989 ம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற ஜே.வி.பியின் வன்முறை நடவடிக்கை களுக்கும், அவற்றுக்கு எதிராக சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்ட அரச பயங்கரவாதத்துக்கும் இடையில் சிக்கி, சாகடிக்கப்பட்ட அல்லது காணமற்போன அறுபது ஆயிரம் சிங்கள இளைஞர்களையும், அதனால் ஏற்பட்ட மனித அவலங்களையும் மையப்படுத்தி இந்தக்கதை சொல்லப்படுகிறது.





 











Syndicate content