லண்டன் நிகழ்வுகள்

காலக்கரைதலைப் பதிவாக்கும் ஊடகத்தாரின் ஒன்று கூடல்

by:
இதயச்சந்திரன்

சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்த மாநாடு, கடந்த சனிக்கிழமை ஏப்ரல் 26ஆம் திகதி இலண்டனில் நடாத்தப்பட்டது.

ரேச்சல் கோகன்

சம்பிரதாய பூர்வ மங்கள விளக்கேற்றலுடன், உயிர்நீத்த ஊடகவியலாளர்கள் மற்றும் கொல்லப்பட்ட மக்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.

இம்மாநாட்டினை ஓழுங்கமைத்த ~ஒரு பேப்பர்| ஆசிரியரும், ஒன்றியத்தின் பிரதிநிதியுமான திரு. கோபி இரத்தினத்தின் வரவேற்புரையினை அடுத்து திரு. ஐவன் பேதுருபிள்ளையின் தலைமையில் முதல் அமர்வு தொடங்கியது.

உலகின் பலபாகங்களிலுமிருந்து ஊடகவியலாளர்கள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தாலும், தாயக விடுதலைக்காகத் தமது பங்களிப்பினை வழங்கிக் கொண்டிருக்கும் ஊடகவியலாளர் பலர் இம்மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.

சிறிலங்கா எயர்லைன்ஸ் விமான சேவையை புறக்கணியுங்கள்!

பிரித்தானிய தமிழர் அமைப்பு வேண்டுகோள்

போர்நிறுத்த ஒப்பந்த்திலிருந்து விலகி தமிழ்மக்களுக்கு எதிரான போரை தீவிரப்படுத்தியிருக்கும் சிறிலங்கா அரசுக்கு வருமானத்தை பெற்றுக்கொடுக்கும் சிறிலங்கா எயர்லைன்ஸ் விமானங்களில பயணிப்பதை தவிர்க்கவேண்டுமென பிரித்தானிய தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக கடந்த செவ்வாய் (15 ஐனவரி) தைப்பொங்கல் தினத்தன்று மதியம் மத்திய லண்டனில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றினை நடாத்திய இவ்வமைப்பு தனது இந்த வேண்டுகோளை பிரித்தானிய மக்களிடம் தெரிவிக்குமாறு அங்கு திரண்டிருந்த ஊடகவியலாளர்களைக் கேட்டுக் கொண்டது.

சிங்கள அரசும் சிங்கள மக்களும் வேறு வேறானவர்கள் அல்ல

இறுதி வணக்க நிகழ்வில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உரை


பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களுக்கும் அவருடன் வீரசாவடைந்த லெப்ரினன்ற் கேணல் அன்புமணி (அலெக்ஸ்), மேஜர் மிகுதன், மேஜர் நேதாஜி. லெப்ரினன்ற் ஆட்சிவேல். லெப்ரினன்ற் மாவைக்குமரன் ஆகிய ஆறு மாவீரர்களுக்கும் இறுதி வணக்கம் நிகழ்ச்சி ஒன்று நொவெம்பர்  5ம் திகதி லண்டனின் புறநகர்ப்பகுதியான
ஹரோவில் கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்து. ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு மாவீரர்களது உருவப்படத்திற்கு மலர்தூவி தமது இறுதி வணக்கத்தை செலுத்தினர்.

வித்தியாசமான அரங்கேற்றம் ..

by:
கூத்தபிரான்

Maanasi Balendra's vocal Arangettram

செப்ரெம்பர் 22ம்திகதி பெக் தியேட்டரில் நிகழ்ந்த கர்நாடக இசை அரங்கேற்றம் பற்றி எழுத முனைகிறேன். நான் தொழில் முறை கலைத்திறனாய்வாளன் அல்ல, மிக பாமரத்தனமான கலை ஆர்வலன். எனவே ‘சுப்புடு’ க்களைப்போல சுற்றி வளைத்து பிய்த்துக் குதற முடியாது. நான் கண்டு உணர்ந்ததை அப்படியே கூறி விடுகிறேன்.

கலையரசு சொர்ணலிங்கம் விருது வழங்கும் விழா

க.பாலேந்திரா ஆனந்தராணி பாலேந்திரா
ஈழவர் திரைக் கலை மன்றம் ஒழுங்கு செய்திருந்த கலையரசு கே சொர்ணலிங்கம் விருது வழங்கும் விழாவும் புகலிடக் கலைஞர்களின் குறும்பட இறுவெட்டுகளின்  வெளியீடும்
யூலை 29 ஞாயிற்றுக்கிழமை பிறென்ற் நகரமண்டபத்தில் நடைபெற்றது. நாடக ஆசான் திரு ஏ சீ தாசீசியஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ் விழா திருமதி அன்னா ஜோசேப், திருமதி மதி பாலச்சந்திரன் ஆகியோர் மங்கல விளக்கேற்ற அக வணக்கத்துடன் ஆரம்பமாகியது





 











Syndicate content