தமிழ்

“சொந்தக்கருத்தும் பொய்யும் சேர்த்து குழப்பியடிக்கப்படுகிறது”

தமிழ்ச் செய்தியாளர் மாநாடு பற்றிய பதிவுகள் பற்றி  கவிஞர் உ.சேரன் 

சர்வதேச தமிழ்ச் செய்தியாளர் ஒன்றியத்தின் லண்டன் மாநாட்டில் கலந்துகொள்ள வாய்ப்புக் கிடைத்தமை ஒரு நல்ல அனுபவம். அந்த மாநாட்டில் இடம்பெற்ற என்னுடைய உரையின் பதிவை நீங்கள் வெளியிட்டமைக்கு நன்றி ("ஊடகவியலாளர் அவசியமான பேய்கள்!", த.ஜெயபாலன், ஒரு பேப்பர் மே 9-மே 22). ஆங்கிலத்தில் இருந்த எனது உரையின் தமிழ்ப் பதிவு பெருமளவுக்குச் சரியாக இருந்தாலும் பின்வரும் விடயங்களில் வழு ஏற்பட்டுள்ளது.

1. ஊடகவியல் என்பது தொழில் துறைசார்ந்த பொறுப்பு மட்டுமல்ல, அறம் சார்ந்த பொறுப்பும் (Ethical commitment/project) ஆகும் என்பதே நான் கூற விழைந்தது. Ethical என்பதை விழுமியங்களுக்கான பொறுப்பு என்று மொழி பெயர்ப்ப‌து பொருத்த‌மான‌தல்ல.

பால்ராஜ் அமரனுக்கு

by:
வ.ஐ.ச.ஜெயபாலன்

அமரா
நீ மீட்ட ஆனையிறவு கண்ட
செங்கால் நாரைகள் போல்
வன்னியெங்கும்
தாயின் மணிக்கொடிகள் பதிகின்றனவே.
என் கவிதையிலே நீ இருக்க
ஈழம் கதறியளும் நியாய மென்ன.

நீயோ முடங்கிய காலில்
மூண்டெரிந்த விடுதலைத் தீ.
தீவெட்டியாய் உன்னைச்
சுமந்து சென்ற தோழருக்கு
'இத்தாவில்' பகையிருட்டில்
வெற்றியின் பாதை விளங்க வைத்த மாவீரா.
உன்னை எழுதாமல் இந்தத் தமிழ் எதற்க்கு.
களம் களமாய்த் தோழர் உன்னைச் சுமந்ததுபோல்
காலங்கள் ஊடே
என் கவிதை இனிச் சுமக்கட்டும்

அவனை ஆழப் புதைக்காதீர்
ஆலயங்கள் கட்டாதீர்.
நாழை மணலாற்றை மீட்டு
வாழ திரும்புகையில் நம் சனங்கள்
மசிரை விட்டுதுகள் தம்
மனம் நிறைந்த நாயகனை.

மணலாற்று அகதிகளின் புதையல்
ஆழப் புதைக்காதீர்.

சண்டியர்கள்

by:
சாத்திரி

அண்மையில் முகத்தார்ஜேசுரட்ணம் அவர்களின் ஒலிநாடா வடிவில் இருந்த சில நாடகங்களை இறுவட்டாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தேன்.அப்பொழுது�

கருத்துச் சுதந்திரம் என்பது எதுவரை?

by:
தேவபுத்திரன்

படைப்பாளிகளின் கருத்துச்சுதந்திரத்தில் யாரும் தலையீடு செய்யக்கூடாது என ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. படைப்பாளிகள் மற்றவர்களது மனஉணர்வுகளை பாதிக்குபடி படைப்புக்களை ஆக்கினால் அவற்றினை வெளியிட அனுமதிக்கக் கூடாது என்று இன்னொரு வாதமும் முன்வைக்கப்படுகிறது. இவை இரண்டுமே ஒன்றுக்கொன்று முரண்பாடானதாக அமைந்துவிடுகிறபோது, விமர்சகர்கள் அந்தச் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு தமக்கு தோதான ஒன்றை தேர்ந்தெடுக்கிறார்கள்.

மாவட்ட நீதிபதியாக தமிழர்

குகதாசன் தம்பிப்பிள்ளைஈழத்தவரான திரு. குகதாசன் தம்பிப்பிள்ளை டென்மார்க்கில் மாவட்டநீதிமன்ற நீதிபதிகள் குழுவிற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார். டென்மார்க்கிலுள்ள இரண்டு மாவட்ட நீதிமன்றங்களில் ஒன்றான மேற்குமாவட்ட நீதிமன்றத்திற்கு ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

டென்மார்க்கில் பத்திரிகையாளராகவும் கணணிதொழில்நுட்பவியலாளருமாக பணியாற்றி வரும் இவர் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் செயலாளராகவும் தமது பணியை செய்து வருகின்றார். டென்மார்க் ஊடகவியலாளர் சங்கத்திலும் பெல்யியத்திலுள்ள சர்வதேச ஊடகவியலாளார் சம்மேளனத்திலும் உறுப்பினராக உள்ளார்.

நோர்வேயில் சிறப்பிடம் பெறும் இராஜன்

இராஜன் செல்லையாநோர்வே நாட்டில் தொழில் பெற்று தத்தமது துறைகளில் முன்னணி வகிக்கும் பத்து வெளிநாட்டவர்களில் ஒருவராக ஈழத்தவரான திரு. இராஜன் செல்லையா தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.

நோர்வேயில், வேலைவாய்ப்பு பெறுவதில் வெளிநாட்டவர்கள் எதிர்நோக்கும் தடைகளை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஆய்வுக்குழுவினரே தொழில்துறையில் தடம்பதித்துள்ள 10 வெளிநாட்டவர்களை வருடாவருடம் தெரிந்து விருது வழங்கி வருகிறார்கள். இவ்விதமான சிறப்பிப்பு மூலம், இவர்களினை முன்மாதிரியாகக்கொள்வதன் மூலம் மற்றய வெளிநாட்டவர்களை ஊக்குவிக்க முடியும் எனக்கருதும் இக்குழு 2007ம் ஆண்டுகான விருதினை பெறும் பத்துப் பேரில் ஒருவராக ஊடகவியலாளர் இராஜனை தெரிவு செய்துள்ளது.

சீட்டு சிவலிங்கம் சிவப்புச் சிவலிங்கமாகிய கதை

by:
அமுதன்

கடந்த வாரம் இலங்கை அரசாங்கத்துக்கு ஆலவட்டம் பிடிக்கும் எஸ்.எல்.டி.எப் என்ற கும்பல் லண்டனில் நடாத்திய ஓர் கூட்டத்திற்கு சென்றிருந்தேன். அங்கு
சிவலிங்கம் என்பவர் சிறப்புரையாற்றினார். இவர் (வயசு) மூத்த இடதுசாரி அரசியல்வாதி, அரசியல் ஆய்வாளர், என்றெல்லாம் சிலரால் வர்ணிக்கப்படுபவர். அங்கு திரண்டிருந்த விரல் விட்டு எண்ணக்கூடிய சனத்திரளில் எல்லோரும் கொட்டாவி விட்டுக்கொண்டு இருக்க நான் மூக்கில் விரலை வைக்காத குறையாய் அவரை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.

மலேசியா:எழுச்சிபெறும் தமிழர்கள்

உலகெங்கிலும் அடக்கி ஒடுக்கப்பட்ட சிறுபான்மை இனங்கள் எழுச்சி பெற்று தங்கள் உரிமைகளுக்காக போராடும் இக்காலத்தில் மலேசியா வாழ் தமிழர்களும் தமது உரிமையை வேண்டி வீதிக்கு இறங்கியிருக்கிறார்கள். அண்மையில் சுமார் ஐம்பதாயிரம் பேர் கலந்து கொண்ட அவர்களது அமைதி ஊர்வலமொன்று முன் அனுமதி பெறவில்லை (உண்மையில் மலேசிய அரசு அனுமதி வழங்கவில்லை) எனக்காரணங்காட்டி மலேசியக் காவற்துறையால் மூர்க்கதனமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இவ்வார்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களை ஊடகங்கள் இந்தியர்கள் என அடையாளங்காட்டினாலும். இவர்களில் பெரும் பகுதியினர் இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள்.

சலுசலா விளம்பரம் போகுதடா டோய்!

by:
சிறி

தீபாவளியை தீவாளி என்றுதான் பேச்சு வழக்கில் ஊரில் சொல்லுவோம்.

வருசா வருசம் தீபாவளி வரும்போதெல்லாம் இப்பொழுது தீபாவளி தமிழருடையதா? தீபாவளியை  கொண்டாடலாமா? கூடாதா??என்று சர்ச்சைகளும் கட்டுரைகளும் வெளிவர ஆரம்பிக்கும்.

தீபாவளி ஏன் கொண்டாட வேணும் எண்டு எப்பவோ யாரோ சொல்லிவிட்டு போன நரகாசுரன் கதையிலை கொலைசெய்யப்பட்ட நரகாசுரனுக்கு   வாழ்த்து சொல்லுற அளவுக்கு இப்ப நிலைமை வந்திட்டிது.  ஏன் எதுக்கு எண்டு சரியான விபரம் தெரியாமலேயோ தமிழர் கொண்டாடுற பல பெருநாளிலை இதுவும் ஒண்டு. அதையெல்லாம் ஒரு கரையிலை வைச்சிட்டு  ஊரிலை சின்னிலை கொண்டாடின என்ரை சில தீபாவளி நினைவுகளை உங்களோடை பகிர்ந்து கொள்ளுறன்.

ஆரிந்த இராசசிங்கம்?

by:
பல்லப்பை ஜெயா

கருணா, பிள்ளையான் குழுக்களிடையே மோதல். இலண்டனில் கருணா கைது போன்ற செய்திகளில் இப்போது ஊடகங்களில் அடிபடும்  ஒரு பெயர் கே.ரீ. இராசசிங்கம். யார் இவர், திடிரென இந்தாள் எங்கை இதுக்கிள்ளை வந்திச்சு என்ற திகைத்துப் போயிருக்கிறீர்கள் என்றால் மேற்கொண்டு படியுங்கள். நான் ஏதோ சேர்.பொன்னம்பலம் இராமநாதன், எஸ்.ஜே.வி. செல்வநாயகம் ரேஞ்சில இருக்கிற ஆளைப் பற்றி சொல்லப்போறன் என்று எதிர்பார்க்கிற ஆக்களை ஏமாற்றாமல், முதலிலேயே சொல்லி விடுகிறேன் இந்த ஆள் ஒரு திருகுதாளக்காரன்.

லா சப்பலில் லைலா

17 07 07

வணக்கம் எல்லாருக்கும்

ஒரு பேப்பர் நாலாவது ஆண்டிலை அடியெடுத்து வைக்கிறது அதற்கான பாராட்டு   திட்டு வசைபாடல் வாழ்த்து என்று சும்மா கலகலப்பா போய்க்கொண்டிருக்கு. அதற்கு இந்த லைலாவின் வாழ்த்துக்களும் லாசப்பலில் நின்றபடி  சொல்லுறன்.

ஒரு பேப்பர் பாரீஸ் மற்றும் அதை அண்டிய புற நகர் பகுதிகளிற்கு மட்டுமே கிடைப்பதாகவும் மற்றும் தமிழர்கள் அதிகமாக வாழுகின்ற மற்றை நகரங்களிற்கு கிடைப்பதிலை என்று பலர் குறை பட்டு கொள்கினம்.

இணைய வசதி உள்ளவை இணையத்தில் படிக்கலாம் மற்றவவை நீங்களா ஏதாவது வழி பண்ணினால் அனுப்பி வைக்கலாம்.

அடுத்ததாக பாரிசிலை வெத்திலை பெட்டிகளின் கூட்டம் அண்மையில் நடை பெற்றது. அது என்ன வெத்திலை பெட்டிகளின் கூட்டமா என்று யேசிக்கிறீங்களா.

வழி தெரியாது திணறும் சிறிலங்காப் படைகள்!

  சிறிலங்காப் படைகளின் நிலை தற்பொழுது பெரும் கேள்விக்குறியாக மாறி உள்ளது. விடுதலைப் புலிகளுக்கு பாதகமான பகுதிகள் என்று கருதுகின்ற பகுதிகளில் மட்டும் தாக்குதல் நடத்தி வந்த சிறிலங்காப் படைகள் அடுத்த கட்டத்திற்கு நகரமுடியாமல் நிற்கின்றன.

  கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதத் தொடக்கத்தில் கிழக்கில் சம்பூரை சிறிலங்காப் படைகள் கைப்பற்றிய பிறகு வடக்கிலும் ஒரு வெற்றியை பெற நினைத்தன. ஒக்ரோபர் மாத ஆரம்பத்தில் முகமாலையி, கிளாலி படைத் தளங்களில் இருந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கி முன்னேறின. ஆனையிறவைக் கைப்பற்றி விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஒரு பெரும் வெற்றியை பெறுவது சிறிலங்கா அரசின் நோக்கமாக இருந்தது.

யேசுதாஸ் ஏன் அழுதார்….

by:
- குலோத்துங்கன்

 “நா ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்
நாலும் தெரிஞ்ச ரூட்டுக்காரன் நல்லா பாடும் பாட்டுக்காரன்” எஸ்.பி.பி சும்மா சக்கை போடு போட்டுக்கொண்டிருந்தார்.பாட்சா படம் வந்தபோது நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அப்போது இதுதான் மிகவும் பிரபலமான பாடல் எனக்கு பிடித்த பாடலும் கூட.நான் படத்தை பிறகு நான்கைந்து வருடம் கழித்து தான் பார்க்கமுடிந்தது.





 











Syndicate content