நிகழ்வுகள்

மலர் தூவ வாருங்கள் ….

by:
மணிவாசகன்

நவம்பர் 27
தமிழ் மண் விடுதலையடைய வேண்டும்,தமிழ் மக்கள் அமைதியுடனும் சந்தோசத்துடனும் வாழ வேண்டும் என்பதற்காக தங்கள் எதிர்காலத்தை விருப்பு வெறுப்புகளை சொந்த பந்தங்களை எல்லாம் துறந்து உறுதியுடன் போராடி தங்கள் உயிர்களைத் தந்த மாவீரர்களை நினைவுகூருகின்ற நாள்.

தியாகம் என்ற சொல்லின் எல்லை எது என்ற கேள்விக்கு உதாரணம் காட்டக் கூடிய வகையில் வாழ்ந்து தமிழ் மண்ணின் விடிவிற்காய் தம் வாழ்வை முடித்துக் கொண்ட தியாக சீலர்களுக்கான நாள்
மாவீரர் தியாகம் இலகுவில் மறக்கப் படக் கூடியதா?

இளமைக் காலத்துக்கே உரிய குறும்புகள், குழப்படிகள், சீண்டல்கள் இவை எல்லாவற்றையும் புறம் தள்ளி, இன்னும் சரியாகச் சொல்வதானால் தங்களைத் தாங்களே ஒறுத்து கட்டுக் கோப்பாக வாழ்ந்து வியக்கத்தக்க வீர சாகசங்களைச் செய்த விற்பன்னர்கள்.

லண்டன் தமிழ் நிலையத்தின் கலாச்சாரமாலை

by:
ப. வை. ஜெயபாலன்

தரமான கலாச்சார மாலைக்கு லண்டண் தமிழ் நிலையப் பள்ளி என்பது பொதுவான எதிர்பார்ப்பு. ஈஸ்ரர் விடுமுறை நிறைவின் லோகன் மண்டப நிகழ்வு இது என்பதும் வருடாந்த வழமை. இம் முறையும் சென்ற 21ம் நாள் நாலரை மணி நேர நிகழ்வாக இது அமைந்தது. பிரதம விருந்தினர் பந்தாக்கள் இல்லை. ஆசிரியைகள் குத்து விளக்கேற்ற நிகழ்ச்சிகள் ஆரம்பம். பல்லின வாத்திய இசை  ஐந்து நடனங்கள் பாஞ்சாலி சபதம் நாட்டிய நாடகம் என்பன உள்ளடக்கம். 170 மாணவர்கள் நிகழ்வுகளை நிறைத்தனர். ஆரம்பதர மாணவர்களுக்கு வேறு விழாவில் இடம் தந்து ஏனையோரை இதில் இணைத்ததும் சிறப்பு.

நடனங்கள்  நாட்டிய நாடகம் உட்பட ஐந்து நடன ஆசிரியைகளதும் கூட்டுமுயற்சி என்பதும் சங்கீத வாத்திய  ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் உச்சம் என்பதும் நிகழ்வுகளின் உயிரோட்டத்தில் தெளிவானது.

ஹரோவில் ஒன்றுகூடிய மூத்த தமிழர்கள்

சித்திரைப் புத்தாண்டை ஒட்டிய நிகழ்வாக மே ஐந்தாம் திகதி ஹரோ தமிழ் மூத்தோர் நிலையத்தினர் ஒனறு கூடிக் குதூகலித்தனர்.

ஹரோ எல்ம்பீல்ட் தேவாலய மண்டபத்தில் கச்சிதமாக ஒழுங்கு செய்யப்பட்டிருநந்த இந்த நிகழ்வில் இப்பகுதியில் பரீட்சயமான பல முகங்களை பார்க்க முடிந்தது.

ஹரோ மாநகராhட்சி சபை உறுப்பினர்களான திருமதி. அஞ்சனா பட்டேல், திருமதி. சசிகலா சுரேஸ், திரு. தயா இடைக்காடர் உட்பட பொதுச்சேவையில் பணியாற்றும் பலர் .இந்நிகழ்வில் உற்சாகமாகக் கலந்து கொண்டிருந்தனர். தொழிலதிபர் திரு. பஞ்சலிங்கமும் அவரது துணைவியாரும் முதன்மை விருந்திராக அழைக்கப்பட்டிருந்தனர். முதியோர் நலன் பேணும் நிலையங்களை நடாத்திவரும் இவர் இந்த நிகழ்வின் சீட்டிழுப்பிற்க்கான பரிசுப்பொருட்களை அன்பளிப்பாக வழங்கியிருந்தார்.





 











Syndicate content