ஏயார் பஸ் நிறுவனத்தின்
தயாரிப்பான இரண்டு விமானங்கள் கடந்த மாதம் விபத்துக்குள்ளானது பற்றிய
செய்திகள் உலகமக்கள் அனைவரும் அறிந்ததே..அதனால்தான் எமதர்மன் இப்பொழுது
ஏயார்பஸ் நிறுவன விமானங்களில் வருகின்றாரா என்கிற பயம் விமானப்பயணிகள்
மத்தியில் எழுந்துள்ளது.. முதலாவதாக பிறேசிலின் றியோ நகரத்திலிருந்து
பாரீஸ் நோக்கி வந்த ஏயார் பிரான்சிற்கு சொந்தமான விமானம் அத்திலாந்திக்
சமூத்திரப் பகுதியில் காணமல் போனதாக அறிவிக்கப்பட்டு பின்னர் அது
விபத்திற்குள்ளாகி அதில் பயணம் செய்த 228 பயணிகளுமே இறந்துவிட்டதாக
உறுதிப்படுத்தப்பட்டது. நடந்த விபத்து தொழில்நுட்பக்கோளாறா.அல்லது தீவிர
வாதிகளில் நாசவேலைகளா என்கிற இரண்டு கோணத்திலும் பிரெஞ்சு அரசு
விசாரணைகளை நடாத்தியது...விமானத்தில் பயணம் செய்த இரு பயணிகளின்
“தமிழர்களுக்கு எதிரானதாக ஏன் கருதுகிறீர்கள்? அது வணிகரீதியானதாக கூட இருக்கலாமே”.
இலங்கை அரசுக்கு இந்திய அரசு வழங்கும் ஆயுத மற்றும் கடன் உதவிகள் பற்றி நடிகர் விஜயகாந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது. “புரட்சிக்கலைஞர்" வழங்கிய பதிலிது.
இத்தோடு நிற்காமல். “வருங்கால தமிழக முதல்வர்” புவிசார் அரசியல் (Geo politics) தொடர்பான தனது “மேதமையை” மேலும் வெளிப்படுத்தினார். அதாவது சீனா, பாக்கிஸ்தான் போன்ற நாடுகள் இலங்கையுடன் ஒட்டி உறவாடுவதைத் தடுக்கவே இவ்வாறான உதவிகள் வழங்கப்படுகின்றனவாம்! இச்செய்தியை பி.பி.சி. நிறுவனம் தனது தமிழ், சிங்கள சேவைகளில் குருரமான புளங்காகிதத்துடன் “போட்டுத் தாக்கியிருக்கின்றது”.
இவ்வார கல்கியின் ஆசிரியர் தலையங்கம் 'விடுதலைப் புலிகளின் கொடிய சாதனை" என்ன சொல்லியிருக்கிறது ? விடுதலைப்புலிகள் குறித்த அமெரிக்க எவ்.பீ.ஐயின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு கல்கியும் தனது பங்குக்கு ஏதோ கலக்கியிருக்கிறது. வளமையாக பல இந்திய ஊடகங்களின் மிகைப்படுத்தப்படும் பரபரப்புச் செய்திகளும் பொய்களையே பரப்புரைக்கும் பண்பையும் கல்கி மீண்டும் ஒருதரம் நிறுவியுள்ளது.
இலக்கியத்தை நேசிப்பவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட 'இலக்கியச் சந்திப்பு" அரசியல் கறள் தட்டும் சந்திப்பாகவும் ஆளையாள் குத்தும் சந்திப்பாகவும் ஆனதெப்படி ? இந்தச்சந்திப்புப்பற்றி எழுது முதல் ஒன்றை சொல்லிவிடுகிறேன். இந்த இலக்கியச் சந்திப்பில் நான் ஒரு நாளும் தலைவைச்சும் படுக்கேல்ல. இப்பத்தியை படிக்க நேரும் இலக்கியம் இல்லை அரசியல் கறள்தட்டும் ஆர்வலர்கள் அறுவைகள் விசித்திரங்கள் லச்சுமிகளுக்கெல்லாம் எழும் கேள்விக்கு முதலிலே பதிலை தருவது பொருத்தமாகும் என்பதால் சொல்லியாயிற்று.
'வழி" தமிழீழப் பெண்கள் 13பேரின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பாக 2005 ஆவணி வெளியாகியது. இச் சிறுகதைத் தொகுப்பானது 2006 ஏப்ரல் மீள் வெளியீடாகவும் வந்திருக்கிறது. ஏற்கனவே தமிழீழப் பெண்களின் படைப்பாற்றலை வெளிக்கொணரும் 'கப்டன் வானதி வெளியீட்டகத்தினரின் 7வது வெளியீடாக வழி சிறுகதைத் தொகுதி தமிழீழப்பெண் எழுத்தாளர்களினால் மீளவும் ஒரு காத்திரம் மிக்க கனத்தைப் பதிந்துள்ளது. இத்தொகுப்பானது எழுத்தாளர் அமரர் சந்திரா அற்புதலிங்கம் அவர்களுக்குக் காணிக்கையாக சந்திரா அற்புதலிங்கம் அவர்களின் சிறுகதையான வழி சிறுகதையே இந்நூலின் பெயராகவும் ஆகியுள்ளது.
24.11.07 மதியப்பொழுதில் கேட்டகதறல் ஒலி இன்னும் காதுகளில் ஒலித்தபடியேஇருக்கிறது. புலத்தில் வெள்ளையர்களின் சாவு நிகழ்வுகள், தமிழரின் சாவு நிகழ்வுகள் எனஅவ்வப்போது கலந்து கொண்ட சமயங்களில் ஏற்படாத துயரும் தாக்கமும் 24.11.07 அன்றுயேர்மனிய நகரம் ஒன்றில் நடந்த சாவுநிகழ்வில் ஏற்பட்டது.
45வயதில் தனது வாழ்வை முடித்துக் கொண்டஒரு கணவனின் சாவின் பின் தனது வாழ்வை நினைத்து அந்தரித்துக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்த அநீதியே இப்பத்தியில் பதிவாகிறது.
'சட்டக்குறி' (அல்லது பட்டைக் குறி) என்பது தொழில்நுட்பத்தின் ஒரு
பிரதிபலிப்பாக எமது அன்றாட வாழ்வில் இன்று பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
கடைகளில் உள்ள பொருட்களின் பொதியில் உள்ள சட்டக் குறியை கருவி கொண்டு
வாசிக்கும் பொழுது அதன் விலையும் பொருளின் சுருக்கமான பெயரும் கருவியின்
திரையில் விழுவதை காண்கிறோம். அதேபோல் ஆவணங்களில், பயணச் சீட்டுகளில்,
பயணப்பொதிகளில் என்று இவற்றின் பயன்பாட்டுத்தளம் விரிவடைகிறது.
இன்றைக்கு அரசியலில் கொள்கைகளை மாற்றிக் கொள்வது என்பது ஒரு சாதரண விடயம். மக்களின் ஆதரவை பெறுவதற்காகவும் தக்கவைப்பதற்காகவும் கொள்கையை மட்டும்தான் அரசியல்வாதிகள் மாற்றுவர்கள் என்று அல்ல. மதத்தை மாற்றிய தலைவர்கள் இருக்கிறார்கள். பெயரை மாற்றிய தலைவர்கள் இருக்கிறார்கள். இனத்தை மாற்றிய தலைவர்கள் இருக்கிறார்கள்.
வெளிச்சத்துக்கு வந்துள்ள அமெரிக்க உளவுத்துறை விவகாரங்கள்
மற்றய நாடுகளில் மனிதவுரிமை விவகாரமாகட்டும் .. ஒடுக்கப்படட மக்களின் விடுதலைக்காகப் போராடும் விடுதலை இயக்கங்களாகட்டும். இவர்களுக்கெல்லாம் சட்டாம்பிள்ளையாக தன்னை காட்டிக்கொள்ளும் “சனநாயகத்தின் காவலன்”அமெரிக்காவின் உளவுத்துறையின் வண்டவாளங்களை அவர்களாகவே வெளியீட்டுள்ளார்கள். கடந்த ஜூன் 26ம் தேதி ‘அதிகாரபூர்வமாக இந்த திருகுதாளங்கள் அடங்கிய ஆவணத்தை வெளியிட்டு வைத்தவர் வேறு யாருமல்ல சீஐஏ இன் இப்போதைய தலைவர் மைக்கேல் வி. ஹேடன்.
1950 முதல் 1970 வரை சி.ஐ.ஏ. ஆல் நடாத்தப்பட்ட அராஜகங்களை ‘தணிக்கை' செய்யப்பட்ட 702 பக்க அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. (தணிக்கை செய்யப்படாமலிருந்தால் என்ன என்னவெல்லாமோ வெளிவந்திருக்கும்.)
வாழ்க்கையில் சாதிக்கவேண்டும் என்ற ஆசை எல்லாருக்குமே இருக்கிறது. ஆனால் அந்த ஆசை எல்லாருக்கும் நிறைவேறுவது இல்லை. அதுவும் நம் பெண்களில் அதிக பேருக்கு அது நிராசை ஆகிவிடுகிறது.
சிறு வயதிலிருந்தே படி படி என்று பெற்றவர்கள் தொல்லை தாங்க முடியாமல் விழுந்து விழுந்து படிக்கிறார்கள் நம் பெண்கள். அதோடு மட்டுமல்லாமல் நான் பெரிய கம்ப்யூட்டர் என்ஜினியர் ஆக வேண்டும் டாக்டர் ஆக வேண்டும் டீச்சர் ஆக வேண்டும் என்று லட்சியத்தோடு இருக்கும் இவர்கள் ஏன் இவர்கள் லட்சியத்தை அடைவதில்லை? இதற்கு காரணம் இவர்களா? இவர்களை பெற்றவர்களா? இல்லை இவர்கள்ந கணவர்களா?
இன்று புலம் பெயர் நாடுகளில் பல ஊடகங்கள் மற்றும் பத்திரிகை வார மாத இதழ்கள் என்று பலவும் புலம்பெயர் தமிழர்களால் நடாத்தபடுகின்றது அதே போல இன்றைய தொழில் நு.ட்ப புரட்சியின் ஒரு உன்னத கண்டுபிடிப்பால் இன்று இணைய பத்திரிகைகளும் நாளுக்கு நாள் ஒவ்வொன்றாக அறிமுகமாகி கொண்டிருக்கின்றன ஒரு சில
வேண்டாத சம்பவங்களை தவிர்த்து பார்த்தால் புலத்து தமிழரின் இந்த முயற்சிகள்
பாராட்டபட வேண்டியவை.
பாராட்டுவோம். இவை இப்படியிருக்க இங்கு இந்த தமிழ் ஊடக மற்றும் எழுத்தளர்கள் ஒன்றியம்
என்று ஒண்டு உண்டு அதற்கு தலைவர்என்றும் ஒருவர் உள்ளார். இது எத்தனை
பேருக்கு தெரியும்? இப்படி ஒரு அமைப்பு இருப்பதாக ஒரு ஆறு மாதங்களிற்கு முன்னர் நான் கேள்விப்பட்டபோது உங்களை மாதிரித்தான் நானும் முழித்தேன்.
வண்ணத்தப்பூச்சி வயசென்ன ஆச்சி
உள்ளுரு முழுக்க உன்னைப்பத்தி பேச்சு”
இந்தப்பாடல் பிரபலமாயிருந்த காலம் அப்போதெல்லாம் சின்னக்கா இந்தப்பாட்டையே முணுமுணுத்துக்கொண்டிருப்பா இல்லாட்டி
“நானொரு சிந்து காவடிச்சிந்து”
இது இரண்டும் தான் அவாவுக்குப்பிடிச்ச பாட்டு இதைப்பாடிக்கொண்டே திரிவா நாங்களும் பின்னால திரிவோம்.
போதுமான பணம் இல்லை, மாமியார் கொடுமை, கல்யாணம் ஆகவில்லை, வேலை பிடிக்கவில்லை, என்னை யாருக்கும் பிடிக்கவில்லை, இப்படி நமக்கு அப்பாற்பட்ட ஏதாவதொரு காரணம் எங்களுடைய மகிழ்ச்சியைத் தடுத்துக் கொண்டிருக்கும். அதேபோல நமக்கு வெளியிலுள்ள ஏதேனும் ஒன்றில்தான் நமது மகிழ்ச்சி இருப்பதாக நினைப்போம்.
`மகிழ்ச்சி மனதில்தான் இருக்கிறது' என்று எத்தனையோ மகான்கள் எவ்வளவோ விதங்களில் சொன்னாலும் அவையெல்லாம் வெறும் தத்துவக் குப்பைகளாகவே நமக்குப்படுகின்றன. இந்த சிறிய பயிற்சியை செய்து பாருங்கள்:
முதலில் தற்போதைய மனநிலையில் உங்களுடைய மகிழ்ச்சியின் அளவீடு என்ன என்பதைக் குறித்துக் கொள்ளுங்கள் (ஒன்றிலிருந்து பத்துக்குள்). இப்போது கண்களை மூடி உங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணத்தை நினைவு கூறுங்கள்.
Recent comments
1 year 20 weeks ago
1 year 21 weeks ago
1 year 26 weeks ago
1 year 29 weeks ago
1 year 29 weeks ago
1 year 29 weeks ago
1 year 30 weeks ago
1 year 33 weeks ago
1 year 38 weeks ago
1 year 43 weeks ago