உலகமயமாக்கல் எனும் இந்தச் சொற்பதத்தை பிரான்சில் கல்வி கற்கும் போதுதான் முதன் முதலாக அறிந்து கொண்டேன். உலகமயமாக்கல் என்பது உலகில் உள்ள நாடுகள் அனைத்தையும் முன்னேற்றும் வழி என்றுதான் மேலை நாட்டுக் கல்வி போதித்தது. பின்னாளில் உலக மயமாக்கல் என்பதே உடல் நலத்துடன் உள்ள ஒரு விளையாட்டு வீரனுக்குப் போட்டியாக ஒரு ஊனமுற்றவனை ஓட வைக்க முயலும் அபத்தமான வழி என்பதுடன் உலகிலுள்ள தேசிய இன மக்களின் நலன்களையும் அவர்களின் மண் வளங்களை எந்த அளவிற்கு பாதிக்கின்றது என்பதையும் தெரிந்து கொண்டன்.
சில ஆண்டுகளுக்கு முன் பாரிஸ் நகரில் நடந்த கூட்டம் ஒன்றுக்குச் சென்றிருந்தேன். அடிக்கடி பாரிஸ் லாச்சப்பலில் சந்திக்கும் நண்பர் ஒருவரின் அன்பான அழைப்பை ஏற்று அங்கு சென்றிருந்தேன். அங்கிருந்த நம் தமிழ் உறவுகளுடன் உரையாடத் தொடங்கியபோது அவர்கள் அனைவரிடமும் ஒரு பொதுத் தன்மை இருந்ததைக் காணக் கூடயதாக இருந்தது. ஆம் அனைவருமே மார்க்சிய லெனினய தத்துவங்களில் ஊறித் திளைத்திருந்தார்கள்.
நம்மில் பலர் ஏதாவது நூலை படிக்கும் முன்பே அது தொடர்பான அதீத மயக்கத்தில் ஆழ்ந்திருப்பார்கள். அண்மையில் எனது நண்பர் ஒருவர் பகவத் கீதையைப் பற்றி என்னுடன் கதைத்துக் கொண்டிருந்தார். கீதை ஒரு தலை சிறந்த நூல் என்றும் அது போதிக்கும் தத்துவங்கள் மகத்தானவை என்றும் அவர் கூறிக் கொண்டிருந்தார். அவரிடம் ஐந்து நிமிடங்கள் பேசிய பின்தான் எனக்குத் தெரிந்தது கீதையானது போர்க்களத்தின் நடுவில் கண்ணனால் அருச்சுனனுக்கு சொல்லப் பட்டது என்ற ஒன்றைத் தவிர வேறு எதுவும் அவருக்கு தெரிந்திருக்கவில்லை என்று. அது மட்டுமல்ல எது நன்றாக நடந்ததோ அது நன்றாகவே நடக்கும் என்று தொடங்கும் கீதையின் அந்த வரிகள் இல்லாத ஈழத் தமிழர் வீடுகள் இருக்குமோ என நான் ஐயுறும் அளவிற்கு நான் சென்ற அத்தனை வீடுகளிலும் அந்த வரிகள் தொங்க விடப்பட்டுள்ளன.
Recent comments
5 weeks 3 days ago
5 weeks 3 days ago
5 weeks 4 days ago
6 weeks 1 day ago
6 weeks 1 day ago
6 weeks 6 days ago
7 weeks 2 days ago
7 weeks 6 days ago
8 weeks 6 days ago
8 weeks 6 days ago