சாத்திரி

சண்டியர்கள்

by:
சாத்திரி

அண்மையில் முகத்தார்ஜேசுரட்ணம் அவர்களின் ஒலிநாடா வடிவில் இருந்த சில நாடகங்களை இறுவட்டாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தேன்.அப்பொழுது�

சப்பறம் பாக்கலாம்

by:
சாத்திரி

கடந்த ஞாயிறன்று பாரிஸ் மாணிக்க பிள்ளையார் கோவில் தேரிற்கு சென்றிருந்த வேளை ஊர் நண்பனுடன் எங்கள் ஊர் பிள்ளையார் கோவில் திருவிழா ஞாபகங்களை நினைத்து பேசிய பொழுதுதான் வாழ் நாளில் எப்படி எங்கள் சில நகைச்சுவை அனுபவங்களை மறக்க முடியாதோ அது போலவே எங்களால் ஏதோ ஒரு சில காரணங்களிற்காக சில நகைச்சுவையான அல்லது வேடிக்கையான மனிதர்களையும் வாழ் நாளில் மறக்க முடியாது. அப்படியான ஒரு உறுவுக்காரர் எங்கள் ஊரில் இருந்தார்.கதைக்காக அவரிற்கு ராசா பெயர் வைக்கிறேன். ராசா நன்றாக படித்து புகையிரத ஓட்டுனராக வேலையும் செய்தார்.

த.ஈ.வே.வெ.வெ........

by:
சாத்திரி

என்னது ஏதோ குழந்தை பிள்ளைகள் கதைக்க தொடங்கிற காலத்திலை கதைச்ச மாதிரி இருக்கே எண்டு யோசிக்கிறீங்களா. கடந்த வார ஒரு பேப்பரில் பாலச்சந்திரன் அண்ணாவும் பா.வை.ஜெயபலனும் ஆடிமாதத்து நினைவுகளை கிழப்பிவிட்டு போய் விட்டார்கள். அதனால்தான் எனது இந்த ஆடிமாதத்து நினைவும். ஆனால் இது அம்மி பறந்த நினைவு அல்ல ஆனால் இது இலங்கையில் 83ம் ஆண்டு தமிழர் அடிவாங்கி பறந்தோடிய ஆண்டு நினைவு.

புலம்பெயர் எழுத்தாளர் மற்றும் ஊடகவியலாளர் ஒன்றியமா?? அது எங்கே இருக்கின்றது ?

இன்று புலம் பெயர் நாடுகளில் பல ஊடகங்கள் மற்றும் பத்திரிகை வார மாத இதழ்கள் என்று பலவும் புலம்பெயர் தமிழர்களால் நடாத்தபடுகின்றது அதே போல இன்றைய தொழில் நு.ட்ப புரட்சியின் ஒரு உன்னத கண்டுபிடிப்பால் இன்று இணைய பத்திரிகைகளும் நாளுக்கு நாள் ஒவ்வொன்றாக அறிமுகமாகி கொண்டிருக்கின்றன ஒரு சில
வேண்டாத சம்பவங்களை தவிர்த்து பார்த்தால் புலத்து தமிழரின் இந்த முயற்சிகள்
பாராட்டபட வேண்டியவை.

பாராட்டுவோம். இவை இப்படியிருக்க இங்கு இந்த தமிழ் ஊடக மற்றும் எழுத்தளர்கள் ஒன்றியம்
என்று ஒண்டு உண்டு அதற்கு தலைவர்என்றும் ஒருவர் உள்ளார். இது எத்தனை
பேருக்கு தெரியும்? இப்படி ஒரு அமைப்பு இருப்பதாக ஒரு ஆறு மாதங்களிற்கு முன்னர் நான் கேள்விப்பட்டபோது உங்களை மாதிரித்தான் நானும் முழித்தேன்.

படம் காட்டுறம் வாங்கோ

by:
சாத்திரி

இதுவும் 80களின்ரை ஆரம்ப காலகட்ட கதைதான் இந்த காலகட்டம்தான் தொலைகாட்சி பெட்டியும் இலங்கையிலை பரவலா அறிமுகமாக தொடங்கின கால கட்டம். அந்த கால கட்டத்திலை கோயில் திருவிழா. கலியாணவீடு .சாமத்தியவீடு எண்டு எல்லா மங்கல விழாவிலையும் ரிவியிலை விடிய விடிய அஞ்சு . ஆறு படம் ஓடுறகாலம்.ஆரம்பத்தில் இந்த ரிவி டெக் ஆகியவற்றை சில வீடியொ கடையளும் வாடைகைக்கு விடுவினம் அவையளிட்டை போய் சொன்னா சரி. ரிவி டெக் ஆகியவற்றை ஒரு வானில் கொண்டு வந்து இறக்கி படத்தை போட்டு செற்பண்ணி விட்டிட்டு படங்களை மாத்துறதுக்காகவே ஒருதர் விடிய விடிய காவல் நிப்பார்.

MSN இல் சாத்திரியும் சோழியனும் ...

யெர்மனியில் வசிக்கும் எழுத்தாளர் நாடகநடிகர் வில்லிசை கலைஞர் இப்படி பல கலைத்துறையிலும் காலடி பதித்திருக்கும் சோழியன் என்கிற ராஜன் முருகவேல் அவர்களுடன் எம்.எஸ்.என். மெசஞ்சரில் நடந்த ஒரு உரையாடல் அதனை பதிந்துஉங்களிற்கும்போட்டிருக்கிறேன்.

சாத்திரி. வணக்கமண்ணோய் எப்பிடி சுகம்

சோழியன். வணக்கம் நல்ல சுகம் `ஹம் அம்மன் கோயில் தேருக்கு போயிருந்தன் அங்கை உந்த ஒரு பேப்பர் மற்றது ஒரு றேடியொ காரரும் வந்திருந்தவை

சாத்திரி. ஓமண்ணை கேள்விப்பட்டனான் அவங்கள் இப்பிடித்தான் எங்கையாவது அன்னதானம் சக்கரை தண்ணி ஊத்தினம் எண்டு கேள்விப்பட்டால் எத்தினையாயிரம் கிலோ மீற்றர் எண்டாலும் பிளைற் பிடிச்சு போடுவாங்கள் ஊர்ப்பழக்கம் திருத்த ஏலாது.





 











Syndicate content