மழையில் நனைந்த நிலமும் மாரியில் கரைந்த புழுதியுமாக அந்தநாள். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ஒவ்வொருவரையும் விசாரித்தபடி பூசனியக்கா போனதும் , அதன் பின் அவரது வீட்டிலிருந்து கேட்ட அழுகையும் அதன் பின்னால் நடந்த பூசனியக்காவின் சாவும் அந்தச் சிறுவயதில் அழுவதைத்தவிர வேறெதையும் செய்யத் தெரியவில்லை. நஞ்சருந்தி தற்கொலை பண்ணிய பூசனியக்காவின் இழப்பானது அவரது குடும்பத்தைவிட மற்றவர்களுக்கு வளமையான ஒரு மரணவீடு. சில தசாப்தங்களைக் காலம் அள்ளிக் கொண்டு போன பின்னர் என் ஞாபகங்களுக்குள் பூசனியக்கா..... எங்கள் ஊரின் அன்றைய அழகி பூசனியக்கா. இராமநாதன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த எங்கள் அழகியைத் தேடி ஊருக்குள் இளைஞர்கள் வருவார்கள். சமாதிகோவில் வளவுக்குள் கூட்டம் வைப்பார்கள் , நோட்டீஸ் குடுப்பார்கள் , ஏதோ சத்தமாக விவாதிப்பார்கள்.
அந்தவொரு இரவு அதிர்ந்த வேட்டுக்கள் , ஆட்களைத் தின்ற எறிகணைகள் எல்லாமே அடுத்தநாள் சமாதிகோவிலடி, குரும்பசிட்டி , கட்டுவன் பகுதிகளையும் இராணுவம் ஆக்கிரமித்துக்கொள்ள எங்கள் ஊரில் வடக்குப்பகுதியும் வெறிச்சோடியது. புதுமைகளையெல்லாம் அள்ளித்தந்ததாகச் சொல்லப்படும் சிவகாமியம்மனும் , வயிரவரும் , நாகபூசணியம்மனும் தனித்து நிற்க நாங்கள் பிரிந்து தூரமாகிப்போனோம்.
மார்களி மாதமழையில் நனைந்திருந்தது ஊர். அந்த விடியப்பறம் ஊருக்குள் ஏதோ அவலம் ஒன்று
நேரப்போவதை உறுதிப்படுத்திக் கொண்டிருந்தது.
எங்களுக்காய் , எங்கள் சுதந்திரத்துக்காய் , எங்களது வாழ்வினை மட்டுமே எண்ணத்தில்
இருத்தி எங்களுக்காகவே தங்களைக் கருக்கி எங்களுக்காகவே துப்பாக்கி து}க்கிய எம்
தேசப்புதல்வர்களைத் தேடி ஊர்களைச் சு10ழும் இந்தியப்படைகள் அந்த விடியப்பறம் எங்களது
ஊரையும் சு10ழ்ந்து கொண்டது.
அடிக்கடி வந்து குற்றிய நுளம்பின் கடியைத் தவிர்த்துத் தூங்கி விழித்த போது நேரம் 2
மணியென்றது மணிக்கூடு. அனேகர் எழுந்திருந்தனர். அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் போய்விட
வேண்டும் எனும் ஆவல் எல்லோர் முகங்களிலும் அந்தச் சிமினி விளக்கின் ஒளியிலும்
தெரிந்தது.....
நேரம் 4 மணியாகிவிட்டிருந்தது. ஒவ்வொருவரும் தங்கள் இயற்கைக் கடன்களை முடிக்கவென
எழுந்து போய்க்கொண்டிருந்தனர். ஒருவர் நாங்கள் படுத்திருந்த இடத்தை பாதுகாத்திருந்த
தகரத்துக்கு பின்னே நின்று கடமை புரிந்ததன் விளைவு பலரது கோபம் அவர்மீது விழ அவர்
ஒளிந்த ஒளிப்பு அந்த விடியலில் சிரிப்பாயிருந்தது.
ஞாபகங்கள் தாங்கிய கையெழுத்துக்கள் சேர்த்து வைப்பதிலும் ஒவ்வொருவரின் ஞாபகமாக எதையாவது சேர்ப்பதில் பெரியதொரு நிறைவு.அப்படிச் சேர்த்து வைத்த கையெழுத்துக்களும் , ஞாபகப்பொருட்களும் நாட்டுக்குள்ளேயே தொடர்ந்த இடப்பெயர்வுகளுடனும் , புலப் பெயர்தல்களுடனும் ஒவ்வொன்றாய் தொலைந்து போய் விட்டது.
அது 1991ஜனவரி மாதம் வாணி கல்வி நிலையத்தில் கால் வைத்த போது முதல் அறிமுகம் மதி, அவன்தான் முதல் அறிமுகமாய் மேசையொதுக்கி இடம் தந்தவன். அதன் பின்னர் துஷி , அம்பாள் , சுரேஷ் , தயாளன் , மனோ , பன்னீர் , கதிர் , ஜெயந்தி , மல்லிகா , நளினி , சுகந்தி , சுதன் , சர்மிலா , பிறேமிளா , நித்தியா என அடுத்தடுத்து வந்த உறவுகள்.
12வருடங்களின் பின் ஊரை மிதித்த போது உண்டான மகிழ்வும் நாங்கள் படித்த அந்த ரியூசன் வளவும் தந்த ஞாபகங்கள் எத்தனையோ. அந்த மாமரமும் பலாமரமும் சொன்ன சோகங்கள் இதயத்தை இறுக்கிப் பிழிந்து மனசை வதைத்த கணங்கள் ஒவ்வொன்றும் நினைவுகளை விட்டுப் போகாமல் மனசுக்குள் மழைத் தூறலாய் நனைத்துக் கொள்கிறது.
அது 'பிறெய்ன் கல்வி நிலையம்" 6ம்வகுப்பு முதல் 9ம்வகுப்பு வரை கல்வி தந்த அந்த வளவும் சிவாமாஸ்ரரின் உழைப்பில் குப்பிளானிலேயே முதல்தர கல்வி நிலையமாக உருவாகியது மட்டுமின்றி ஊரிலே உருவாகிய அனேகமான இளம் கெட்டிக்காரர்களின் உருவாக்கத்திலெல்லாம் ஊக்கு சக்தியாய் நின்ற அந்த மனிதரின் உழைப்பெல்லாம் இன்று உருக்குலைந்து உருமாறி.....
ஊர் சென்றதில் உலகை வென்ற மிதப்பு. மனசு மேகத்தில் கால் வைத்து பூமிக்கு இறங்குகிறது. அந்தநாளைய எங்கள் ஊர் தன் அடையாளம் கரைத்து ஏதோ இருக்கிறேன் என்றது. என் பால்ய தோழியின் பெயர் சொல்லிய போது அவள் தனது ஊரிலேயே இருக்கிறாள் என அத்தை சொன்னா. 12வருடங்களின் பின் அவள் இப்போது எப்படி இருப்பாள் என்பதை உள் மனசு சித்திரமாய் தீட்டியது. அவளும் நானும் டபிள் போன சைக்கிளின் சத்தமும் சிரிப்பும் இன்று போல் காதுக்குள் புது ராகமிசைக்கிறது.
வீடு வெளிச்சத்தால் நிறைந்திருந்தது. ஆட்களின் ஆரவாரம். வெளியில் நின்ற கரன் மச்சான் அப்பாவிடம் வந்து சொன்னான். அண்ணை அய்யம்மா....என்ற வார்த்தைக்கு அப்பால் எதையும் அப்பா கேட்கவில்லை. அப்பம்மாவின் அறைக்குப் போய் அப்பம்மாவைத் தொட்டுத் தொட்டு பெலத்து அழுதார். மணிமாமி மாலினி மாமி இருவரும் என்னைக் கட்டிப்பிடித்து அழுதார்கள். 18 வயதில் இவர்களையெல்லாம் விட்டுப் புலம்பெயர்ந்த நான் சாவீட்டில்தான் திரும்பச் சந்திக்கவேண்டுமென்ற நிலையாக...!!!
வரிசை அப்பிடியே நிக்குது உவங்களென்ன செய்யிறாங்கள்....? என்னுடன் வன்னிவரவிருந்த சுதான்ரி கேட்டா....அவையள் சாப்பிடப் போட்டினம் முன்னின்ற ஒரு இளைஞன் சொன்னான். சரி இனி அவை ஆடியசைஞ்சு சாப்பிட்டுட்டு வர மத்தியானமாகீடும். பிறகென்ன...வன்னி போனமாதிரித்தான் இண்டைக்கு....சுதான்ரிக்கு மட்டுமல்ல எனக்கும்தான் சலித்தது.
இரண்டு மணித்தியாலம் நின்ற எனக்கே இவ்வளவு சலிப்பானால் தினம் இதுவே வாழ்வாய் போன இந்த மக்களுக்கு எவ்வளவு வெறுத்திருக்கும். இடையிடை வந்து குற்றும் நுளம்பு சலிப்பை நிமிர்த்திப் போனது. வரிசையில் நின்றவர்கள் பலர் தங்கள் இடங்களைப் பார்க்கும்படி சொல்லிவிட்டு சற்றே தள்ளியிருந்த வாங்கில் போயிருந்து கொண்டார்கள். நான் அப்படியே நின்று கொள்கிறேன். எப்பிடியும் இண்டைக்கு வன்னிக்குப் போகவேணும்.
Recent comments
16 hours 2 min ago
2 days 14 hours ago
4 days 15 hours ago
5 days 8 hours ago
6 days 8 hours ago
1 week 14 hours ago
1 week 1 day ago
1 week 2 days ago
1 week 2 days ago
1 week 3 days ago