2004ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 15ம் திகதி பிபிசி இணைய தளத்தில் காணப்பட்ட செய்தித் தலைப்பு ஒன்று “சிறிலங்கா கைப்பந்துக் குழுவினர் தலைமறைவு” (Sri Lanka Handball Team Vanishes ) என்பதாக இருந்தது. கைப்பந்து (கரப்பந்து அல்ல) என்றால் என்ன என்றே தெரியாத என்போன்றோருக்கு இது வியப்பைத்தரும் புதினமாக இருந்தது. கைப்பந்து பற்றி அறிய, கூகுலில் தேடியதில், அனைத்துலக கைப்பந்து அமைப்பின் இணையத்தளத்தின்படி, இவ்விளையாட்டானது உரோமானியர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட தலா ஏழுபேர் கொண்ட இரண்டு அணிகளுக்கிடையிலான பந்து விளையாட்டு.
படைப்பாளிகளின் கருத்துச்சுதந்திரத்தில் யாரும் தலையீடு செய்யக்கூடாது என ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. படைப்பாளிகள் மற்றவர்களது மனஉணர்வுகளை பாதிக்குபடி படைப்புக்களை ஆக்கினால் அவற்றினை வெளியிட அனுமதிக்கக் கூடாது என்று இன்னொரு வாதமும் முன்வைக்கப்படுகிறது. இவை இரண்டுமே ஒன்றுக்கொன்று முரண்பாடானதாக அமைந்துவிடுகிறபோது, விமர்சகர்கள் அந்தச் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு தமக்கு தோதான ஒன்றை தேர்ந்தெடுக்கிறார்கள்.
புலம்பெயர்ந்து ஆண்டுகள் பல கடந்து விட்டாலும், இந்த வாழ்க்கைக்கு நாங்கள் பழக்கப்பட்டு இங்கு காலூன்றிவிட்டது போன்று மற்றவர்களுக்குத் தெரிந்தாலும். உள்ளத்தில்; எங்கள் சொந்த ஊருக்கு திரும்பிப் போகவேண்டும் என்ற தவிப்பு இருக்கத்தான் செய்கிறது. அடுத்தவருடம் போவோம், தப்பினால் அதற்கு அடுத்தவருடம் போவோம் என்ற எதிர்பார்ப்புடன் ஆண்டுகள் பல கழிந்து விடுகிறது. ஒன்றில் பொருளாதாரம் இடம் கொடுக்காது அல்லது எமது தேசத்தின் நிலவரம் அதற்கு தோதாக அமையாது. இந்த அங்கலாய்ப்புடன், எதிர்பார்ப்புக்கள் நிறைவேறாமல் நரைப்பருவம் எய்திய பலரை நாம் சந்தித்திருக்கிறோம்.
ஈழத்தமிழர் பற்றிய மற்றுமோர் திரைப்படத்தை கடந்தவார இறுதியில் லண்டனில் பார்க்கக் கிடைத்தது. இந்த திரைப்படத்தின் தலைப்பே தமிழ்போராளிகள் பற்றிய கதையென்பதை சொல்லி நிற்கிறது. இந்தியாவின் பிரதமராகவிருந்த ராஜிவ் காந்தியின் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் என கருதப்பட்ட சிவராசன், சுபா உடப்பட்ட ஈழத்தமிழர்களை இந்திய காவல்துறை தேடி வலைவிரித்ததையும் அவர்கள் மரணிப்பதற்கு முந்திய 21 நாட்களில் அவர்களது தலைமறைவு வாழ்க்கையில் நடைபெற்றதாகக் கருதப்படும் சம்பவங்களை ஒரு விவரணப்பாணியில் (Melodrama)
புடமாக்கப்பட்டுள்ளது.
ஈழத்தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு இரண்டு ஆதங்கங்கள் இருக்கின்றன. ஒன்று, நாற்பது வருடங்களுக்கு முன்னர் தோற்றம் பெற்ற நம்மவர் திரைப்படத்துறை சர்வதேச தரத்துக்கு இல்லாவிட்டாலும் சிங்கள திரைப்படங்களின் தரத்திலாவது ஒரு படத்தை தராதா? மற்றயது, வியட்நாம் போரை, கம்பூச்சிய உள்நாட்டு யுத்தத்தை, அங்கு மக்கள் பட்ட அவலங்களை திரைப்படங்கள் மூலம் வெளியுலகுக்கு தெரியப்படுத்தியது போல் கலைப்படைப்புக்களின் வாயிலாக எம்மக்களின் துயரங்களை உலகமக்கள் அறிந்து கொள்ள வாய்ப்புக் கிட்டாதா?
“No More Tears Sister”
போரின் கொடுரத்தின் மத்தியில் மரணம் தவிர்க்க முடியாததாக இருந்தாலும், நாங்கள் அன்புசெலுத்துபவரை இழக்கின்றபோது அதனை தாங்கிக்கொள்ள முடியாததாகி விடுகிறது. கொல்லப்பட்ட தங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவரை மீள நினைத்து பார்க்கும் ஓரு குடும்பத்தின் கதைதான் ““No More Tears Sister”. ”. கனேடிய தேசிய திரைப்பட சபையால் தயாரிக்கப்பட்ட இவ்விபரணப்படம், 1989ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம், இனந்தெரியாதவர்களால் யாழ்ப்பாணத்தில் சுட்டுக்கொல்லப்பட்;ட மருத்துவபீட விரிவுரையாளர் டொக்டர் ராஜினி திரணகம பற்றியது. கடந்த 13ம்திகதி Paddington லிலுள்ள Frontline Club ல் இவ்விபரணத்தை பார்க்கக்கிடைத்தது.
இம்மாதம் 3ம் திகதிவரை நடைபெற்று வந்த 48வது லண்டன் திரைப்படவிழாவில் காண்பிக்கப்பட்ட ஒரு சிஙகளத் திரைப்படம் “உடுகன் யாமய” (Against the Tide) அல்லது “எதிர்நீச்சல்” எனத் தமிழில் அர்த்தம் கொள்ளலாம்.
1989 ம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற ஜே.வி.பியின் வன்முறை நடவடிக்கை களுக்கும், அவற்றுக்கு எதிராக சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்ட அரச பயங்கரவாதத்துக்கும் இடையில் சிக்கி, சாகடிக்கப்பட்ட அல்லது காணமற்போன அறுபது ஆயிரம் சிங்கள இளைஞர்களையும், அதனால் ஏற்பட்ட மனித அவலங்களையும் மையப்படுத்தி இந்தக்கதை சொல்லப்படுகிறது.
Recent comments
3 weeks 3 days ago
3 weeks 3 days ago
3 weeks 3 days ago
3 weeks 3 days ago
3 weeks 3 days ago
14 weeks 1 day ago
14 weeks 2 days ago
1 year 5 days ago
1 year 6 days ago
1 year 6 weeks ago