பேப்பர் 071

18 மே 2007

வணக்கம்!    இது பொதுவாக பாடசாலை மாணவர்களுக்கும் உயர்கல்வி கற்கும் மாணவர்களுக்கும் பரீட்சைகள் நடைபெறும் காலம். ஆகவே இம்முறை ஒரு பேப்பரில் இளமைத்துள்ளல்கள் கொஞ்சம் குறைவாக இருக்கும். பரீட்சைகளில் தோற்றும் ஒரு பேப்பர் இளசுகளுக்கு எமது வாழ்ததுக்களை தெரிவித்துக் கொள்கிறோம். பரீட்சை முடிந்ததும் கோடைகால விடுமுறைக்காலத்தில் உங்கள் ஆக்கங்களை அதிகமாக எதிர்பார்க்கிறோம்.

ஒரு பேப்பரின் இணையத்தளம் கடந்த சில வாரங்களாக இயங்கவிலலை என்பதை அறிவீர்கள். இது விசயமாக நிறையப்பேர் எங்களை தொடர்பு கொண்டிருந்தார்கள். உங்கள் கரிசனைக்கு நன்றி. இம்மாதம் 21ம் திகதி முதல் இணையப்பதிப்பை வழமையான இணையத்தள முகவரியில் பார்வையிடலாம் என்பதை மகிழ்வுடன் அறியத்தருகிறோம்.

Sport News

by:
Cheran Gobiratnam

Football

Manchester United F.C. are the champions of England, after it was proved mathematically impossible for Chelsea to catch Man United. Chelsea, the reigning Premiership champions drew 1-1 against Arsenal at the Emirates Stadium, as Manchester United defeated Manchester City 0-1 on Saturday thanks to Cristiano Ronaldo’s first half spot kick, and a crucial penalty save by Van der Sar from Vassell. Manchester United are 7 points clear of Chelsea with only 2 games left, including a mouth watering yet meaningless clash with clash with Chelsea, and another much more imperative game in the F.A. Cup Final, ironically against runners up Chelsea.


At the other end of the table Charlton joined Watford in relegation after a 0-2 defeat to Tottenham. It looks likely Wigan will also be in the Championship, but if they can   muster a win at Sheffield United and West Ham lose away to Manchester United they will stay up on superior goal difference.

In the German league, it is now assured Bayern Munich will not qualify to the Champions League, as they are below the top three.
The Spanish league provided a 5 – goal sizzler with Real Madrid defeating title contenders Seville 3-2. Barcelona are in pole position, 2 points ahead.

Cricket

Marcus Trescothick hit an impressive 185 N.O, to show England what they’ve been missing. Kevin Pietersen is a doubt for the West Indies series, whilst Sri Lanka’s protest about Adam Gilchrist’s batting glove have been dismissed by Australia. Adam Gilchrist hit a world breaking supreme 149 off 104 balls.

Tennis
 
Brits Tim Henman and Andy Murray have both lose in the first round of the Rome Masters. Henman blamed himself for his poor play, whilst Murray says he was “rusty” 

Snooker

லண்டன் தமிழ் நிலையத்தின் கலாச்சாரமாலை

by:
ப. வை. ஜெயபாலன்

தரமான கலாச்சார மாலைக்கு லண்டண் தமிழ் நிலையப் பள்ளி என்பது பொதுவான எதிர்பார்ப்பு. ஈஸ்ரர் விடுமுறை நிறைவின் லோகன் மண்டப நிகழ்வு இது என்பதும் வருடாந்த வழமை. இம் முறையும் சென்ற 21ம் நாள் நாலரை மணி நேர நிகழ்வாக இது அமைந்தது. பிரதம விருந்தினர் பந்தாக்கள் இல்லை. ஆசிரியைகள் குத்து விளக்கேற்ற நிகழ்ச்சிகள் ஆரம்பம். பல்லின வாத்திய இசை  ஐந்து நடனங்கள் பாஞ்சாலி சபதம் நாட்டிய நாடகம் என்பன உள்ளடக்கம். 170 மாணவர்கள் நிகழ்வுகளை நிறைத்தனர். ஆரம்பதர மாணவர்களுக்கு வேறு விழாவில் இடம் தந்து ஏனையோரை இதில் இணைத்ததும் சிறப்பு.

நடனங்கள்  நாட்டிய நாடகம் உட்பட ஐந்து நடன ஆசிரியைகளதும் கூட்டுமுயற்சி என்பதும் சங்கீத வாத்திய  ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் உச்சம் என்பதும் நிகழ்வுகளின் உயிரோட்டத்தில் தெளிவானது.

ஒரு பேப்பரின் ஊடாக.... ஒரு வாசகியின் கடிதம்!

ஒரு பேப்பரின் ஊடாக.... ஒரு வாசகியின் கடிதம்... மதிப்பிற்குரிய இரவி அருணாசலம் அவர்களுக்கு! உங்கள் கலைப்பணிக்குத் தலை வணங்கித் தொடர்கிறேன்...!

தங்களால் எழுதப்பட்ட அல்லது கிளறப்பட்ட நினைவுகளின் சிந்தலை ஒரு பேப்பரின் 70ஆவது இதழில் படித்தேன். கிளர்ந்து நினைவு தளிர்ந்த கதை அல்லது புதியதோர் உலகம்' என்ற தலைப்பின் கீழ் தங்கள் துயரம் பிளிறியதை படித்ததோடு என்னால் இருக்க முடியவில்லை.

ஒவ்வொரு வரிகளும் என்னை உலுப்பியது. எழுது... எழுது... எழுது... என என் மனம் உந்தியது. எனக்கு தெரிந்தவரையிலும் எழுத எத்தனிக்கிறேன். ஐயா. படியுங்கள் இதை..!

இலங்கையின் முதல் குடிமக்கள் யார்?

by:
- சுப்பிரமணியம் விசாகன்

பல்வேறு துறை பற்றிய ஆய்வுகளில் டி.என்.ஏ (DNA)  முக்கிய பங்கு வகிக்கிறது. மனித இடப்பெயர்வு  பற்றிய வரலாற்றை விஞ்ஞான பூர்வமாக நிலைநாட்ட இது உதவுகிறது. 21 ஆம் நூற்றாண்டின் முக்கிய ஆய்வாக  விஞ்ஞான புதை பொருள் ஆராய்ச்சிகளில் இது இடம் வகிக்கிறது.  DNA   என்பதற்கு மரபணு என்ற பதம் பரவலாக உபயோகிக்கப்பட்டு வருகிறது. இது ஒரு தவறான சொற்பிரயோகம் ஆகும்.

DNA  எனும் சுருக்கத்தின் விரிவாக்கமானது Deoxy Ribo Nuclic Acid   என்பதாகும்.  மரபணு என்பது முற்றிலும் வேறுபட்ட ஒன்றாகும். DNA  யைத் தமிழில் எழுத வேண்டுமாயின் `ஒட்சிசன் அற்ற றைபோ நியுக்கிளிக் புரத அமிலம்' ஆகும். இந்நீண்ட சொல்லைப் பயன்படுத்துவதை விட்டு,  தவறான மரபணு  எனும் சொல்லையுந்தவிர்த்து DNA  எனும் சொல்லை  உபயோகப் படுத்தி வருவதே பொருத்தமானதாகும்.

ஆச்சியின் அட்வைஸ் ...

ஆச்சிக்கு வணக்கம். நான் எனது ஆதங்கம் ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என எழுதுகிறேன். முன்பு ஒரு காலத்தில் ஊரில் படித்தவர்களுக்கென ஒரு மரியாதையிருந்தது. பணமிருப்பவர்களுக்கு எனவும் ஒரு மரியாதையிருந்தது. ஆனால் இங்கு வெளிநாட்டில் வரவர படித்தவர்கள் சரி படிக்காதவர்கள் சரி எல்லோருமே பணத்திற்கும், வெளிப்பகட்டுக்கும் அடிமையாகி ஒரு போலிகௌரவத்தில் வாழுவதாகத் தெரிகிறது. உங்கள் அபிப்பிராயாம் எப்படி இந்த விடயத்தில்?

துயர் சூழ்ந்த நாள் தொடர்கிறது

by:
இரவி அருணாசலம்

சென்ற 'ஒரு பேப்பர்' இல் புதிய உலகம் செய்ய புறப்பட்ட என் மைந்தன் பற்றி எழுதியிருந்தேன். அந்தத் துயரம் ஆறவில்லை. ஆறாது. காலம் இந்தக் காயத்தை மாற்றும் என்றுதான் நம்பினேன். காயங்கள் தன் கொடூரங்களால் என்னைத்தின்றபடி இருக்க விட்டுவிட்டது காலம்.

ஆறுதற் சொல் கோர்த்து நெஞ்சுக்கு ஆதரவாய் தோழி ஒருவள் மடல் எழுதியிருந்தாள். "புதியதோர் உலகம் படைக்கப் புறப்பட்ட கலைஞன் நீங்கள்.எப்படித்துவளலாம்? கூடாது! நிமிர்ந்திருங்கள்'' என்று மூன்று பக்க மடலில் ஒருவரி. வார்த்தைகள் பல என்னைக் கூச்சமெழச் செய்த போதும் என் நெஞ்சுக்கு மன ஆறுதல் தந்தன. நன்றி தோழி. மிக்க நன்றி.

நினையாப் பிரகாரம் மேலும் ஒரு துயர் சூழ்ந்தது. எம் புலம்பெயர் தமிழருக்கு என்றிருந்த காட்சி ஊடகம் தடைப்பட்டுப் போனது. ரிரிஎன் என்ற தமிழ் ஒளியின் பணிகள் முடக்கப்பட்டன.

உள்ளங்களை வெல்வோம் .. உறவை வளர்ப்போம் ...

by:
இராம K நாதன்

இந்த உலகத்தில் எவரும் தனியாளாக வாழ்ந்து விட முடியாது. வீட்டில், வேலைத்தளத்தில், காரியத்தில், கடைத்தெருவில் எங்கு சென்றாலும் பிறருடன் நாம் பேசிப்பழக வேண்டும். இவர்களுடன் நீங்கள் எப்படி பழகுகிறீர்கள் என்பதைப் பொறுத்தே உங்களது நாள் அமையும்.

நீங்கள் யாருடனாவது கதைக்கும் போது உங்கள் முகம் என்ன சொல்லுகிறது?  நீங்கள் வாயினால் சொல்லும் செய்தியிலும் பார்க்க உங்கள் முகமே உங்களது மன நிலையைக் காட்டிக் கொடுத்து விடும். உங்களது முகம் கவலையுடன் காணப்படுகிறதா? கோபத்துடன் இருக்கிறதா? விரக்தியைக்காட்டி நிற்கிறதா? உங்கள் முகம் உங்களது எண்ணத்தைப் பிரதிபலிக்க,  நீங்கள் பேசும் சொற்களிலும் பார்க்க ஒரு கூடிய பங்கு வகிக்கிறது. இந்த முகம் சொல்லும் செய்தியை மறைப்பதெப்படி?

சொர்க்கமும் நரகமும் நம் வசமே..

என்னுடைய வியாக்கியானங்களைக் கேட்டு (நண்பர் ஒருவருக்கு அது விதண்டாவாதம்)  நண்பர் ஒருவருக்கு கோபம் அல்ல; கடுங்கோபம். அவரே கோபத்துடன் தான் சொன்னார்.

"உங்கள் தரவளிக்கெல்லாம் மோட்ச வாசல் திறபடாது. அடைபட்டுத்தான் கிடக்கும்''
அவருக்கு நான் சொன்னன்.
"அப்பிடி திறபடாட்டில் உதைஞ்சு திறப்பன்''.

இதைப் பகிடியாகத்தான் சொன்னேன். என்றா
லும், அவர்களின் அறியாமைக்கு நான் கொடுத்த `உதை' என்றும் இதனைப் பார்க்கலாம்.

`சொர்க்கமும் நரகமும் நம் வசமே' என்று `வசந்த மாளிகை' திரைப்படத்தின் `கலைமகள் கைப்பொருளே' என்ற பாடலில் கண்ணதாசன் சொல்கிறார். `உனக்கான சொர்க்கம் இந்த உலகிலேயே உண்டு' என்றார் ஓர் அறிஞர். உண்மை அதுவே.

நாம் செய்பவை தான் நமக்கான சொர்க்கம்
அல்லது நரகம். நாம் செய்வதற்கு அப்பால்பிரார்த்

எழுபத்தைந்தாவது வயதில் என் பேராசான் - கா. சிவத்தம்பி

நினைக்க இனிக்கின்ற ஒருவர் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி. உணர்வு தொட்டு அவர் உரையாடல் இருக்கும். உறவின் சகல பரிமா
ணங்களும் அவர் பேச்சில் தொனிக்கும். அவர் என்னை மைந்தனாகப் பார்த்தாரா, மாணவனாகப் பார்த்தாரா எனக்கு எதிலும் தெளிவு இல்லை.

ஓம் அவரிடம் நான் மாணவனாக இருந்தேன். அது ஒரு சில ஆண்டு. ஆயினும் இற்றைவரை  அவர் மைந்தனாக வாழ்கிறேன். அவர் மூன்று மகள்களும் `அண்ணா' என்று கூப்பிடுகின்ற உறவில் திளைத்து நான் அவர் மைந்தனாக வாழ்கிறேன். தமிழை சிறப்புப்பாடமாக யாழ் பல்கலைக்கழகத்தில் நான்கு வருடம் அவரிடம் கற்றுத் தேறினேன். முதுகலைமானிக்கு நாடகமும் அரங்கியலையும் அவரிடம் கற்றேன்.

பூராயம்

ஆவணம் தேவை
பல ஊடகங்களும் மறந்து விட்ட தந்தை செல்வாவை நினைவிருத்தி அவர் தொடர்பான கட்டுரையைப் பிரசுரித்திருந்ததற்கு நன்றிகள்.
தமிழர்களிடம் இருக்கும் பெரிய பலவீனம் சம்பவங்களை ஆவணப்
படுத்தாமையே. அந்த வகையில் தந்தை செல்வா போன்றவர்களின் கருத்துக்களும் வரலாறும் ஆவணப்படுத்தப்பட வேண்டியவை என்பதில் இரண்டு கருத்து இருக்க முடியாது.
இத்தகைய பணிகளையும் உங்கள் பத்திரிகை வாயிலாக முன்னெடுக்க வேண்டும் என்று பணிவாகக் கேட்டுக் கொள்கிறேன்.
- சயந்தன்

கருணா இல்லாத கருணா குழு!

by:
வி. சபேசன்

தமிழீழ மக்களுக்கு பெரும் வரலாற்றுத் துரோகம்
 இழைத்து மூன்று வருடங்கள் நிறைவு பெற்றுவிட்ட நிலையில் கருணா இப்பொழுது மீண்டும் வெளிநாட்டிற்கு தப்பி ஓடி விட்டதாக செய்திகள் வருகின்றன.  இம் முறை அவர் ஓடியதற்கு காரணம் விடுதலைப் புலிகள் அல்ல. கருணா குழுவினரே கருணாவை வேட்டையாடுவதற்கு தேடி வருகிறார்கள்.


கருணா விடுதலைப்புலிகளிடம் இருந்து பிரிந்து தனி அமைப்பை ஆரம்பித்த பொழுது, தமிழர் விரோத சக்திகள் எல்லாம் விழுந்தடித்து அவருக்கு ஆதரவு அளித்தன. மற்றைய ஒட்டுக்குழுக்களை விட கருணா குழுவிற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தன. அதற்கு மிக முக்கிய காரணம் கருணா பிரதேசவாதத்தை முன்வைத்ததுதான்.

இறுக்கத் தொடங்கும் அமெரிக்கக் கரங்கள்........

by:
இளந்திரையன்

தமிழீழப் போரின் இருண்ட காலகட்டம் ஒன்றினுள் நாம் விரைவாகப் புகுந்து கொண்டிருக்கின்றோம்.





 











Syndicate content