வணக்கம்! கடந்த பேப்பரில் ஒரு மாறுதலுக்காக ஒரு “கருத்து}ண்” (காட்டுனுக்கு இதுதான் தமிழாம்) உடன் பயோடேற்றாவும் பிரசுரித்திருந்தோம். அது பற்றி பலரும் தமது கருத்துக்களை எங்களுக்கு தெரிவித்திருக்கிறார்கள். அந்த சிறுபத்தியில் கொஞ்சம் கியூமருடனும், எள்ளலுடனும் நிரம்ப விசயங்கள் கலந்திருந்தாலும் எங்களுக்கு கிடைத்த கருத்தக்கள் ஒன்றுக்கு ஒன்று வேறுபட்டனவாக இருந்தன. கருத்துச்சுதந்திரத்தை மதிக்கும் ஒரு சனநாயகவாதி மட்டும் கொஞ்சம் குழம்பிப்போய் எங்களது பணியக தொலைபேசியை தொல்லைபேசியாக மாற்றியிருந்தார்.
தமிழீழப் போராட்டம் ஒரு முக்கியமான கட்டத்தை அடைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டிலிருந்து ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான குரல்கள் பலமாக ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இந்தக் குரல்கள் தமிழீழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் வாழும் தமிழர்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளன. இதுவரை ஈழத் தமிழர்கள் பிரச்சனையில் பாராமுகமாக இருந்த கட்சிகளும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பத் தொடங்கியிருப்பது இதில் ஒரு முக்கியமான விடயம். தமிழ் நாட்டில் வாழும் தமிழர்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக திரும்பியுள்ளதை இது எடுத்துக் காட்டுகின்றது.
சிறிலங்கா அரசு தமிழ்மக்கள் மீது நடாத்தும் யுத்தத்தில், இந்தியா சிறிலங்கா அரசை ஆதரித்துவருவதும், ஆயுத-தளபாட வழங்கல், படைப்பயிற்சி, கடல் கண்காணிப்பு, புலனாய்வுத்தகவல்களை பகிர்ந்து கொள்தல் எனப்பல்வேறு வழிகளில் உதவிவருவதும் இப்போது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. ஆனால் தமிழ்நாட்டைப்பொறுத்தவரை நிலமை நேரெதிராக இருக்கிறது என்று கொள்ளலாம். போருக்கான உதவி அல்லது பொருளுதவி எதனையும் தமிழ்நாட்டிலிருந்து பெற்றுக் கொள்ளமுடியாவிட்டாலும், தமிழ்நாட்டு மக்களின் தார்மீக ஆதரவு ஈழத்தமிழ் மக்கள்பால் உள்ளதனை உணரமுடிகிறது.
“கருணா” என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் மகிந்த இராஜபக்ச தலைமையிலான பொதுசன ஐக்கிய முன்னணியின் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆயுதவழியிலான போராட்டப்பாதையை கைவிட்டு சனநாயகவழியில் கிழக்க மாகாண மக்களுக்காக பணிபுரிவதற்காக தான் பாராளுமன்றப்பாதையை தேர்ந்தெடுத்திருப்பதாக அவரது கன்னிப்பேச்சில் குறிப்பிட்டிருக்கிறார். தனக்கு விரும்பிய அரசியல் பாதையை தெரிவு செய்வதற்கு அவருக்கு உரிமையுள்ளபோதும், அண்மைக்காலத்தில் அவர் புரிந்த குற்றச்செயல்களிலிருந்து தப்பிக் கொள்வதற்கு பாராளுமன்றப்பதவியை பாவிப்பதனை நாகரிக சமூகம் அனுமதிக்கக்கூடாது.
Recent comments
1 year 20 weeks ago
1 year 21 weeks ago
1 year 26 weeks ago
1 year 29 weeks ago
1 year 29 weeks ago
1 year 29 weeks ago
1 year 30 weeks ago
1 year 33 weeks ago
1 year 38 weeks ago
1 year 43 weeks ago