வணக்கம்!
நூறாவது பேப்பர் பற்றி .. அதுவும் நூறு வரை வந்து விட்டதையிட்டு பலரும் எங்களுக்கு வாழ்த்துகள் தெரிவிச்சினம். மேற்கொண்டு என்ன செய்யோணும் எண்டு சின்ன சின்ன அட்வைசுகளும் தந்தினம். எல்லாருக்கும் நன்றி. முடிந்தவரை உங்கடை அட்வைசுகளை சிரமேற்கொள்ள முயற்சிக்கிறோம்.
நூறாவது பேப்பர் வந்திடுத்து எங்யைடியப்பா உங்கடை ஒரு விழா எண்டு பலர் கேட்டிச்சினம். கொஞ்சம் பொறுங்கோ! நாட்டு நிலமையள் சரியில்லை இப்ப விழாக்கள் வைக்கிறது நல்லாத் தெரியேல்லை இதுதான அவையளுக்கு நாங்கள் சொன்ன பதில். உங்களுக்கும் அதைத்தான் சொல்லிறம்.
நாம் வாழும் பூமி ஒரு நாள் அழிந்து போய்விடும் என்று புராணங்களிலும், வேதாகமத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பற்றி பல விஞ்ஞானக் கதைகளும் திரைப்படங்களும் வந்திருக்கின்றன. கலிமுற்றிப்போய் இவ்வுலகம் அழிந்து போய்விடும் என்பது எவ்வளவு நம்ப முடியாமல் இருக்கிறதோ, அதுபோல் இந்த விஞ்ஞானக்கதைகளும் இதுவரைநாளும வெறும் கதைகளாகவே எங்களுக்குத் தென்பட்டன. உலக அழிவு பற்றிப் பேசிக் கொண்டோமே தவிர நாங்கள் அதுபற்றி அச்சங் கொள்ளவில்லை.
ஈழம் என்ற வார்த்தையும், அது குறித்து நிற்கும் அங்கீகரிக்கப்படாத ஒரு புவியியல் அலகு தொடர்பான பதிவுகளும் இணைய தளப் பக்கங்களை நிறைத்துக் காணப்படுவது, கல்வியாளர் சிலருக்கு அதனை ஒரு ஆய்வுப்பொருளாக ஆக்கியுள்ளது. இவ்விடயத்தினை ஆய்வு செய்த ஒரு சிங்களக் கல்வியாளர், இல்லாத ஒரு தேசத்திற்கு இவ்விதம் மாயத்தோற்றம் கொடுக்கப்படுவது புலம்பெயர்ந்த தமிழர்கள் சிலரின் இயலாத்தனத்தின் வெளிப்பாடு எனக்குறிப்பிட்டிருக்கிறார். வேறு சில கல்வியாளர்களோ, இது விடுதலைப்புலிகளினதும் அவர்களது ஆதரவாளர்களினதும் பிரச்சாரம் என்கிறார்கள்;.
Recent comments
1 year 20 weeks ago
1 year 21 weeks ago
1 year 26 weeks ago
1 year 29 weeks ago
1 year 29 weeks ago
1 year 29 weeks ago
1 year 30 weeks ago
1 year 33 weeks ago
1 year 38 weeks ago
1 year 43 weeks ago