பேப்பர் 094

PDF வடிவில்: பேப்பர் 94

மேலுள்ள இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்யலாம்.

மே 23, வெள்ளிக்ககிழமை

வணக்கம்!
தமிழர் சேனையை வழிநடத்தி களம்பல வென்ற சகோதரர் ஒருவரது இழப்பின் சோகத்திலிருக்கிறோம். முன்னர் கதைப்புத்தங்களிலேயே படித்திருந்த வீரதீரத்தை, நிசத்தில் இவர்களிடம்தான் பார்த்தோம். கண்ணீரை துடைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லுவதற்கு இது வெறும் செலுலோய்ட் சுருள்களில் வெளிப்பட்ட வீரமல்லவே. உணர்வோடு ஒன்றிப்போய்விட்ட நிகழ்வு.

ஈழத்தின் போரியல் வல்லுனர் பிரிகேடியர் பால்ராஜ்

by:
அ.மயூரன்

  Brig. Balraj

 

 

 

 

 

 

 

 

 

 

தமிழீழ விடுதலைப் போராட்ட சண்டைக் களங்களில் பால்ராஜ் என்ற மந்திரச் சொல் சிங்களத்தின் சேனைகளை கலங்கடித்து நின்ற வேளை வானலைகளில் எம் காதுக்குள் வந்த செய்தி பொய்க்காதா என ஏங்க வைத்த பிரிகேடியர் பால்ராஜ் (கந்தையா பாலசேகரன்)  அவர்களின் மறைவு உலகத் தமிழர்களின் நெஞ்சங்களை உலுக்கி பெருந்துயரில் ஆழ்த்தியது.

தமிழீழத்தின் இதயபூமி எனப்படும் கொக்குத் தொடுவாயை பிறப்பிடமாகக் கொண்ட இவர் 1983 போராட்டத்தில் உள்வாங்கப்பட்டு இந்தியாவிலே 9வது பயிற்சி முகாமில் பயிற்சியை முடித்துக் கொண்டு வன்னி திரும்பியவர் 

மே 21 பற்றிய நினைவில் எழுதியது

உலகையே நடுங்க வைத்த சர்வாதிகாரி ஹிட்லரை தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஜேர்மனியின் சர்வாதிகாரியாக 1934இல் இருந்து 1945 வரை ஆட்சி புரிந்த ஹிட்லர் நடத்திய அழிவுகள் எண்ணில் அடங்காதவை. ஹிட்லர் உருவாக்கிய இரண்டாம் உலக யுத்தத்தில் ஐரோப்பாவில் மட்டும் 39 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டிருந்தார்கள்.

ஹிட்லரின் நாசிப் படைகள் செய்த படுகொலைகள் மனிதகுலத்தை இன்று வரை நடுங்கச் செய்பவை. எக் குற்றமும் செய்யாத 6 மில்லயனுக்கும் அதிகமான யூத மக்கள் ஹிட்லரின் படைகளால் கொல்லப்பட்டார்கள். யூதர்களை கொல்வதற்கு என்றே உருவாக்கப்பட்ட பிரத்தியேக முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட யூத மக்கள் அங்கு பல விதமான சித்திரவதைகளின் ஊடாக கொல்லப்பட்டார்கள்.

“சொந்தக்கருத்தும் பொய்யும் சேர்த்து குழப்பியடிக்கப்படுகிறது”

தமிழ்ச் செய்தியாளர் மாநாடு பற்றிய பதிவுகள் பற்றி  கவிஞர் உ.சேரன் 

சர்வதேச தமிழ்ச் செய்தியாளர் ஒன்றியத்தின் லண்டன் மாநாட்டில் கலந்துகொள்ள வாய்ப்புக் கிடைத்தமை ஒரு நல்ல அனுபவம். அந்த மாநாட்டில் இடம்பெற்ற என்னுடைய உரையின் பதிவை நீங்கள் வெளியிட்டமைக்கு நன்றி ("ஊடகவியலாளர் அவசியமான பேய்கள்!", த.ஜெயபாலன், ஒரு பேப்பர் மே 9-மே 22). ஆங்கிலத்தில் இருந்த எனது உரையின் தமிழ்ப் பதிவு பெருமளவுக்குச் சரியாக இருந்தாலும் பின்வரும் விடயங்களில் வழு ஏற்பட்டுள்ளது.

1. ஊடகவியல் என்பது தொழில் துறைசார்ந்த பொறுப்பு மட்டுமல்ல, அறம் சார்ந்த பொறுப்பும் (Ethical commitment/project) ஆகும் என்பதே நான் கூற விழைந்தது. Ethical என்பதை விழுமியங்களுக்கான பொறுப்பு என்று மொழி பெயர்ப்ப‌து பொருத்த‌மான‌தல்ல.

பால்ராஜ் அமரனுக்கு

by:
வ.ஐ.ச.ஜெயபாலன்

அமரா
நீ மீட்ட ஆனையிறவு கண்ட
செங்கால் நாரைகள் போல்
வன்னியெங்கும்
தாயின் மணிக்கொடிகள் பதிகின்றனவே.
என் கவிதையிலே நீ இருக்க
ஈழம் கதறியளும் நியாய மென்ன.

நீயோ முடங்கிய காலில்
மூண்டெரிந்த விடுதலைத் தீ.
தீவெட்டியாய் உன்னைச்
சுமந்து சென்ற தோழருக்கு
'இத்தாவில்' பகையிருட்டில்
வெற்றியின் பாதை விளங்க வைத்த மாவீரா.
உன்னை எழுதாமல் இந்தத் தமிழ் எதற்க்கு.
களம் களமாய்த் தோழர் உன்னைச் சுமந்ததுபோல்
காலங்கள் ஊடே
என் கவிதை இனிச் சுமக்கட்டும்

அவனை ஆழப் புதைக்காதீர்
ஆலயங்கள் கட்டாதீர்.
நாழை மணலாற்றை மீட்டு
வாழ திரும்புகையில் நம் சனங்கள்
மசிரை விட்டுதுகள் தம்
மனம் நிறைந்த நாயகனை.

மணலாற்று அகதிகளின் புதையல்
ஆழப் புதைக்காதீர்.

Height of Stupidity

The anti-Tamil war in Sri Lanka is getting bloodier by the day. The Government of Sri Lanka (GOSL) carries on with its human rights abuses and war crimes.

The international community has rejected GOSL a place in the 47-member United Nations Human Rights Council. Rightly so!

War with Tamils? Peace with Tamils? A big military operation against the Tamil North? Elections for the Tamil East? Government of Sri Lanka (GOSL) discusses these questions without irony, as if they were equivalent options. Like a person in a showroom making a choice between two cars.

And nobody powerful or influential within GOSL cries out: War is the height of stupidity!

Carl von Clausewitz, the renowned military theorist, famously said that war is nothing but the continuation of politics by other means. Meaning: war is there to serve policy and is useless when it does not.

What policies did the anti-Tamil wars in the last thirty years serve the GOSL?

Ninety-four years ago, World War I broke out. The immediate cause was the assassination of the Austrian heir apparent by a Serbian student. The first attempt on the main street had failed, the assassins had already given up hope when one of them came across the victim again, by sheer accident, and killed him. After this almost accidental killing many millions of human beings lost their lives in the following four years.

The assassination served, of course, only as a pretext. Every one of the belligerent nations had political and economic interests that pushed it into the war. But did the war really serve those interests? The results suggest the opposite: three mighty empires – the Russian, German, and Austrian – collapsed; France lost its standing as a world power beyond all hope of recovery; the British Empire was mortally wounded.

சிறிலங்காவின் தோல்வி, மனிதவுரிமை ஆர்வலர்களின் வெற்றி!

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் குழுவில் அங்கத்துவம் பெறுவதற்கான தெரிவில் சிறிலங்கா தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. அப்பட்டமான மனிதவுரிமை மீறல்களைப் புரிந்து வரும் சிறிலங்கா அரசு அனைத்துலகப் பரப்பில் ஒரு தவறான உதாரணமாக அமைந்துவிடும் என்பதால், இக்குழுவில் சிறிலங்கா இடம் பெறுவதை பல நாடுகள் விரும்பவில்லை.





 











Syndicate content