வணக்கம்!
உங்கள் அனைவருக்கும் ஒரு பேப்பர் குடும்பத்தின் புத்தாண்டு வாழ்த்துக்கள். ஆண்டு தொடக்கத்தில் எல்லோரும் எடுக்கிறமாதிரி சில தீர்மானங்கள் எடுத்திருக்கிறம். அதிலை முக்கியமான ஒண்டு உங்களில் சிலருக்கு எரிச்சலை மூட்டிய “ஒசியாய் வாசிக்க ஒரு பேப்பர்” என்ற வாசகம் “ஈசியாய் வாசிக்க ஒரு பேப்பர்” என மாற்றப்பட்டுள்ளது. இதிலை இன்னொரு விசயமும் இருக்கிறது. இனி பிரித்தானியா தவிர்ந்த மற்றய ஐரோப்பிய நாடுகளில் ஒரு பேப்பர் விற்பனைக்கு விடப்படவுள்ளது. தற்போதைக்கு கனடாவிலும், பிரித்தானியாவிலும் மட்டும் ஓசியாய் கிடைக்கும்.
என்னடா மடியிலை கை வைக்கிறியள் என்று நீங்கள் ஆதங்கப்படலாம். ஒரு பேப்பரின் தயாரிப்பு செலவீனங்களை சமாளிப்பதற்காகவே இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறோம். ஒசியை எடுத்ததில் எங்களுக்கு கவலைதான் என்ன செய்ய ..
அண்மைக்காலமாக செய்தி ஊடகங்கள் மூலமாக திணிக்கப்படும் ஒரு கருத்து, தமிழ் மக்களிற்கான தலைமையை தேசியத்தலைவர் திரு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் ஏற்றிருக்கும்வரை இலங்கைத்தீவில் அமைதி ஏற்படப்போவதில்லை என்பது. இந்தக் கருத்துக்களை பரப்புவர்களின் பட்டியலில், சிறிலங்கா இராணுவத்தளபதி சரத் பொன்சேகா, கோத்தபாய இராஜபக்ச, டக்ளஸ் தேவானந்தா முதல் கொணடு இந்திய இராணுவ அரசியல் ஆய்வாளர்கள், அவர்களுக்க வால் பிடிப்பவர்கள் என பலரும் அடங்குவர். இவர்களது அபிலாசைகள் வெவ்வேறாக இருந்தாலும் தத்தம் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்வதில் இவர்களுக்கு தமிழர் தலைமை முட்டுக்கட்டையாக இருக்கிறது என்பதனை உணர்ந்து கொள்ளலாம்.
இலங்கைத்தீவினைப் பொறுத்தவரை, 2008ம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் தியாகராசா மகேஸ்வரனின் படுகொலையுடன் மலர்ந்திருக்கிறது. இவ்வாண்டு இது போன்ற அரசியல் கொலைகள் உட்பட மனிதவுரிமை மீறல்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். இது வெறும் ஆருடம் அல்ல உண்மை நிலவரம் என்பதனை தொடர்ந்து வரும் நிகழ்வுகள் சுட்டிநிற்கின்றன.
Recent comments
9 weeks 2 days ago
9 weeks 2 days ago
9 weeks 3 days ago
10 weeks 22 hours ago
10 weeks 22 hours ago
10 weeks 5 days ago
11 weeks 1 day ago
11 weeks 5 days ago
12 weeks 5 days ago
12 weeks 5 days ago