பேப்பர் 084

பேப்பர் 84

வணக்கம்!

இந்த ஆண்டின் இறுதிப் பேப்பரில் உங்களைச் சந்திக்கிறோம். சினோ சுரண்டி கைகள் வலித்தாலும் உங்களுடன் எங்கள் இன்பத்தையும் துன்பத்தையும் பகிர்ந்து கொள்ள விசைப்பலகையில் தட்டும்போது வலியெல்லாம் பறந்து போகிறது. ஏற்கனவே ஊர் முழுக்க ஐஸ் இதுக்கிள்ளை நீங்கள் வேறை ஐஸ் வைக்கோணுமோ என்று நீங்கள் நினைக்கலாம் ஆனால் சொன்னது எனனவோ உண்மைதான்.

வழி' ஒரு பார்வை.

'வழி" தமிழீழப் பெண்கள் 13பேரின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பாக 2005 ஆவணி வெளியாகியது. இச் சிறுகதைத் தொகுப்பானது 2006 ஏப்ரல் மீள் வெளியீடாகவும் வந்திருக்கிறது. ஏற்கனவே தமிழீழப் பெண்களின் படைப்பாற்றலை வெளிக்கொணரும் 'கப்டன் வானதி வெளியீட்டகத்தினரின் 7வது வெளியீடாக வழி சிறுகதைத் தொகுதி தமிழீழப்பெண் எழுத்தாளர்களினால் மீளவும் ஒரு காத்திரம் மிக்க கனத்தைப் பதிந்துள்ளது. இத்தொகுப்பானது எழுத்தாளர் அமரர் சந்திரா அற்புதலிங்கம் அவர்களுக்குக் காணிக்கையாக சந்திரா அற்புதலிங்கம் அவர்களின் சிறுகதையான வழி சிறுகதையே இந்நூலின் பெயராகவும் ஆகியுள்ளது.

சீட்டு சிவலிங்கம் சிவப்புச் சிவலிங்கமாகிய கதை

by:
அமுதன்

கடந்த வாரம் இலங்கை அரசாங்கத்துக்கு ஆலவட்டம் பிடிக்கும் எஸ்.எல்.டி.எப் என்ற கும்பல் லண்டனில் நடாத்திய ஓர் கூட்டத்திற்கு சென்றிருந்தேன். அங்கு
சிவலிங்கம் என்பவர் சிறப்புரையாற்றினார். இவர் (வயசு) மூத்த இடதுசாரி அரசியல்வாதி, அரசியல் ஆய்வாளர், என்றெல்லாம் சிலரால் வர்ணிக்கப்படுபவர். அங்கு திரண்டிருந்த விரல் விட்டு எண்ணக்கூடிய சனத்திரளில் எல்லோரும் கொட்டாவி விட்டுக்கொண்டு இருக்க நான் மூக்கில் விரலை வைக்காத குறையாய் அவரை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.

Institutional Racism Stupid!

On the 2nd of January 2006 five young Tamils were killed and two were wounded in the Tamil East. They were all students and on holiday. At the time of the killing they were in a Sri Lankan Army (SLA) run high security zone. Thus the local community blamed the Sri Lankan security forces for this war crime. The Sri Lankan institutions denied this and a cover up was organised.

On the 5th of August the same year fifteen young Tamils who were working for the French humanitarian organisation, Action Contre la Faim (ACF) were shot and killed in a SLA controlled area. Local Tamil community and the International ceasefire monitors, Sri Lanka Monitoring Mission (SLMM) blamed the SLA for the massacre. The then SLMM head Ulf Henricsson, called these killings a "committed act of assassination" and "one of the most serious recent crimes against humanitarian aid workers worldwide."

Again Sri Lankan institutions denied this and a cover up was organised.

Since ACF, an international Non Governmental Organisation and the SLMM got involved in the second massacre it became a headache for the Sri Lankan President.

Thus he ordered a Commission of Inquiry (COI) promising transparency and justice. By doing so he tried to make his anti Tamil war related human rights violations into a law and order problem.
 
For months no one heard of anything from the COI.

Again the ACF and others complained.

Later a body called the International Independent Group of Eminent Persons (IIGEP) was asked by the international community to observe and comment on the COI actions.

புத்தாண்டில் தமிழீழம்

மலரவிருக்கும் புத்தாண்டில் கிழக்கு ஐரோப்பாவில் புதிய தேசமாக கொசோவோ உருவாகவிருக்கிறது. தமிழீழ தேசத்துடன் ஒப்பிடுகையில் மக்கள் தொகையிலும், இடப்பரப்பிலும் சிறிதான கொசோவோவிற்கு உலகநாடுகள் அங்கீகாரம் வழங்குவது, தமிழீழ மக்கள் மத்தியில் ஒரு அங்கலாய்ப்பை ஏற்படுத்துகிறது. இருப்பினும் தமிழீழ தேசம் உருவாவதற்கு எதிராக நியாயப்படுத்தப்பட்ட சில விடயங்கள் கொசோவோ தேசத்தின் உதயத்துடன் அடிபட்டுப் போகிறது என்பதில் நாம் திருப்தியடைந்து கொள்ளலாம்.





 











Syndicate content