வணக்கம்!
கனடாவிலும் ஐரோப்பாவிலும் நடைபெற்ற எழுச்சி நிகழ்வுகளில் உங்களை சந்திக்கக்கிடைத்ததில் மகிழ்ச்சியாயிருக்கிறம். இத்தனை சனத்திரளிலும் எங்களைத்தேடி வந்து ஒரு பேப்பர் பற்றி விசாரித்தற்கும் உங்கள் கருத்துக்களை வெளிப்படையாகவே குறிப்பிட்டமைக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
அந்தவொரு இரவு அதிர்ந்த வேட்டுக்கள் , ஆட்களைத் தின்ற எறிகணைகள் எல்லாமே அடுத்தநாள் சமாதிகோவிலடி, குரும்பசிட்டி , கட்டுவன் பகுதிகளையும் இராணுவம் ஆக்கிரமித்துக்கொள்ள எங்கள் ஊரில் வடக்குப்பகுதியும் வெறிச்சோடியது. புதுமைகளையெல்லாம் அள்ளித்தந்ததாகச் சொல்லப்படும் சிவகாமியம்மனும் , வயிரவரும் , நாகபூசணியம்மனும் தனித்து நிற்க நாங்கள் பிரிந்து தூரமாகிப்போனோம்.
24.11.07 மதியப்பொழுதில் கேட்டகதறல் ஒலி இன்னும் காதுகளில் ஒலித்தபடியேஇருக்கிறது. புலத்தில் வெள்ளையர்களின் சாவு நிகழ்வுகள், தமிழரின் சாவு நிகழ்வுகள் எனஅவ்வப்போது கலந்து கொண்ட சமயங்களில் ஏற்படாத துயரும் தாக்கமும் 24.11.07 அன்றுயேர்மனிய நகரம் ஒன்றில் நடந்த சாவுநிகழ்வில் ஏற்பட்டது.
45வயதில் தனது வாழ்வை முடித்துக் கொண்டஒரு கணவனின் சாவின் பின் தனது வாழ்வை நினைத்து அந்தரித்துக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்த அநீதியே இப்பத்தியில் பதிவாகிறது.
கடந்த வாரம் லண்டனில் நடந்த மாவீரர் நாள் நிகழ்வு முன்னரைவிட எழுச்சியாக நடைபெற்றது. பணிக்குரிய நாளான செவ்வாய் பகலில் இருபத்தைந்தாயிரம் மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இம்முறை சிறப்புரையாற்ற வந்தவர் பேராசிரியர் சு.ப. வீரபாண்டியன். தன்னால் பாலா அண்ணாவைப்போல் தலைவரது உரைக்கு பொழிப்புரை வழங்கமுடியாது எனத்தன்னடக்கத்துடன் கூறிவிட்டு, தலைவரது பேச்சையொட்டி சில கருத்துக்களை தெரிவிப்பதாகக்கூறித் தனது உரையை நிகழ்த்தினார்.
புலம்பெயர்ந்து ஆண்டுகள் பல கடந்து விட்டாலும், இந்த வாழ்க்கைக்கு நாங்கள் பழக்கப்பட்டு இங்கு காலூன்றிவிட்டது போன்று மற்றவர்களுக்குத் தெரிந்தாலும். உள்ளத்தில்; எங்கள் சொந்த ஊருக்கு திரும்பிப் போகவேண்டும் என்ற தவிப்பு இருக்கத்தான் செய்கிறது. அடுத்தவருடம் போவோம், தப்பினால் அதற்கு அடுத்தவருடம் போவோம் என்ற எதிர்பார்ப்புடன் ஆண்டுகள் பல கழிந்து விடுகிறது. ஒன்றில் பொருளாதாரம் இடம் கொடுக்காது அல்லது எமது தேசத்தின் நிலவரம் அதற்கு தோதாக அமையாது. இந்த அங்கலாய்ப்புடன், எதிர்பார்ப்புக்கள் நிறைவேறாமல் நரைப்பருவம் எய்திய பலரை நாம் சந்தித்திருக்கிறோம்.
உலகெங்கிலும் அடக்கி ஒடுக்கப்பட்ட சிறுபான்மை இனங்கள் எழுச்சி பெற்று தங்கள் உரிமைகளுக்காக போராடும் இக்காலத்தில் மலேசியா வாழ் தமிழர்களும் தமது உரிமையை வேண்டி வீதிக்கு இறங்கியிருக்கிறார்கள். அண்மையில் சுமார் ஐம்பதாயிரம் பேர் கலந்து கொண்ட அவர்களது அமைதி ஊர்வலமொன்று முன் அனுமதி பெறவில்லை (உண்மையில் மலேசிய அரசு அனுமதி வழங்கவில்லை) எனக்காரணங்காட்டி மலேசியக் காவற்துறையால் மூர்க்கதனமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இவ்வார்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களை ஊடகங்கள் இந்தியர்கள் என அடையாளங்காட்டினாலும். இவர்களில் பெரும் பகுதியினர் இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள்.
"பிரஜை ஒவ்வொருவரும் அவர் சட்டத்தின் கீழ் குற்றவாளி என்பது ஐயத்துக்கு அப்பால் நிரூபிக்கப்படும்வரை அப்பாவியாகவே கருதப்படவேண்டும்' என்பதுதான் பொதுவான சட்டவிதி; ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைமை; இயற்கை நீதி.
ஆனால் தலைநகர் கொழும்பிலும் புற நகரங்களிலும் தமிழர்கள் என்பதற்காகவே ஆயிரக்கணக்கில் ஆட்கள் கைது செய்யப்படுவதையும், அரசு "பயங்கரவாதிகள்' எனக் குறிப்பிடும் விடுதலைப் புலிகளுக்கும் இவ்வாறு கைது செய்யப்படுவோருக்கும் இடையில் தொடர்புகள் ஏதும் இல்லை என்பது நிரூபிக்கப்படும்வரை இவ்வாறு கைது செய்யப்படுவோர் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதையும் நோக்கும்போது தமிழர் விவகாரத்தில் மட்டும் மேற்படி இயற்கை நீதி மாறிவிட்டதோ என்ற சந்தேகம் எழுகின்றது.
இலங்கைத்தீவில் தேசிய இனங்களுக்கிடையிலான முரண்பாடு என்பது ஒரு உள்நாட்டு விவகாரம் என இன்னமும் யாராவது கூறிக்கொண்டிருப்பார்களேயானால் அவர்களையிட்டு நாம் சிரத்தை கொள்ளத் தேவையில்லை. இருப்பினும் தங்களது வசதி கருதி சில நாடுகள் இன்னமும் இப்படிக்கூறி தங்களது பொறுப்புக்களை தட்டிக்கழித்துக்கொண்டு மறுபுறம் சிறலங்கா அரசுடன் உறவுகளைப் பேணி தமது வர்த்தக, பிராந்திய நலன்களை பேணிவருகின்றன.
7 - 12 - 2007 வெள்ளிக்கிழமை
வெளிவந்து விட்டது ஒரு பேப்பர் 83
சந்தாதாரருக்கான பிரதிகள் அஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளன. பின்வரும் நாடுகளில் வசிப்போர் உங்கள் பகுதிகளில் உள்ள தமிழ் கடைகள், தமி்ழ்பாடசாலைகள், தொழிலகங்கள், வணக்கத்தலங்கள் போன்ற இடங்களில் ஒரு பேப்பர் பிரதிகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
- கனடா
- இங்கிலாந்து
- சுவிற்சலாந்து
- பிரான்ஸ்
- ஜெர்மனி
இணையப்பதிப்பை 12ம் திகதியிலிருந்து பார்வையிடலாம்.
Recent comments
1 year 20 weeks ago
1 year 21 weeks ago
1 year 26 weeks ago
1 year 29 weeks ago
1 year 29 weeks ago
1 year 29 weeks ago
1 year 30 weeks ago
1 year 33 weeks ago
1 year 38 weeks ago
1 year 43 weeks ago