நெஞ்சார ஒன்று சொல்கிறேன். சென்ற ஞாயிறு (4-5-08) நடந்த ஒரு நிகழ்வு, என்வாழ்வில் நேர்ந்த மிக அபூர்வமான தருணங்களில் ஒன்று. நெஞ்சு இனிக்க அந்த நாள் என்னில் பதிந்தது. “ஒரு பேப்பர்” இல் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள் எழுதுகிற வி.சபேசன் (ஜேர்மனி) அவர்கள் கலைநிதியை வதுவை புரிந்த அந்தத் தருணத்தையே மிக்க அபூர்வமான தருணம் என நான் குறிப்பிட்டேன்.
சனிக்கிழமை (3-5-08) காலையில் நாதன் அவர்களின் மகிழ்வுந்தில், கோபி, பார்த்தி, இளங்கோ, நாதன், நான் என ஒருபேப்பர்காரன்கள் புறப்பட்டோம். மணிவாசகனை விட்டுப் போவது வருத்தமாக இருந்தது.
பிரகாசமான காலை வெய்யிலில் தெளிவான தார்ப் பாதையில் பயணம் குதுகலத்துடன் அமைந்தது. அரசியல், சினிமா என்று அளவளாவியதில் எட்டுமணிப் பயணம் சோர்வைத் தரவில்லை என்று சொல்லக் கூடாது. இன்பகரமாய் இருந்தது. அப்படித்தான் சொல்ல வேண்டும்.
சென்ற 'ஒரு பேப்பர்' இல் புதிய உலகம் செய்ய புறப்பட்ட என் மைந்தன் பற்றி எழுதியிருந்தேன். அந்தத் துயரம் ஆறவில்லை. ஆறாது. காலம் இந்தக் காயத்தை மாற்றும் என்றுதான் நம்பினேன். காயங்கள் தன் கொடூரங்களால் என்னைத்தின்றபடி இருக்க விட்டுவிட்டது காலம்.
ஆறுதற் சொல் கோர்த்து நெஞ்சுக்கு ஆதரவாய் தோழி ஒருவள் மடல் எழுதியிருந்தாள். "புதியதோர் உலகம் படைக்கப் புறப்பட்ட கலைஞன் நீங்கள்.எப்படித்துவளலாம்? கூடாது! நிமிர்ந்திருங்கள்'' என்று மூன்று பக்க மடலில் ஒருவரி. வார்த்தைகள் பல என்னைக் கூச்சமெழச் செய்த போதும் என் நெஞ்சுக்கு மன ஆறுதல் தந்தன. நன்றி தோழி. மிக்க நன்றி.
நினையாப் பிரகாரம் மேலும் ஒரு துயர் சூழ்ந்தது. எம் புலம்பெயர் தமிழருக்கு என்றிருந்த காட்சி ஊடகம் தடைப்பட்டுப் போனது. ரிரிஎன் என்ற தமிழ் ஒளியின் பணிகள் முடக்கப்பட்டன.
நினைக்க இனிக்கின்ற ஒருவர் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி. உணர்வு தொட்டு அவர் உரையாடல் இருக்கும். உறவின் சகல பரிமா
ணங்களும் அவர் பேச்சில் தொனிக்கும். அவர் என்னை மைந்தனாகப் பார்த்தாரா, மாணவனாகப் பார்த்தாரா எனக்கு எதிலும் தெளிவு இல்லை.
ஓம் அவரிடம் நான் மாணவனாக இருந்தேன். அது ஒரு சில ஆண்டு. ஆயினும் இற்றைவரை அவர் மைந்தனாக வாழ்கிறேன். அவர் மூன்று மகள்களும் `அண்ணா' என்று கூப்பிடுகின்ற உறவில் திளைத்து நான் அவர் மைந்தனாக வாழ்கிறேன். தமிழை சிறப்புப்பாடமாக யாழ் பல்கலைக்கழகத்தில் நான்கு வருடம் அவரிடம் கற்றுத் தேறினேன். முதுகலைமானிக்கு நாடகமும் அரங்கியலையும் அவரிடம் கற்றேன்.
Recent comments
3 weeks 3 days ago
3 weeks 3 days ago
3 weeks 3 days ago
3 weeks 3 days ago
3 weeks 3 days ago
14 weeks 1 day ago
14 weeks 2 days ago
1 year 5 days ago
1 year 6 days ago
1 year 6 weeks ago