எழுபரிதி

தலையாட்டி போல் இயங்கும் ஒரு தொலை இயக்கி ஊடகவியலாளர்

by:
எழுபரிதி

மாமனிதர் சிவராம் பற்றி, சோமிதரன் எழுதும் தொடரை படிக்கும் போது, அவரது இழப்பு ஈழத்தமிழ் ஊடகத்துறைக்கு, எத்தகைய பாதிப்புகளை ஏறபடுத்தியிருக்கிறது என்பதை உணரக்கூடியதாக இருக்கிறது. உண்மையில் சிவராமின் முக்கியத்துவம் வெகுவாகக் குறைத்தே மதிப்பிடப்படுகிறது. அதற்கு அவர் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தில் (புளொட்)  இணைந்திருந்த போது மேற்கொண்ட சில நடவடிக்கைகள் காரணமாக இருக்கலாம். அவரது தனிப்பட குணவியல்புகள், அல்லது அவர் மீது கொண்ட தொழிற்துறைசார்ந்த பொறாமை, காழ்ப்புணர்வு எனப்பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் ஒரு ஊடகவியலாளனாக, அதுவும் தனது இனத்தின் மீது பற்றுறுதி கொண்ட ஒரு தமிழ்தேசியவாதியாக அவரிடம் நாம் நிறைளையன்றி, எவ்வித குறைகளையும் காணமுடியாது.

இன்னும் எத்தனை காலம்தான் எம்மை ஏமாற்றுவார்கள்?

by:
எழுபரிதி

புலம் பெயர்நாடுகளில் நடைபெறுகிற எழுச்சி நிகழ்வுகளுக்கு தமிழ்நாட்டிலிருந்து பேச்சாளர்கள் அழைக்கப்படுவதும், அவர்களது உணர்ச்சிபூர்வமான அழகு தமிழிலான பேச்சினைக் கேட்கவென மக்கள் திரளுவதும், பேச்சினைக் கேட்டு சிலிர்த்துப் போவதும் இங்கு வழக்கமாக இருந்தது. ஆண்டு தோறும் நடைபெறும் மாவீரர் தின நிகழ்வுகளுக்கு யார் யாரெல்லாம் தமிழ்நாட்டிலிருந்து சிறப்புரையாற்ற வருகிறார்கள் என்பதனை அறிவதில் பலரும் ஆர்வம் காட்டுவார்கள். ஜேர்மனிக்கு அவர் போகிறாராம், பிரான்சுக்கு இவராம், சுவிசுக்கு அவராம் என மக்கள் ஆர்வத்துடன் பேசிக் கொள்வதை அவதானித்திருக்கிறேன்.

விடிவைத் தருமா தமிழக எழுச்சி?

by:
எழுபரிதி

சிறிலங்கா அரசு தமிழ்மக்கள் மீது நடாத்தும் யுத்தத்தில், இந்தியா சிறிலங்கா அரசை ஆதரித்துவருவதும், ஆயுத-தளபாட வழங்கல், படைப்பயிற்சி, கடல் கண்காணிப்பு, புலனாய்வுத்தகவல்களை பகிர்ந்து கொள்தல் எனப்பல்வேறு வழிகளில் உதவிவருவதும் இப்போது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. ஆனால் தமிழ்நாட்டைப்பொறுத்தவரை நிலமை நேரெதிராக இருக்கிறது என்று கொள்ளலாம். போருக்கான உதவி அல்லது பொருளுதவி எதனையும் தமிழ்நாட்டிலிருந்து பெற்றுக் கொள்ளமுடியாவிட்டாலும், தமிழ்நாட்டு மக்களின் தார்மீக ஆதரவு ஈழத்தமிழ் மக்கள்பால் உள்ளதனை உணரமுடிகிறது.

சிறிலங்கா அரசுடன் சேர்ந்தோடும் மேற்குலகம்

by:
எழுபரிதி

கடந்த ஒரு பேப்பரில் வெளிவந்த எனது “குறிவைக்கப்படும் ஈழத்தமிழர்களும், மேடைக்கு அலையும் புத்திஜீவிகளும்” என்ற கட்டுரையில் மலேசியாவில் நடைபெற்ற மாநாடு பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். இம்மாநாட்டில் தான் கலந்து கொண்டமை தொடர்பாக பேராசியர் செல்வா செல்வநாதன் “ஒரு பேப்பர்” க்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார். மேற்படி மாநாட்டில் அவர் தனது சொந்தச் செலவில் கலந்து கொண்டதாகவும், அங்கு தன்னால் முடிந்தவரையில் தமிழர் பக்க நியாயங்களை விளக்கியதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குறிவைக்கப்படும் ஈழத்தமிழர்களும் மேடைக்கு அலையும் புத்திசீவிகளும்

by:
எழுபரிதி

ஈழம் என்ற வார்த்தையும், அது குறித்து நிற்கும் அங்கீகரிக்கப்படாத ஒரு புவியியல் அலகு தொடர்பான பதிவுகளும் இணைய தளப் பக்கங்களை நிறைத்துக் காணப்படுவது, கல்வியாளர் சிலருக்கு அதனை ஒரு ஆய்வுப்பொருளாக ஆக்கியுள்ளது. இவ்விடயத்தினை ஆய்வு செய்த ஒரு சிங்களக் கல்வியாளர், இல்லாத ஒரு தேசத்திற்கு இவ்விதம் மாயத்தோற்றம் கொடுக்கப்படுவது புலம்பெயர்ந்த தமிழர்கள் சிலரின் இயலாத்தனத்தின் வெளிப்பாடு எனக்குறிப்பிட்டிருக்கிறார். வேறு சில கல்வியாளர்களோ,  இது விடுதலைப்புலிகளினதும் அவர்களது ஆதரவாளர்களினதும் பிரச்சாரம் என்கிறார்கள்;.

தலைமைக்கு குறிவைக்கும் ‘எதிரிகளும்’ அவர்களுடன் உறவு கொண்டாடும் ‘நண்பர்களும்’

by:
எழுபரிதி

அண்மைக்காலமாக செய்தி ஊடகங்கள் மூலமாக திணிக்கப்படும் ஒரு கருத்து, தமிழ் மக்களிற்கான தலைமையை தேசியத்தலைவர் திரு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் ஏற்றிருக்கும்வரை இலங்கைத்தீவில் அமைதி ஏற்படப்போவதில்லை என்பது. இந்தக் கருத்துக்களை பரப்புவர்களின் பட்டியலில், சிறிலங்கா இராணுவத்தளபதி சரத் பொன்சேகா, கோத்தபாய இராஜபக்ச, டக்ளஸ் தேவானந்தா முதல் கொணடு இந்திய இராணுவ அரசியல் ஆய்வாளர்கள், அவர்களுக்க வால் பிடிப்பவர்கள் என பலரும் அடங்குவர். இவர்களது அபிலாசைகள் வெவ்வேறாக இருந்தாலும் தத்தம் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்வதில் இவர்களுக்கு தமிழர் தலைமை முட்டுக்கட்டையாக இருக்கிறது என்பதனை உணர்ந்து கொள்ளலாம்.

பாலா அண்ணா இல்லாத ஒரு வருடம்

by:
எழுபரிதி

Anton Balasinghamகடந்த வாரம் லண்டனில் நடந்த மாவீரர் நாள் நிகழ்வு முன்னரைவிட எழுச்சியாக நடைபெற்றது. பணிக்குரிய நாளான செவ்வாய் பகலில் இருபத்தைந்தாயிரம் மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இம்முறை சிறப்புரையாற்ற வந்தவர் பேராசிரியர் சு.ப. வீரபாண்டியன். தன்னால் பாலா அண்ணாவைப்போல் தலைவரது உரைக்கு பொழிப்புரை வழங்கமுடியாது எனத்தன்னடக்கத்துடன் கூறிவிட்டு, தலைவரது பேச்சையொட்டி சில கருத்துக்களை தெரிவிப்பதாகக்கூறித் தனது உரையை நிகழ்த்தினார்.

Pizza தின்ன பிரித்தானியாவுக்கு வந்த கருணா ..

by:
எழுபரிதி

தணிந்துபோயிருந்த கருணா விவகாரம், அவர் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன் சுடு பிடித்துள்து. முன்னர் கருணாவை கிழக்கின் விடிவெள்ளியாகப் பார்த்த ஊடகப் பண்டிதர்களெல்லாம், இப்போது அது திடிரென பட்டுப்போனதைப் பற்றிப் பேசுகிறார்கள். அதற்கு காரணமானவர்களைப் பற்றியும் எழுதுகிறார்கள். கருணாவை, சிறிது காலத்துக்கு மட்டும் தோன்றி சந்தடியில்லாமல் மறைந்து போகும் வால்வெள்ளி போல் பார்த்த பெரும்பான்மையான தமிழ்மக்ளைப் பற்றி யாரும்  கவனத்தில் எடுப்பதாகத் தெரியவில்லை. அவர்களது ஆதரவில்லாமல் எத்தனை நாளைக்குத்தான் கருணா தன் கூத்தினை நடாத்த முடியம்?

நீலன், லக்ஸ்மன், கேதீஸ்… புத்திஜீவிகளா? புறம்போக்குகளா?

by:
- எழுபரிதி -

முன்னர் வீரகேசரி பத்திரிகையில் செய்தியாளராய் பணிபுரிந்த டேவிட் ஜெயராஜ் என்பவர் தற்போது ரொறொன்ரோ நகரில் வசிக்கிறார். தொலைபேசி வாயிலாகவும் இலத்திரனியல் ஊடகங்கள் மூலமும் கிடைக்கப்பெறும் செய்திகளை வைத்துக்கொண்டு ஏற்கனவே தான் சேர்த்து வைத்திருக்கும் சில தகவல்களையும் சேர்த்து இலங்கைத்தீவில் நடைபெறும் விவகாரங்கள் பற்றி அருகிலிருந்து பார்த்ததுமாதிரி ஆங்கிலத்தில் வாராந்தம் எழுதித் தள்ளுகிறார்.

பிபிசி தமிழ் ஓசை: இது யாருடைய ஓசை?

by:
எழுபரிதி

எண்பதுகளின் ஆரம்பத்தில் ஈழவிடுதலைப்போராட்டம் முகிழ்த்துக் கொண்ட நேரத்தில், அரசபயங்கரவாதத்தின் கொடுரங்களால் மக்கள் அல்லல்பட ஆரம்பித்தபோது உள்நாட்டில் நடைபெறும் சம்பவங்கள் பற்றிய செய்திகளை சிறிலங்கா அரசு திரித்து வெளியிட்டு வந்தது. அதே சமயம் தங்களை பாதிக்கும் செய்திகளை தணிக்கை செய்து இருட்டடிப்பு செய்து வந்தது. அதுவரை காலமும் செய்திகளை அறிய தமிழர்கள் நாடிவந்த கொழும்பை தளமாகக் கொண்டு இயங்கி வந்த செய்தித்தாள்களும், சிறிலங்கா அரச கட்டுப்பாட்டில் உள்ள இலங்கை வானொலியும் போதுமானதாக இருக்கவில்லை.

ஈழத்தமிழர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ள கைதுகள்

by:
எழுபரிதி

Arunasalam Chrishanthakumarஅண்மைக்காலமாக இலங்கை தீவின் அரசியல் விவகாரங்களில் பிரித்தானிய அரசு அதிக அக்கறை காட்டிவருவது தெரிந்ததே. செஞ்சோலை வளாகத்தின் மீது குண்டுத் தாக்குதல்களை நடாத்தி  தமிழ் மாணவிகளை பலிகொண்ட சம்பவத்தின் பின்னர் மகிந்த ராஜபக்ச பிரித்தானியாவுக்கு பயணம் செய்து அப்போதைய பிரதமர் ரோனி பிளேயரை சந்தித்து உiயாடினார். திரு. பிளேயர் தனது விடுமுறைகாலத்தில் வெளிநாட்டு தலைவர் ஒருவரை சந்தித்தது ஒரு முக்கியம்வாய்ந்த நிகழ்வாக இருந்தபேர்தும் அங்கு பேசப்பட்ட விடயங்கள் வெளியிடப்படவில்லை. இந்த நிகழ்வுகளின் தொடர்ச்சியாக அண்மையில் பிரித்தானிய பாராளுமன்றத்தில் நடாத்தப்பட்ட இலங்கைதீவு தொடர்பான விவாதம், சுனாமி நிதியுதவியை தற்காலிகமாக நிறுத்தியமை  போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

புலத்திலும் மூக்கை நுளைக்கிறது றோ!

by:
எழுபரிதி

சிறிலங்கா அரசபடைகள் தமிழின அழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ள இன்றய நிலையில் ஈழத்தமிழர்கள் இந்தியாவின் தார்மீக ஆதரவை எதிர்பார்த்து நிற்கிறார்கள். பதிலுக்கு இந்தியா என்ன செய்கிறது என்பதுதான் தெளிவற்ற விடயமாகவுள்ளது. இருப்பினும் எம்மவர் மத்தியில் இந்தியாவிடமான எதிர்பார்ப்பு குறைந்தபாடில்லை. தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் ஈழத்தமிழருக்கு சற்று ஆதரவான முறையில் பேசிவிட்டாலேபோதும், தமிழ் ஊடகங்கள் அவற்றை மிகைப்படுத்திக்கூற, இனியென்ன இந்தியா நல்ல சமிக்ஜையை காட்டிவிட்டது என்று நாங்கள் நிம்மதியாக உறக்கத்தில் ஆழ்ந்துவிடுகிறோம்.

இலங்கைத் தீவின் விவகாரங்களில் பிரித்தானியா அக்கறை!

பிரித்தானிய நாடாளுமன்றில் நடைபெற்ற சிறிலங்கா தொடர்பான விவாதம்

இலங்கைத்தீவில் தொடரும் வன்முறைகள் தொடர்பாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் முதல் தடவையாக கடந்த புதனன்று (மே 2) ஒரு விவாதம் நடைபெற்றது.

முக்கியமான விவாதங்கள்போலன்றி மிகக்குறைவான உறுப்பினர்களே இவ் விவாதத்தில் கலந்து கொண்டபோதும் தமிழ்மக்கள் வாழும் பகுதிகளை பிரதிநிதிப் படுத்தும் நாடாளுமன்ற உறுப் பினர்களில் பெரும்பாலானோர் பங்கேற்று தமது கருத்துக்களைத் தெரிவித்தனர்.

ஏறத்தாள 4 மணி நேரம் நடைபெற்ற இவ்விவாதத்தில் பங்கேற்றவர்கள் வழங்கிய  பல்வேறுபட்ட கருத்துக்களின் சுருக்கத்தை இங்கு தருகிறோம்.





 











Syndicate content