பேப்பர் 074

- 6 யூலை 2006 வெள்ளிக்கிழமை -

வணக்கம்!
ஒரு பேப்பர் நான்காவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் இத்தருணத்தில் எம்மை திட்டித்தீர்த்து கொண்டிருக்கும் ஒரு சிலரை நினைக்கிறோம். அவர்களுக்கு நன்றி சொல்லுகிறோம். நீங்கள் இல்லாட்டா நாங்கள் சோர்ந்து போயிருப்போம். பேப்பரும் ஏனோ தானோ எண்டு வந்திருக்கும். ஐம்பத்திரண்டு பக்கங்கள் கொண்டதாக, ஐந்து நாடுகளிலை வெளிவருவதும் நடந்திருக்காது. ஆகையால் தொடர்ந்து திட்டுங்கோ.

கரும்புலிகள் - ஒரு பார்வை

by:
வி சபேசன்

  ஜுலை 5 தமிழீழத்தில் கரும்புலிகள் தினம் நினைவுகூரப்பட்டது. அதே நேரம் கரும்புலிகள் தினத்தை முன்னிட்டு விடுதலைப் புலிகள் தெற்கில் பெரும் தாக்குதலை நடத்தக்கூடும் என்ற அச்சத்தில் சிறிலங்கா முழுவதும் படையினர் உச்சபட்ச உசார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.

  விரைவில் கருப்பு ஜுலையும் வருவதால் சிறிலங்காப் படைகள் தொடர்ந்தும் பீதியிலேயே இருக்கப்போகின்றன.

  முதலாவது கரும்புலித் தாக்குதல் நடைபெற்று இந்த ஜுலையுடன் இருபது ஆண்டுகள் முடிவுற்றுள்ளன. தமிழீழ விடுதலைப் போராட்டம் நெருக்கடிகளை சந்திக்கின்ற காலங்களில், அந்த நெருக்கடியில் இருந்து போராட்டத்தை மீட்பவர்கள் பெரும்பாலும் கரும்புலிகளாகவே இருக்கின்றனர்.

பொதுவுடைமைவாதிகளின் தமிழ்ப் பற்று

by:
இளங்கோ

சில ஆண்டுகளுக்கு முன் பாரிஸ் நகரில் நடந்த கூட்டம் ஒன்றுக்குச் சென்றிருந்தேன். அடிக்கடி பாரிஸ் லாச்சப்பலில் சந்திக்கும் நண்பர் ஒருவரின் அன்பான அழைப்பை ஏற்று அங்கு சென்றிருந்தேன். அங்கிருந்த நம் தமிழ் உறவுகளுடன் உரையாடத் தொடங்கியபோது அவர்கள் அனைவரிடமும் ஒரு பொதுத் தன்மை இருந்ததைக் காணக் கூடயதாக இருந்தது. ஆம் அனைவருமே மார்க்சிய லெனினய தத்துவங்களில் ஊறித் திளைத்திருந்தார்கள்.

அலசுவாரம் 36

by:
மட்டைக்கிளப்பான்

தன்னைப்பற்றி மற்றவர்;கள் என்ன கணிப்பிட்டு வைத்திருக்கிறார்கள், என்ன விமர்சனங்கசை; செய்கிறார்கள் என்பதை விமர்சிக்கப்படுபவர்; சொல்வதில் சங்கடங்கள் அதிகமில்லை.  நாம் மற்றவர்களைப் பற்றி என்ன அபிப்பிராயம் கொண்டிருக்கிறோம் என்பதை வெளிப்படையாகச் சொல்வதில்தான் பலருக்கு மன உழைச்சல் வர வாய்ப்பிருக்கிறது.  பிரதேசங்களைப் பற்றிய ஆய்விலும்; இது பொருந்தும்.

இந்தத் தொடரை விரும்பி வாசிக்கும் ஒரு நண்பர் கேட்டார் ~என்ன! நீங்கள் ஒரு மாதிரியாக எழுதுகிறீர்கள். உங்கள் பிரதேசத்தைப்பற்றி மற்றவர்கள் சொல்வதையெல்லாம் ஏன் எழுதுகிறீர்கள் வீணாக நீங்களே ஏன் உங்களைத் தாழ்த்திக்கொள்கிறீர்கள|; என்று.

Things to learn from the great film Thavamai Thavamirunthu

by:
Flora Stanislaus

Thavamai ThavamirunthuIn this article I would like to elaborate on the important things that have been shown in this film. This is a really sentimental film, which shows all kinds of emotions, and for example how parents should be treated.

ஈழத்தமிழர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ள கைதுகள்

by:
எழுபரிதி

Arunasalam Chrishanthakumarஅண்மைக்காலமாக இலங்கை தீவின் அரசியல் விவகாரங்களில் பிரித்தானிய அரசு அதிக அக்கறை காட்டிவருவது தெரிந்ததே. செஞ்சோலை வளாகத்தின் மீது குண்டுத் தாக்குதல்களை நடாத்தி  தமிழ் மாணவிகளை பலிகொண்ட சம்பவத்தின் பின்னர் மகிந்த ராஜபக்ச பிரித்தானியாவுக்கு பயணம் செய்து அப்போதைய பிரதமர் ரோனி பிளேயரை சந்தித்து உiயாடினார். திரு. பிளேயர் தனது விடுமுறைகாலத்தில் வெளிநாட்டு தலைவர் ஒருவரை சந்தித்தது ஒரு முக்கியம்வாய்ந்த நிகழ்வாக இருந்தபேர்தும் அங்கு பேசப்பட்ட விடயங்கள் வெளியிடப்படவில்லை. இந்த நிகழ்வுகளின் தொடர்ச்சியாக அண்மையில் பிரித்தானிய பாராளுமன்றத்தில் நடாத்தப்பட்ட இலங்கைதீவு தொடர்பான விவாதம், சுனாமி நிதியுதவியை தற்காலிகமாக நிறுத்தியமை  போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

படம் காட்டுறம் வாங்கோ

by:
சாத்திரி

இதுவும் 80களின்ரை ஆரம்ப காலகட்ட கதைதான் இந்த காலகட்டம்தான் தொலைகாட்சி பெட்டியும் இலங்கையிலை பரவலா அறிமுகமாக தொடங்கின கால கட்டம். அந்த கால கட்டத்திலை கோயில் திருவிழா. கலியாணவீடு .சாமத்தியவீடு எண்டு எல்லா மங்கல விழாவிலையும் ரிவியிலை விடிய விடிய அஞ்சு . ஆறு படம் ஓடுறகாலம்.ஆரம்பத்தில் இந்த ரிவி டெக் ஆகியவற்றை சில வீடியொ கடையளும் வாடைகைக்கு விடுவினம் அவையளிட்டை போய் சொன்னா சரி. ரிவி டெக் ஆகியவற்றை ஒரு வானில் கொண்டு வந்து இறக்கி படத்தை போட்டு செற்பண்ணி விட்டிட்டு படங்களை மாத்துறதுக்காகவே ஒருதர் விடிய விடிய காவல் நிப்பார்.

அரசியல் செயற்பாடுகள் புதுவடிவம் எடுக்கவேண்டும்!

மாறிவருகின்ற உலக ஒழுங்கில் விடுதலைப்போராட்டங்களின் நியாயத்தன்மை மறுக்கப்பட்டு வருகிறது. இன்று விடுதலைப்போராளி என்ற சொல்லே தகாத வார்த்தையாக கருதப்படும் நிலை தோன்றியுள்ளது. எது விடுதலை இயக்கம் எது பயங்கரவாத இயக்கம் என்று பிரித்துப்பார்க்கிற நிலையில் ஆதிக்க வல்லரசுகள் இல்லை. இந்நிலை தொடருகின்றபோது ஒடுக்கப்படட மக்களே அவலத்துக்கு உள்ளாகி வருகிறார்கள். இங்கு ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் விதிவிலக்காக அமைய முடியாது. அதனையிட்டு  மேற்குலக அரசுகள் சந்தேகங் கொள்வதும், எச்சரிக்கை அடைவதும் தவிர்க்க முடியாதது ஆகிவிடுகிறது.





 











Syndicate content