வி. சபேசன்

தமிழ்நாட்டின் எழுச்சி!

by:
வி.சபேசன்

தமிழீழப் போராட்டம் ஒரு முக்கியமான கட்டத்தை அடைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டிலிருந்து ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான குரல்கள் பலமாக ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இந்தக் குரல்கள் தமிழீழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் வாழும் தமிழர்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளன. இதுவரை ஈழத் தமிழர்கள் பிரச்சனையில் பாராமுகமாக இருந்த கட்சிகளும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பத் தொடங்கியிருப்பது இதில் ஒரு முக்கியமான விடயம். தமிழ் நாட்டில் வாழும் தமிழர்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக திரும்பியுள்ளதை இது எடுத்துக் காட்டுகின்றது.
 

மே 21 பற்றிய நினைவில் எழுதியது

உலகையே நடுங்க வைத்த சர்வாதிகாரி ஹிட்லரை தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஜேர்மனியின் சர்வாதிகாரியாக 1934இல் இருந்து 1945 வரை ஆட்சி புரிந்த ஹிட்லர் நடத்திய அழிவுகள் எண்ணில் அடங்காதவை. ஹிட்லர் உருவாக்கிய இரண்டாம் உலக யுத்தத்தில் ஐரோப்பாவில் மட்டும் 39 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டிருந்தார்கள்.

ஹிட்லரின் நாசிப் படைகள் செய்த படுகொலைகள் மனிதகுலத்தை இன்று வரை நடுங்கச் செய்பவை. எக் குற்றமும் செய்யாத 6 மில்லயனுக்கும் அதிகமான யூத மக்கள் ஹிட்லரின் படைகளால் கொல்லப்பட்டார்கள். யூதர்களை கொல்வதற்கு என்றே உருவாக்கப்பட்ட பிரத்தியேக முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட யூத மக்கள் அங்கு பல விதமான சித்திரவதைகளின் ஊடாக கொல்லப்பட்டார்கள்.

சிங்களம் சந்திக்கப்போகும் வினளவுகள்

by:
வி. சபேசன்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னமேயே கொலை செய்யப்பட்டு பிணமாகிப் போய்விட்ட புரிந்துணர்வு ஒப்பந்ததம் தற்பொழுது மகிந்தவின் அரசு அடக்கமும் செய்யப்பட்டு விட்டது. கொலை செய்ததும் சிங்கள அரசுதான். அடக்கம் செய்ததும் சிங்கள அரசுதான்.
  விடுதலைப் புலிகள்தான் முதலில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறினார்கள் என்றும், அதிகளவிலான யுத்தநிறுத்த மீறல்களை விடுதலைப் புலிகள் மேற்கொண்டார்கள் என்றும் சிறிலங்கா அரசும், அதனுடைய ஒட்டுக் குழுக்களும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றார்கள். ஆனால் இது எந்த வகையிலும் உண்மை இல்லை.

சுதந்திரத்திற்கான குரலை ஒலித்துக் கொண்டேயிருப்போம், ஓய விடமாட்டோம்

by:
வி. சபேசன்

தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்செல்வன் அவர்களுடைய வீரச்சாவு உலகத் தமிழர்களின் மனங்களில் பெரும் வலியினை உருவாக்கி விட்டது. அனுராதபுர வான்தளத்தினை விடுதலைப் புலிகள் தகர்த்து அழித்த வெற்றிச் செய்தியினால், பெரும் உவகையோடு இருந்த தமிழ் மக்கள் இடிந்து போய் இருக்கிறார்கள்.

  அனுராதபுர வான் தள அழிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், அதற்காக தமது இன்னுயிர்களை ஈந்தளித்த கரும்புலிகளின் வீரச் சாவும், அக் கரும்புலிகளின் புகழுடல்களை அவமானப் படுத்த முனைந்த சிங்கள அரசின் ஈனச் செயலும் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்கனவே சோகத்தை படரச் செய்திருந்தது. இந்த நேரத்தில் பிரிகேடியர் தமிழ்செல்வன் அவர்கள் வீரச் சாவடைந்தார் என்ற செய்தி எல்லோரையும் ஒரு முறை உலுப்பி விட்டது.

கிழக்கு நிலவரம்!

கருணா மீண்டும் ஓடிவிட்டதாக செய்திகள் வருகின்றன. கருணா அடிக்கடி ஓடுவதால் எங்களுடைய ஊடகங்களுக்கும் சலிப்பு வந்து விட்டது. கருணா இம் முறை ஓடியதைப் பற்றி யாரும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஒரு சிறிய செய்தியாக மட்டுமே வெளியிட்டிருந்தார்கள். மக்களும் பெரிதாக அதுபற்றி அக்கறை செலுத்தவில்லை.


  இம் முறை கருணாவை "கருணா குழுவில்" இருந்தே இடைநீக்கம் செய்து விட்டதாக சொல்லப்படுவதுதான் கருணாவின் ஓட்டத்தில் உள்ள ஒரு புதிய விடயம். இது பற்றி பலவாறு கூறுப்படுகிறது. கருணா உண்மையிலேயே நீக்கப்பட்டுவிட்டதாக ஒரு தரப்பினரும், சர்வதேசத்தை அமைதிப்படுத்துவதற்கு நடக்கும் ஒரு நாடகம் என்று தரப்பினரும் கருத்துக் கூறுகிறார்கள்.

சாத்தியம்தானா தமிழீழம்?

by:
வி. சபேசன்

நியுயோர்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் 62வது கூட்டத் தொடர் நடைபெற்று வருகின்றது. இந்தக் கூட்டத் தொடரினை ஒட்டி விடுதலைப் புலிகள் ஐக்கியநாடுகள் சபைக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருக்கிறார்கள். தமிழ் மக்களின் இறைமையை அங்கீகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே விடுதலைப் புலிகளால் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த இடத்தில் "இறைமை" பற்றி சற்று ஆராய்தல் பொருத்தமாக இருக்கும். தமிழீழம் என்கின்ற தனியரசு எவ்வாறு உருவாகும், எந்த நாடுகளும் அங்கீகரிக்காத போது அது எப்படிச் சாத்தியமாகும் போன்ற கேள்விகளும் பலரிடம் உள்ளது. இந்தக் கேள்விக்கான பதிலை புரிந்து கொள்வதற்கும் "இறைமை" பற்றி புரிந்து கொள்வது அவசியம்.

மகாத்மா காந்திக்கும் ராகுல் காந்திக்கும் என்ன சம்பந்தம்?

by:
வி. சபேசன்

இன்றைக்கு அரசியலில் கொள்கைகளை மாற்றிக் கொள்வது என்பது ஒரு சாதரண விடயம். மக்களின் ஆதரவை பெறுவதற்காகவும் தக்கவைப்பதற்காகவும் கொள்கையை மட்டும்தான் அரசியல்வாதிகள் மாற்றுவர்கள் என்று அல்ல. மதத்தை மாற்றிய தலைவர்கள் இருக்கிறார்கள். பெயரை மாற்றிய தலைவர்கள் இருக்கிறார்கள். இனத்தை மாற்றிய தலைவர்கள் இருக்கிறார்கள்.

சிலாவத்துறை நாடகம்

by:
வி சபேசன்

மன்னார்    கிழக்கைக் கைப்பற்றிவிட்டதாக சொல்லிக்கொள்ளும் சிறிலங்கா அரசு, வடக்கிலும் மன்னாரின் சிலாபத்துறைப் பகுதியை கைப்பற்றிவிட்டதாக அறிவித்துள்ளது. சிலாபத்துறை, அரிப்பு போன்ற பகுதிகளை கடந்த 01.09.07 அன்று சிறிலங்காப் படைகள் சென்றடைந்தன. இதன் மூலம் வடக்கிலும் விடுதலைப் புலிகளின் ஒரு பகுதியை கைப்பற்றி விட்டதாக சிறிலங்கா அரசு தம்பட்டம் அடித்து வருகிறது.


  கிழக்கை முற்றுமுழுதாகக் கைப்பற்றி விட்டதாக சிறிலங்கா அரசு சொல்வதிலும் உண்மை இல்லை. வடக்கில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிலாபத்துறையை கைப்பற்றிவிட்டதாக சொல்வதிலும் உண்மை இல்லை.

விடுதலைப் புலிகளின் தாக்குதல் - எங்கே? எப்பொழுது?

விடுதலைப் புலிகள் சிறிலங்காப் படைகளுக்கு எதிராக பாரிய தாக்குதலை நடத்தப் போகின்றார்கள் என்கின்ற பரபரப்பான எதிர்பார்ப்பு பல மட்டங்களில் நிலவி வருகின்றது.

"மன்னாரில் விடுதலைப் புலிகள் படையணிகளை குவிக்கின்றார்கள்", "மணலாறு மீது தாக்குதல் நடத்தப் போகிறார்கள்" போன்ற செய்திகளையும் ஆய்வுகளையும் கொழும்பில் இருந்து வரும் சிங்கள, ஆங்கில ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. இந்த ஆய்வுகளை தமிழ் ஊடகங்களும் மறுபிரசுரம் செய்ய, அதைப் படித்த தமிழ் மக்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு அதிகரித்துப் போய் கிடக்கிறது.

மாத்தையாக்களும் கருணாக்களும்!

by:
வி. சபேசன்

கிழக்கில் விரைவில் உள்ளுராட்சி சபைத் தேர்தலையும் மகாண சபைத் தேர்தலையும் நடத்தவதற்கு சிறிலங்கா அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. மகாண சபை தேர்தல் நடைபெறுவது சந்தேகம் என்றாலும் உள்ளுராட்சிச் சபைத் தேர்தல் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  அவ்வாறான ஒரு தேர்தலில் விடுதலைப் புலிகளின் ஆதரவைப் பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியட முடியாதை நிலை நிலவுகிறது. அதனால் கருணா குழுவே அதிக இடங்களை கைப்பற்றக் கூடிய நிலைமை அங்கு ஏற்பட்டுள்ளது. தமிழினத்திற்கு துரோகம் இழைக்கின்ற கருணா குழுவிற்கு கிழக்கு மக்கள் வாக்களிப்பார்களா என்ற ஆச்சரியாமான கேள்வி எழலாம். வாக்களிப்பதற்கு சந்தர்ப்பங்கள் உண்டு என்பதுதான் அதற்கு பதில்.

ஆப்பிழுத்த நிலையில் அரசாங்கம் ..

by:
வி. சபேசன்

கிழக்கில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் மிகுதியாக இருந்த பகுதியாகிய குடும்பிமலையையும் (தொப்பிக்கல) சிறிலங்காப் படையினர் கைப்பற்றி விட்டனர்


ஏறக்குறைய மூன்று மாதங்கள் செய்த சண்டைகளி;ன் மூலம் குடும்பிமலையின் மையப்பகுதியை சிறிலங்காப் படையினர் கடந்த 11.07.07 அன்று அடைந்தனர்.


சிறிலங்காப் படைகள் முன்னேற்றிய போது விடுதலைப் புலிகளின் தரப்பில் இருந்து எவ்வித எதிர்ப்பும் வரவில்லை. விடுதலைப் புலிகள் தேவையற்ற இழப்புக்களை தவிர்க்கும் பொருட்டு வேறு பகுதிகளை நோக்கி நகர்ந்து விட்டனர்.


குடும்பிமலையில் நிலைகொண்டிருந்ததாக கருதப்பட்ட பல நூற்றுக் கணக்கான போராளிகளும் தளபதிகளும் சிறிலங்காப் படைகளின் முற்றுகையை உடைத்துக் கொண்டு, பெரும்பாலான ஆயுத தளபாடங்களோடு வேறு பகுதிக்கு நகர்ந்து சென்ற விட்டார்கள்.

வழி தெரியாது திணறும் சிறிலங்காப் படைகள்!

  சிறிலங்காப் படைகளின் நிலை தற்பொழுது பெரும் கேள்விக்குறியாக மாறி உள்ளது. விடுதலைப் புலிகளுக்கு பாதகமான பகுதிகள் என்று கருதுகின்ற பகுதிகளில் மட்டும் தாக்குதல் நடத்தி வந்த சிறிலங்காப் படைகள் அடுத்த கட்டத்திற்கு நகரமுடியாமல் நிற்கின்றன.

  கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதத் தொடக்கத்தில் கிழக்கில் சம்பூரை சிறிலங்காப் படைகள் கைப்பற்றிய பிறகு வடக்கிலும் ஒரு வெற்றியை பெற நினைத்தன. ஒக்ரோபர் மாத ஆரம்பத்தில் முகமாலையி, கிளாலி படைத் தளங்களில் இருந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கி முன்னேறின. ஆனையிறவைக் கைப்பற்றி விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஒரு பெரும் வெற்றியை பெறுவது சிறிலங்கா அரசின் நோக்கமாக இருந்தது.

கனவு பலிக்கட்டும்!

by:
வி சபேசன்


 
ஏறக்குறைய 12 வருடங்களுக்கு முன்பு சிங்களப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர்களின் கலாச்சாரத் தலைநகரான யாழ்ப்பாணம் மீண்டும் தமிழர்களின் கைகளில் வர வேண்டும் என்ற ஏக்கம் நிறைந்த கனவு ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு.
 
இந்தக் கனவு பலிப்பது போன்ற சம்பவங்கள் சில நேரங்களில் நடந்திருக்கின்றன. ஆனால் கடைசியில் அவைகள் கைகூடவில்லை.
 
1999ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆரம்பமான "ஓயாத அலைகள் 3" யாழ் நகரின் வாசல் வரை வந்தது. பல கட்டங்களாக நடந்த "ஓயாத அலைகள் 3"இல் விடுதலைப் புலிகளின் படையணிகள் அரியாலையில் தரையிறங்கி யாழ்ப்பாண நகருக்கு மிக அண்மையாக நின்றன. அத்துடன் சாவகச்சேரி போன்ற பகுதிகளையும் கைப்பற்றி இருந்தன.
 

கருணா இல்லாத கருணா குழு!

by:
வி. சபேசன்

தமிழீழ மக்களுக்கு பெரும் வரலாற்றுத் துரோகம்
 இழைத்து மூன்று வருடங்கள் நிறைவு பெற்றுவிட்ட நிலையில் கருணா இப்பொழுது மீண்டும் வெளிநாட்டிற்கு தப்பி ஓடி விட்டதாக செய்திகள் வருகின்றன.  இம் முறை அவர் ஓடியதற்கு காரணம் விடுதலைப் புலிகள் அல்ல. கருணா குழுவினரே கருணாவை வேட்டையாடுவதற்கு தேடி வருகிறார்கள்.


கருணா விடுதலைப்புலிகளிடம் இருந்து பிரிந்து தனி அமைப்பை ஆரம்பித்த பொழுது, தமிழர் விரோத சக்திகள் எல்லாம் விழுந்தடித்து அவருக்கு ஆதரவு அளித்தன. மற்றைய ஒட்டுக்குழுக்களை விட கருணா குழுவிற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தன. அதற்கு மிக முக்கிய காரணம் கருணா பிரதேசவாதத்தை முன்வைத்ததுதான்.





 











Syndicate content