கடந்தவாரம் கொழும்பில் உள்ள விடுதிகளில் தங்கியிருந்த நு}ற்றுக் கணக்கான தமிழர்கள் சிறிலங்காப்படைகளினால் அவர்களது விருப்பத்திற்கு மாறாக அங்கிருந்து பேருந்துகள் மூலம் தமிழீழப்பகுதிகளுக்கு நாடு கடத்தப்பட்டிருந்தனர். இச்சம்பவத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டிருக்கும் அனைத்துலக ஊடகங்கள், இதனை இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை என வர்ணித்திருந்தன. மேற்கு நாடுகளும் இங்குள்ள மனிதவுரிமை அமைப்புக்களும்கூட தமது கண்டனத்தை தெரிவித்திருந்தன.
இத்தனைக்கும் தமிழ்மக்கள் மீதான இனவழிப்பு நடவடிக்கை என்பது புதியதொரு விடயமல்ல. ஈழப்போர் நான்கு எனக்குறிப்பிடப்படும் தற்போது நடக்கும் பிரகடனப்படுத்தப்படாத யுத்தத்தில் கடந்த 12 மாதங்களில் மட்டும் நாலாயிரத்துக்கு அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள், நு}ற்றுக்கணக்கானோர் சிறிலங்காப்படைகளால் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்ட்டிருக்கிறார்கள். தமிழ் கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள் என சமூகத்தில் முன்னணியிலிருப்போர் பலர் சிறிலங்கா புலனாய்வுத்துறையினராலும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் ஒட்டுப்படைகளாலும் இலக்கு வைத்துக் கொல்லப்பட்டு வருகிறார்கள். தமிழ் வர்த்தகர்கர்கள் கடத்தப்பட்டு அவர்களிடமிருந்து பெருந்தொகையான பணம் அறவிடப்பட்டு வருகிறது.
தமிழீழப்பகுதிகளில் சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்படும் இவ்வாறான மனிதவுரிமை மீறல்களை ஈராக்கில் நடைபெறுவது போன்ற “பயங்கரவாதத்துக்கு எதிரான போர்” ஆக சித்தரிக்க முனையும் மேற்குநாட்டு அரசுகளும், ஊடகங்களும், தமது வர்த்தக நலன்களுக்காக கொழும்பை இவ்விதமான சம்பவங்கள் நடைபெறாத பிரதேசமாக வைத்திருக்க முனைகின்றன. இதுவே இத்தகைய கண்டனங்களுக்கு அடிப்படை காரணியாக அமைகின்றது.
இவ்விடயத்தில் விரைந்து செயற்பட்டு உயர் நீதிமன்ற தடையுத்தரவை பெற்றுக் கொண்டதன் மூலம் Centre for Policy Alternatives என்ற முழுக்க முழுக்க வெளிநாட்டு நிதியுதவியில் இயங்கும தன்னார்வ நிறுவனம் தனது இருப்பை நியாயப்படுத்தியுள்ளது. பதிலுக்கு சிறிலங்காவின் பிரதம நீதியரசர் சரத் சில்வா “இனச்சுத்திகரிப்புக்கு” தற்காலிக தடையுத்தரவை வழங்கி சிறிலங்காவின் நீதித்துறை சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்கிறது என நிறுவ முனைந்துள்ளார். வடக்கு-கிழக்கு மாகாணங்களின் பிரிப்பு, சுனாமி மீள்கட்டுமானத்துக்கான கட்டமைப்பை செயற்படாமல் தடுத்தமை போன்ற தீர்ப்புக்களை இதே நீதியரசரே மேற்கொண்டார் என்பது இங்கு நோக்கத்தக்கது.
இந்நாடகத்திற்கு மத்தியில் கொழும்பு தங்களுக்கு எப்போதுமே பாதுகாப்பான பிரதேசமாக தொடர்ந்திருக்கும் என்ற கனவில் இருந்த தமிழர்களின் துயில் கலைக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் கொழும்பில் முதலீடுகளை மேற்கொண்டு சிறிலங்காவின் பொருளாதாரத்துக்கு உதவுவதனை நிறுத்துவதற்கான சு+ழ்நிலை உருவாகியிருக்கிறது.
Recent comments
2 weeks 3 days ago
7 weeks 2 days ago
7 weeks 4 days ago
10 weeks 2 days ago
12 weeks 23 min ago
12 weeks 31 min ago
12 weeks 31 min ago
22 weeks 1 day ago
22 weeks 1 day ago
22 weeks 3 days ago