கேள்வி: எனக்கு முப்பது வயதாகிறது (பெண்). நான் சிறுநீர் கழிப்பது தொடர்பாக மிகவும் நீண்ட நாட்களாக அவதிப்படுகிறேன். தரும் மருந்து சில காலத்திற்கு சுகம் தருகிறது. பின்பு மீண்டும் வந்து விடுகிறது. சிறுநீர் கழிக்கும் பொழுது எரிவு வேதனை ஏற்படுகின்றது. பெண்ணுறுப்பு பகுதி முழுவதுமே அசௌகரியப்படுவதாக உணர்கிறேன். இது எனது மனநிலையையும் குழப்பிவிடுகின்றது. தயவு செய்த ஏதாவது வழி சொல்வீர்களா?
பதில்: நீங்கள் சிறுநீர்ப்பையில் பற்றீரியாத் தொற்று ஏற்பட்டதால் (ஷட்சூஞ்கூஞ்கூசூ) ஏற்படும் நோவு வீக்கம் போன்றவற்றால் அவதிப்படுகிறீர்கள் எனக்கருதுகிறேன். இது பொதுவாக பெண்களுக்கே அதிகம் ஏற்படுகின்றது. ஆயினும் ஆண்களுக்கும் பிள்ளைகளுக்கும் ஏற்படக்கூடும். சிறுநீர் கழிக்கும்பொழுது எரிவுடன் கூடிய வேதனை ஏற்படும்.
இந்நிலைக்கு முதன்மைக் காரணியாக ஒரு வகை பற்றீரியாவே காணப்படுகின்றது. ஆசன வாயிலில் காணப்படக்கூடிய இப்பற்றீரியா இலகுவில் சிறுநீர்ப்பையை சென்றடைந்துவிடுகிறது. பற்றீரியா பரம்பல் பெண்களில் ஆசன வாயும் சிறுநீர்த் துவாரமும் அருகாமையில் அமைந்திருப்பதனால் அதிகமாக காணப்படுகிறது. இப்பகுதியில் அரிப்பெடுத்த உணர்விற்கு குறிப்பிட்ட சிலமருந்துகள் புளித்த அல்லது அமிலத்தன்மை கொண்ட உணவுகள் நீரிழப்பு சிலசமயங்களில் உடலுறவு கொள்ளுதல் போன்றன தூண்டிவிடும் காரணிகளாகின்றன.
எனவே போதியளவு நீர் குடிக்க வேண்டும். (குறைந்தது நாளுக்கு 2.5 லீட்டர் நீர்). அமில தன்மையில் குறைந்த உணவுகளான மரக்கறி வகைகளை அதிகமாகவும் இறைச்சி வகைகள் வாசனைச் சரக்குகள் ஆகியவற்றைக் குறைத்தும் உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். மூலிகைச் சேர்மானங்களான "மஞீஹ மசுசூகூ இச்ஙுசிஙீக்ஞூ'' என்னும் மருந்தையும் சிபார்சு செய்வேன். இச் சேர்மானம் நோவையும் எரிவையும் தணிப்பதோடு யக்கீக்ஞ்ஹஙீ சூகூஙீகூஷஹ என்னும் குறைநிரப்பியையும் சேர்த்தெடுக்கும் பொழுது சிறுநீர்ப்பைச்சுவர் சிறுநீர்வழி குழாய்ச்சுவர் வலுப்படுத்தப்படுவதனால் இது மீண்டு வருவதும் தவிர்க்கப்படுகின்றது.
Recent comments
2 weeks 3 days ago
7 weeks 2 days ago
7 weeks 4 days ago
10 weeks 2 days ago
12 weeks 36 min ago
12 weeks 44 min ago
12 weeks 44 min ago
22 weeks 1 day ago
22 weeks 1 day ago
22 weeks 3 days ago