need to write

உலக வங்கியிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை. அதனால் இலங்கை தவிக்கிறது. அந்தக் கடனைக் கட்ட கடனுதவி செய்யும்படி பிரிட்டனை சிங்கள அரசு கேட்டுக் கொண்டது. பிரிட்டனும் சம்மதித்தது. ஆனால், இப்போது அந்தக் கடனைத் தருவதற்கு இல்லை என்று கைவிரித்து விட்டது. என்ன காரணம்?

நீங்கள் வாங்குகின்ற பணத்தை, ஈழத்தை எரிப்பதற்காகத்தான் பயன்படுத்துகிறீர்கள். ஆயு தங்கள்தான் வாங்குகிறீர்கள். எனவே முதலில் நாட்டில் அமைதியை ஏற்படுத்துங்கள். விடுதலைப் புலிகளுடன் பேசுங்கள் என்று பகிரங்கமாக அறிவித்துவிட்டது. அதே சமயத்தில், ஈழ மக்களின் இயக்கத்திற்கு ஆதரவான நடவடிக்கைகளை பிரிட்டன் தடை செய்திருக்கிறது. ஆனாலும் ஈழத்தில் சிங்கள இனவாத அரசு நடத்தும் மனித வேட்டைகளைக் கண்டிக்கிறது.

அமெரிக்காவோடு இலங்கை ராணுவ ஒப்பந்தம் செய்திருக்கிறது. ஈழமக்கள் இயக்கத்திற்கு ஆதரவாக நிதி திரட்டுவதை அமெரிக்கா தடை செய்திருக்கிறது. ஈழ இயக்கத்தின் தூதர்களாகச் செயல்படுகிறவர்கள் என்று பலரைக் கைது செய்திருக்கிறது. அதே சமயத்தில், ஈழ மக்களின் கோரிக்கைகள் சம்பந்தமாக விடுதலைப்புலி களுடன் பேசுங்கள் என்று அமெரிக்க அரசுப் பிரதிநிதி அண்மையில் ராஜபட்சேயைச் சந்தித்து அறிவுரை கூறினார்.

அவர் ஈழப்பிரதேசத்தில் சுற்றுப் பயணம் செய்தார். மக்களைச் சந்தித்தார். ஈழப் போராளி களின் பிரதிநிதிகளையும் சந்தித்தார். சிங்கள இனவாத அரசு தமிழ்ப் பரப்பை எப்படி மயான பூமிஆக்கியிருக்கிறது என்பதனைக் கண்டார். அதன் பின்னர், கொழும்பு திரும்பினார். ராஜபட்சேயைச் சந்தித்தார். ஈழத்தை பட்டினிக் கொடுஞ் சிறையாக மாற்றியிருப்பது நியாயமா? என்று கேட்டார்.

மனித இனத்தின் சாதாரண உரிமைகளுக்குக் கூட சமாதி எழுப்பியிருக்கிறீர்களே என்றார். இறுதியாக, விடுதலைப் புலிகளுடன் பேசுங்கள் என்றார். இதுவும் இந்த வாரச் செய்திதான்.சிங்கள இனவாத அரசின் கோரிக்கையை ஏற்று ஐரோப்பிய யூனியன் நாடுகள் விடுதலைப் புலிகளின் இயக்கத்தைத் தடை செய்திருக்கின்றன.

பயங்கரவாத இயக்கம் என்று அறிவித்தன. ஆனால், விதிக்கப்பட்ட தடையை விலக்கிக் கொள்வது பற்றி சென்ற வாரம் சிந்திக்கத் தொடங்கியிருக்கின்றன. ஈழ மக்களின் கோரிக்கை களைப் பரிசீலிக்கவே சிங்கள இனவாத அரசு மறுக்கிறது.

ராஜபட்சே பரிபாலனம் செய்ய வந்த நாள் முதலாய்ப் பேச்சுவார்த்தைக்கான கதவுகளை இறுக அடைத்துவிட்டது. போர் முனையில் தீர்வு காணமுடியும் என்று நம்புகிறது.

அதனால் உள்நாட்டு யுத்தம் தொடரவே செய்யும் என்று ஐரோப்பிய யூனியன் நாடுகள் கருதுகின்றன. இத்தனைக்கும் இந்த நாடுகள் சிங்கள இனவாத அரசிற்குத் தேவையான ஆயுதங்களை அளித்த நாடுகள்தான்.

எப்படி சிங்கள இனவாத அரசு ஓர் இனத்தையே அழிக்க அநியாய யுத்தம் நடத்துகிறது என்பதனை ஈழத்தில் பயணம் செய்யும் எந்த நாட்டினரும் உணரவே செய்கிறார்கள். அவர்களுடைய மன சாட்சிகள் பேசுகின்றன.

ஐயோ! இலங்கையின் உள்நாட்டு விவகாரங் களில் இவர்கள் தலையிடுகிறார்கள் என்று ராஜ பட்சே புலம்புகிறார்.

ஈழத்தில் மனித உரிமைகள் மரித்து வருகின்றன என்று ஏற்கெனவே ஐ.நா.விற்கான மனித உரிமை அமைப்பு அறிவித்திருக்கிறது.

இப்படி சிங்கள அரசு எல்லா முனைகளிலும் தனிமைப்பட்டு வருகிறது.

ஈழ மக்களுக்கு எந்த உரிமையும் கூடாது என்பதில் புத்த பிக்குகள் தெளிவாக இருக்கிறார் கள். அவர்களுடைய தொண்டர்களாக சிங்கள இனவாதிகள் இருக்கிறார்கள். இவர்களை மீறி ராஜபட்சேக்களால் செயல்பட முடியாது.

ஈழப் போராளிகளுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு என்ற இந்தியாவின் யோசனையை இன்று வரை ராஜபட்சேக்கள் செயல்படுத்தவில்லை.

அதற்குப் பதிலாக உள்நாட்டு யுத்தத்தில் இந்தியாவை இழுத்து விடுவதற்கான திட்டங் களைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு அமைதி என்கிறது இந்தியா. இன்றைக்கு இந்தியாவின் இந்தக் குரலை அமெரிக்கா, பிரிட்டன், கனடா, நோர்வே, ஐரோப்பிய யூனியன் நாடுகள் ஓங்கி ஒலிக்கின்றன.

ஈழ மக்களின் கோரிக்கைகளுக்கு என்ன தீர்வு என்று, அந்த நாடுகள் கேட்கத் தொடங்கி இருக்கின்றன. இல்லை. ஆயுதம் ஆயுதம் என்கிறது சிங்கள அரசு.

போர்முனையில் புலிகளை வெற்றி கொள்ள முடியாது என்பதால்தான், ஈழப்பிரச்னைக்கு என்ன தீர்வு என்று பல்வேறு நாடுகள் கேட்க ஆரம்பித்திருக்கின்றன.

பயங்கரவாத இயக்கம் என்று எந்த விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு பிரிட்டன் தடை விதித்ததோ, அதே பிரிட்டன் ஒரு நன் முயற்சியைத் தொடங்கி இருக்கிறது.

பிரிட்டன் நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சிகளும் ஒரு குழுவை அமைத்திருக்கின்றன.

சிங்கள அரசு விடுதலைப் புலிகள் சமரசத்திற்கு முயலும் நார்வே நாடு உள்பட மூன்று அமைப் புகளின் பிரதிநிதிகளை அந்தக் குழு அழைக்கிறது. முத்தரப்பு மாநாட்டை நடத்தப் போகிறது.

இனப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட ஈழப் பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்ய பிரிட்டன் நாடாளுமன்ற அனைத்துக் கட்சி குழு விரும்பு கிறது. இப்படி காற்று திசை மாறி வீசத் தொடங்கி இருக்கிறது. விரைவில் விடியும்.

- வடிவேல்

Comments

ஈழப்படகை

ஈழப்படகை நாம் எடுத்து செலுத்துமட்டும் அதன் திசையை மாற்றி மாற்றித்தான் ஓட்டும் சர்வதேசம், இது தானே விடுதலை போர்களுக்கே உரித்தான வரலாறு.

பிரித்தானியா பாராளுமன்றம் என்பதை விட அரசியல் ஆராய்ச்சி மன்றம் எனக்குறிப்பிடலாம். தமிழர் பிரதிநிதிகளைத் தடை செய்து விட்டு தமிழ் ஆதரவாளர்களை உள்ளே போட்டு விட்டு, அதன் பின் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணப் போகிறார்களாம் தமிழரையே அழைக்காமல்.

இங்கே சர்வதேச ஒற்றுமை ஒன்றில் மட்டும் தான் ஓங்கி நிற்கிறது அனைத்து நாடுகளுமே இலங்கை அரசாஙத்துக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ போருக்கான ஆயத்தங்களுக்கு முண்டு கொடுத்துக் கொண்டு அங்கே சமாதானமும் மலர வேண்டும் என்று வாய்ப்பேச்சும் கொடுக்கின்றன.

சமாதானப் புறாவையே வறுத்துத் தின்றவர்களிடம் சமாதனம் பேசமுடியுமா..? சிந்தியுங்கள் செயற்படுங்கள்.

சு.சேரன்::.