ஈழத்தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு இரண்டு ஆதங்கங்கள் இருக்கின்றன. ஒன்று, நாற்பது வருடங்களுக்கு முன்னர் தோற்றம் பெற்ற நம்மவர் திரைப்படத்துறை சர்வதேச தரத்துக்கு இல்லாவிட்டாலும் சிங்கள திரைப்படங்களின் தரத்திலாவது ஒரு படத்தை தராதா? மற்றயது, வியட்நாம் போரை, கம்பூச்சிய உள்நாட்டு யுத்தத்தை, அங்கு மக்கள் பட்ட அவலங்களை திரைப்படங்கள் மூலம் வெளியுலகுக்கு தெரியப்படுத்தியது போல் கலைப்படைப்புக்களின் வாயிலாக எம்மக்களின் துயரங்களை உலகமக்கள் அறிந்து கொள்ள வாய்ப்புக் கிட்டாதா? என்பது. இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என்றில்லை. எனினும் காத்திரமான படைப்பு எதுவும் இதுநாள்வரை வரவில்லை. திரைப்படத்துறை வளர்ச்சி பெற்றுள்ள இந்தியாவிலிருந்து எமது அவலங்களை கருப்பொருளாய் எடுத்து நிசத்தை சிதைத்து வியாபார திரைப்படங்கள் மட்டுமே வெளிவந்தன.
தமிழ்த்திரை ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் சர்வதேசத் தரத்தில் ஒரு திரைப்படம் ஈழத்திலிருந்து வெளிவந்திருக்கிறது. அத்திரைப்படத்தின் தலைப்பு “ஆணி வேர்”. குறித்துக் கொள்ளுங்கள் தமிழ்த்; திரைப்படத்துறையில் இது ஒரு பெரும் பாய்ச்சல்.
கடந்த வார இறுதியில் லண்டலிலுள்ள சோகோ திரையரங்கில் இத்திரைப்படத்தின் பிரத்தியேக காட்சி;; ஊடகவியலாளர்களுக்கு காண்பிக்கப்பட்டது. பிரத்தியேக காட்சிகளுக்கென சிறப்பாக அமைக்ப்பட்ட திரையரங்கினை தேர்ந்தெடுத்து தமிழ் ஊடகவியலாளர்களையும் ஆர்வலர்களையும் அழைத்து திரைப்படம் பற்றிய விபரங்களுடன் காட்சியை ஒழுங்கு செய்தமை ஆணிவேர் திரைப்படத் தயாரிப்பாளர்களான தமிழ் திரைக்கண் நிறுவனத்தின் துறைசார் முதிர்ச்சியை எடுத்துக்காட்டியது. காட்சியின் இறுதியில் தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து திரு. திலக் தனது தயாரிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டு நன்றியுரையாற்றினார்.
முழுக்க முழுக்க வன்னி பெருநிலப்பரப்பில் படமாக்கப்பட்டுள்ள இந்த முழுநீளத்திரைப்படத்தை “உதிரிப்பூக்கள்”, “நெஞ்சத்தை கிள்ளாதே” போன்ற பிரபலமான திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் மகேந்திரனின் புதல்வர்; ஜோன் மகேந்திரன் இயக்கியுள்ளார். நந்தா, மதுமிதா, நீலிமா ஆகிய தமிழகக் கலைஞர்கள் முக்கிய பாத்திரமேற்று ஈழத்து கலைஞர்களுடன் இணைந்து திறம்பட நடித்துள்ளனர்.
இதுவும் ஒரு காதல் கதை தான். தமிழகத்தை சேர்ந்த பெண்பத்திரிகையாளர் சந்தியா (மதுமிதா) தனது பத்திரிகைக்கு செய்தி சேகரிக்க யாழப்பாணத்துக்கு வருகிறாள். அங்கு கடமையே கண்ணாக மக்களுக்கு சேவை செய்யும் கோபக்கார இளம் மருத்துவர் நந்தாவை சந்திக்கிறாள், நட்புக் கொள்கிறாள். போரினால்; மக்கள் படும் அவலங்கள் அவளையும் பாதிக்கிறது. அந்த மக்களுடன் ஒன்றிப்போகிறாள். வரலாற்று பதிவாகிவிட்ட யாழ்ப்பாண இடப்பெயர்வு அவர்களையும் பிரித்து விடுகிறது. அவள் தாயகம் செல்கிறாள். மீளவும் அவனைத் தேடியபடி வன்னிக்கு வருகிறாள். திரைப்படத்தின் பெரும்;பகுதி பின்னோக்கிய கதையாக நகருகிறது.
பாடசாலை மாணவி கிருசாந்தி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் உட்பட தமிழர் வரலாற்றின் பல துன்பியல் நிகழ்வுகள்;, அன்றாடம் மக்கள் படும் இன்னல்கள் என்பன எந்த பொய்மைக்கும் இடமில்லாமல் படமாக்கப்பட்டுள்;ளன. யாழ்ப்பாண இடப்பெயர்வு காட்சிக்கு இருபத்திஐந்தாயிரம் பேர் பயன்படுத்தப்பட்டு அந்த நிகழ்வு மிகவும் தத்துரூபமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
எங்கள் தேசம் இத்தனை வனப்புமிக்கதா எனப் பிரமித்துப் போகிறோம். ஒவ்வொரு காட்சியையும் அழகியல் உணர்வுடன் படச்சட்டங்களுக்குள் அடக்கியுள்ளார் இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் சஞ்சை. தமிழக கவிஞர் முத்துக்குமாரின் பாடல் வரிகளுக்கு குரல் கொடுத்துள்ளார் சின்னக்குயில் சித்திரா. இசையமைத்திருப்பவர் சதீஸ்.
நடைமுறை வாழ்வில் கலந்துள்ள அரசியல் தவிர பிரச்சார நோக்கம் எதுமின்றி படத்தை நெறிப்படுத்தியுள்ளார் Nஐhன் மகேந்திரன். முற்றிலும் வன்னியில் படமாக்கப்பட்டுள்ளபோதும் புலி என்ற சொல் ஒரிரு தடவைகள்தான் பாவிக்கப்பட்டுள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
கதாநாயகன் நந்தாவும், நாயகி மதுமிதாவும் ஏற்கனவே சில தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருந்த போதும்; இந்த திரைப்படத்தில புதுப்பிறப்பெடுத்;துள்ளார்கள் என்றே கூறவேண்டும். மாணவி சிவசாந்தியாக வரும் நீலிமா சிறிலங்கா இராணுவத்தால் கொல்லப்பட்ட கிருசாந்தியை கண்முன்னே கொண்டு வருகிறார். ஈழத்தில் தயாரான பல குறும்படங்களில் நடித்த முல்லை Nஐசுதாசன் சிறிய பாத்திரத்தில் நடித்தாலும் தனது இயற்கையான நடிப்பாற்றலை மீளவும் வெளிப்படுத்தியுள்ளார். அதுபோலவே கதாநாயகனின் பாட்டியாக வரும் நடிகையும் அந்த பாத்திரமாகவே மாறிவிடுகிறார்;. “என்ர பேரனை நீங்கள் கலியாணம் செய்யிறிங்களா” என வெகுளித்தனமாக சந்தியாவை (மதுமிதா) கேட்குமிடத்தில், எங்களுர் ஆச்சிமாரை நினைவுபடுத்துகிறார்.
மாங்குளத்தில் மலையைக் காட்டிய புருடாக்கள் போல் இல்;லாமல், உள்ளதை உள்ளபடி சித்தரிக்கும் “ஆணி வேர்” ஓட்டுமொத்த தமிழ்; திரையுலகையும் புது விசையுடன் முன்தள்ளியுள்ளது.
பிரித்தானிய தணிக்கைப்பிரிவினால் 15வயதுக்கு மேற்பட்டவர்களுக்கானதாக தரப்படுத்தப்பட்டிருக்கும் இத்திரைப்படம் எதிர்வரும் 23ம் திகதி முதல் பிரித்தானியாவிலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் திரையிடப்படவிருக்கிறது.
வசதிகள் குறைந்த பிரதேசமொன்றிலிருந்து நவீன தொழில்நுட்பத்தை (HD to cinema) பிரயோகித்து அந்த மண்ணின் மணம் மாறாமல் உருவாக்கப்பட்டிருக்கும் “ஆணிவேர்” உங்கள் மனங்களில் ஆழப்பதிந்து விடும் என்பதில் ஐயமில்லை. நம்மவர் திரைப்படத்திற்கு ஆதரவு தரவேண்டும் என்ற வழமையான வேண்டுகோளினைக் கடந்து, பொருத்தமான காலகட்டத்தில் வெளியிடப்பட்டிருக்கும் தரமான படைப்பு ஒன்றை சுட்டிநிற்பதனையிட்டு மகிழ்வடைகிறேன்.
Recent comments
9 weeks 2 days ago
9 weeks 2 days ago
9 weeks 3 days ago
10 weeks 22 hours ago
10 weeks 22 hours ago
10 weeks 5 days ago
11 weeks 1 day ago
11 weeks 5 days ago
12 weeks 5 days ago
12 weeks 5 days ago