உங்களுடன் .... (1 ஜூன் 2007)

வணக்கம்!   இம்முறை 8 பக்கங்களை சேர்த்து 52 பக்கங்களாக வெளியிடுகிறோம். காவுவதற்கு கஸ்ரமாக இருந்தால் தெரியப்படுத்துங்கோ. இல்லாட்டா தொடர்ந்தும் அதிகரித்த பக்கங்களுடன் ஒரு பேப்பர் வெளிவரும்.

நாஙகள் கடந்த பேப்பரில் சொன்னமாதிரி எமது இணையத்தளம் புது வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. யூனிக்கோட் எழுத்துரு பாவிக்கப்பட்டிருப்பதால் இலகுவில் கூகுளிக்க முடியும். இலகுவில் கட்டுரைகளை தேடிக் கொள்ளவும் உங்கள் கருத்துக்களை பதிவதற்கும் இணையப்பதிப்பில் வசதி செய்யப்பட்டுள்ளது. இனி உங்கள் கருத்துக்களையும் எதிர் வினைகளையும் உடனுக்குடன் எதிர்பார்ப்போம். தற்போது எமது இணையத்தளத்தில் தனித்து கடந்த பேப்பரின் முக்கியமான சில கட்டுரைகளே பிரசுரிக்கப்பட்டிருந்தாலும், விரைவில் முன்பு வெளிவந்த ஆக்கங்கள் அனைத்தும் பிரசுரிக்கப்படும்.

திருமண விளம்பர சேவைக்கு விளம்பரங்களை அனுப்பும்போது விளம்பரதாரர்களின் தொடர்பு விபரங்களை உறுதிப்படுத்தப்படுத்திய பின்னரே அவற்றை பிரசுரத்துக்கு ஏற்றுக் கொள்கிறோம்.  இவ்விளம்பரங்களைப்பற்றி மேலதிக தகவல்களை அறிய விரும்பி நீங்கள் எங்களை தொடர்பு கொள்ளும் போது விளம்பரதாரரின் தொடர்பு இலக்கங்களை எங்கள பணியகத்திலிருந்து பெற்;றுக்கொள்ளலாம். அவ்விலக்கங்களில் உங்களால் அவர்களை தொடர்பு கொள்ள முடியாவிடின் அறியத்தாருங்கள். அதை விடுத்து நம்பரை தந்தாங்கள் ஆனா அடிச்சா ஒருத்தனும் எடுக்கிறானில்லை. ஓரு பேப்பர்காரன்கள் சுத்திறாங்கள் என்று புலம்பித் திரியாதீங்கள். விளம்பரத்தை போட்டவர் கொலிடேயிலை போனா நாங்கள் என்ன செய்யிறது. எதுக்கும் பணியக நேரத்திலை எங்களுடன் தொடர்பு கொண்டு விசயத்தை சொல்லுங்கோ. எல்லாம் சரிவந்து கலியாணத்திலை முடிஞ்சாலும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கோ. கலியாணவீட்டுக்கு வந்து கரைச்சல் தரமாட்டம்.


ஜேர்மனியிலை இருக்கிற ஒரு பேப்பர்ஃஒரு ரேடியோ அபிமானிகளை, அதான் உங்களை சந்திக்க இவ்வார இறுதியில் அங்கு வருகிறோம். வரும் ஞாயிறறுக்கிழமை (ஜூன் 3 ) ஹம் அம்மன் கோவில் தேர்த்திருவிழாவிற்கு வந்தால் எங்களை சந்தி;க்கலாம் ஓசியாய் அன்னதானம் மோர்த்தண்ணி கொடுப்பினம் எண்டால் அந்த இடத்திலை எங்களைக்காணலாம். ஒரு மட்டையை (கிரடிட் காட் அல்ல, ஒரு பேப்பர் என்று எழுதின மட்டை) பிடிச்சுக் கொண்டு நிப்பம் அதுதான் எங்களை கண்டு பிடிக்கிறதுக்கான அடையாளம்.

ஜேர்மனிப் புதினங்களுடன் அடுத்த பேப்பரில் சந்திப்போம்.