இலங்கைத் தீவின் விவகாரங்களில் பிரித்தானியா அக்கறை!

பிரித்தானிய நாடாளுமன்றில் நடைபெற்ற சிறிலங்கா தொடர்பான விவாதம்

இலங்கைத்தீவில் தொடரும் வன்முறைகள் தொடர்பாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் முதல் தடவையாக கடந்த புதனன்று (மே 2) ஒரு விவாதம் நடைபெற்றது.

முக்கியமான விவாதங்கள்போலன்றி மிகக்குறைவான உறுப்பினர்களே இவ் விவாதத்தில் கலந்து கொண்டபோதும் தமிழ்மக்கள் வாழும் பகுதிகளை பிரதிநிதிப் படுத்தும் நாடாளுமன்ற உறுப் பினர்களில் பெரும்பாலானோர் பங்கேற்று தமது கருத்துக்களைத் தெரிவித்தனர்.

ஏறத்தாள 4 மணி நேரம் நடைபெற்ற இவ்விவாதத்தில் பங்கேற்றவர்கள் வழங்கிய  பல்வேறுபட்ட கருத்துக்களின் சுருக்கத்தை இங்கு தருகிறோம்.

டொக்ரர் கிம் ஹொவல்ஸ் (Kim Howells)
மத்தியகிழக்குக்கான வெளியுறவு அமைச்சர் டொக்ரர் கிம் ஹொவல்ஸ் விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில் இந்த விவாதம் சிறிலங்காவைச்சேர்ந்த எந்தக்குழுவினரினதும் வற்புறுத்தலின் பேரில் நடைபெறவில்லை எனக்குறிப்பிட்டார்.

சிறிலங்காவும் விடுதலைப்புலிகளும் வன்முறையில் ஈடுபட்டாலும் பிரித்தானியா தனியே விடுதலைப் புலிகளையே தண்டித்து வருகிறது
2006ம் ஆண்டில் ஜெனிவாவில நடைபெற்ற பேச்சுவார்ததைகளில் உறுதியளித்தபடி இரு தரப்பும் யுத்த நிறுத்தத்தை கடைப் பிடிக்காமையே இன்றய வன்முறைகளுக்கு காரணம் எனத்தெரிவித்த அவர் விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் வன்முறைகளில் ஈடுபடு கிறார்கள் எனக்குற்றஞ்சாட்டினார்.

அவர்கள் கொலைகளிலும், சிறுவர்களை படையில் சேர்வதையும், சுதந்திரமான குரல்களை தடைசெய்வதையும் தொடர்ந்து பொறுத்துக் கொள்ள முடியாது எனவும்  கூறினார். விடுதலைப்புலிகள் மீது விதிக் கப்பட்டுள்ள தடைக்கு ஆதரவாகப் பேசிய அவர் விடுதலைப்புலிகள் வெளிநாடுகளில் நிதி சேகரிப்பது வன்முறையை தூண்டுமே தவிர சமாதானத்தை ஏற்படுத்த போவதில்லை என்றார்.

சிறிலங்காவில் வன்முறையில் ஈடுபடும் மற்றய தரப்பு கருணா குழு என்றும் அவர்களுக்கு சிறிலங்கா அரசின் ஆதரவு இருப்பதாக குறிப்பிட்டாரே தவிர சிறிலங்கா அரச பயங்கரவாதம் பற்றி எதுவும் குறிப் பிடவில்லை.

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கி அவர்களுக்கு அங்கீகாரம் வழங்குவதை தான் ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் இது தற்கொலை குண்டுதாரிகளுக்கும், கொலை காரர்களுக்கும், சித்திரவதை செய்வோருக்கும் பாலியல் பலாத்காரம் செய்பவருக்கும் அங்கீகாரம் வழங்குவது போலாகிவிடும் என்றார். (தற்கொலை குண்டு தாரியை தவிர்த்தால் இவை அனைத்தும சிறிலங்கா படைகளுக்கு பொருந்தும் என்பதை அமைச்சர் அறிவாரோ?) அமைச்சர் ஹொவல்ஸ்  சிறிலங்கா அரசாங்கத்தை சிங்கள அரசாங்கம் என்றே விளித்தார் என்பதைக் குறிப்பிடவேண்டும். மனிதவுரிமை மீறல்களை கண்காணிக்க மகிந்த ராஜபக்சவினால் அமைக்கப்படவிருக்கும் சனாதிபதி ஆணைக்குழுவில் தாங்கள் நம் பிக்கை கொண்டுள்ளதாக கேளவி ஒன்றுக்கு பதிலளிக்கையில் தெரிவித்தார்.

திரு ஜெப்ரி கிளிப்ரன்-பிரவுண்  (Mr. Geoffrey Clifton-Brown) கொன்சவேர்ட்வ் கட்சி
விடுதலைப்புலிகளுக்கு எதிரான நிலைப் பாட்டை தனது பேச்சில் காட்டிய திரு. கிளிப்ரன் பிரவுண். அவர்களை ஐஅர்ஏ வரிசையில் வைத்து பார்த்தார். சிறிலங்கா அரசபடைகளையும் துணைப்படைகளையும் பாராட்டிய அவர். அவை மனிதவுரிமை விடயங்களில் அக்கறை காட்டவேண்டும் என்றார். விடுதலைப்புலிகள் மீதான தடையை விலக்குவதில் அவர் உடன்படவில்லை.

இருப்பினும் விடுதலைப்புலிகளுடன் பேச்சு வாரத்தை நடாத்த வேண்டும் என்பதில் தனது கட்சி மற்ற கட்சிகளுடன் உடன்படுகிறது என்றார்.
திரு.அன்று லவ் (Mr. Andrew Love)
 தொழில்கட்சி,  எட்மன்ரன் நாடாளுமன்ற உறுப்பினர் விடுதலைப்புலிகளான தடையை நீக்கும் விடயத்தில் தனது ஆதரவையோ எதிர்பபையோ தெரிவிக்கப்போவதில்லை என கருத்துத்தெரிவித்த அன்று லவ், ஐ.நா. சபையின் மேற்பார்வையில் அனைத்துலக மனிதவுரிமை கண்காணிப்புக்குழு சிறிலங் காவுக்கு அனுப்பப்படவேண்டும் என அபிப் பிராயம் தெரிவித்தார்.

திரு. கீத் வாஸ்  (Mr. Keith Vaz) (Leicester, East) )
இவ்விவாதத்தில் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டவர் திரு. கீத் வாஸ். பிரித் தானியாவில் வாழும் தமிழ் மக்கள் பிரித்தானிய தேசத்துக்கு செய்யும் சேவையினை எடுத் துரைத்த அவர், ஒரு மனிதனுக்கு பயங்கர வாதியாகத் தெரிபவன் இன்னொருவனுக்கு விடுதலைப் போராளியாகத் தெரிகிறான் என்ற புகழடை பெற்ற வாக்கியத்தையும் குறிப்பிடத் தவறவில்லை.
இப்பிரச்சனைக்கான தீர்வு விடயத்தில் பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை முட்டுக் கட்டையாக இருப்பதை சுட்டிக்காட்டிய அவர் அதனை நீக்குவதையிட்டு உள்துறை அமைச்சு பரிசீலிக்க வேண்டும் என்றார்.

திரு. ஜோன் மக்டொனால்ட் (John McDonnell) (Hayes and Harlington) (Labour):
வட அயரலாந்தில் கற்றுக் கொண்டது போன்று. முறையான அங்கீகாரம் அளிக்காமால் விடுதலைப் புலிகளுடன் உத்தியோக பற்றற்ற வகையில் பேசுவதன் மூலம் தீர்வினை எட்ட முடியாது எனக் குறிப்பிட்டார்.
திரு. சதீக் கான் (Mr. Sadiq Khan)  Tooting  தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர தனது தொகுதியில் வாழும் தமிழர்கள் ரூட்டிங் தமிழர்கள் என்பதில் பெருமையடைகிறார்கள் என்றும் ரூட்டிங் நகர மையத்தின் மீள் உருவாக்கத்தில் அவர்களது பங்கு இன்றியமையாதது என்றார்.  அங்கு பொதுச் சேவையில் ஈடுபட்டுள்ள சிவயோகம் அறக் கட்டளை, வெண்புறா நிறுவனம்,
தென்மேற்கு லண்டன் நலன்புரி அமைப்பு ஆகியவற்றையும் தனது உரையில் குறிப்பிட்டார். இங்கு வாழும் தமிழ் மக்களைப் பொறுத்தவரை பிரித்தானிய அரசாங்கம் இலங்கை விவகாரத்தில் பாரபட்சமாக நடந்து கொள்வதாக அபிப்பிராயப்படுகிறார்கள். சிறி லங்கா அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் வன்முறையில் ஈடுபட்டாலும் பிரித்தானிய அரசு தனித்து விடுதலைப்புலிகளை தண்டிப்பது போன்ற நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டு வருகிறது என்றே அவர்கள் கருதுவதாகத் தெரிவித்தார்.

கிறெடிட் காட் மோசடி விடயமாக BBC வெளியிட்ட செய்தியை குறிப்பிட்ட அவர், இவை தமிழ் மக்களை வேதனைப்படுத்துவதாகவும் விரக்தியடையச் செய்வதாகவும் கூறினார்.

திரு. பீற்றர் லப் (Peter Luff) (Mid-Worcestershire) (Con) விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குவது பெரிய காரியமில்லை ஆனால்
தமிழரான முன்னாள் வெளிவிவகார அமைச்சர் கதிர்காமரை கொன்றவர்களை எவ்விதம் தடையை நீக்கி அங்கீகாரம் வழங்க முடியும் எனக் கேள்வி எழுப்பினார்.
அன்றய விவாதத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக பலமான குற்றச் சாட்டுக் களை முன் வைத்தவர்களில் திரு. பீற்றர் லப் அவர்களும் ஒருவர். விடுதலைப்புலிகளின் விமானப்படை, ராஜிவ் கொலை என அடுக்கி கொண்டு சென்ற அவர், தமிழ் நாடு விடு தலைப்படை என்ற அமைப்பினால் தமிழ் நாட்டையும் இலங்கையின் வடக்கு - கிழக்கு பகுதிகளையும் இணைத்து வெளியிடப்பட்ட வரைபடத்தை தான் பார்த்ததாகவும் கூறினார். கிறிஸ்தவ மக்கள் இலங்கையில் பாதிக்கப் பட்டு வருவதாகவும் தெரிவித்தார் இவரது உரையில் தீவிர வலதுசாரிப் போக்கு காணப் பட்டது.

திரு. சைமன் கியூஸ் (Mr. Simon Hughes) (North Southwark and Bermondsey) (LD):

இவ்விவாதத்தில் தமிழர் தரப்பு நியாயங் களை வெளிப்படுத்தியவர்களில் திரு. சைமன் கியூசின் பங்கு முக்கியமானது. விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர் தற் போதுள்ள ஐக்கிய இலங்கை அமைப்பின் மூலம் தீர்வினை ஏற்படுத்த முடியாது எனத் தெரிவித்தார். தமிழர்கள் வேண்டுவது ஸ்கொட்லாந்துக்கு வழங்கப்பட்டுள்ளது போன்று தங்களை தாங்களே ஆட்சி செய்யும் அதிகாரம்.
விடுதலைப் புலிகளுடன் உத்தியோக பற்றற்ற வகையில் பேசுவதன் மூலம் தீர்வினை எட்ட முடியாது இது ஒரு கௌரவமான எதிர்பார்ப்பு என்றார்.

சிறிலங்காவின் இன்றய அவல நிலைக்கு சிங்கள தேசியவாதமே காரணம் என்றும் தமிழ் மக்கள் வேறு வழியின்றி போராட ஆரம்பித்ததாகவும் காலக்கிரமப்படி புள்ளி விபரங்களுடன் எடுத்துரைத்தார் தனது தொகுதியில்  வசிக்கும் சதக் நகர சபையின் பிரதி மேயர் ஆன தமிழ் பெண்மணியை (செல்வி. எலைசா மான்) பயங்கரவாதி என சிறிலங்கா அரச சார்பானவர்கள் குறிப்பிடுவதை கண்டித்த அவர். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப்போராட்டத்துக்கு ஆதரவானவர்கள் மீது இவ்விதம் பழிசுமத்தப்படுவதை சிறிலங்கா அரச சார்பானவர்கள் நிறுத்த வேண்டும். அவர்கள் சனநாயக முறைப்படி சுதந்திரமாக தங்கள் அரசியல் கடமைகளை செய்ய வேண்டும் என்றார்.

திரு. கரத் தோமஸ் (Gareth Thomas) Harrow West

வெளிநாட்டு அபிவிருத்திக்கான பிரதி மைச்சர் திரு கரத் தோமஸ் விவாதத்தை நிறைவு செய்து உரையாற்றுகையில் 2002ம் ஆண்டில் தனது நண்பர் ஒருவருடன் (திரு. தயா இடைக்காடர்) யாழ்ப்பாணத்துக்குச் சென்றதை நினைவுபடுத்தினார்.
சுனாமி நிவாரணத்துக்கென சிறிலங்காவுக்கு பிரித்தானியா வழங்கிய 7 மில்லியன் பவுண்
சில் 500 ஆயிரம் பவுண்ஸ் நிதியை வடக்கு - கிழக்
குக்கு ஒதுக்கியமையையும் அது அங்கு
செலவளிக்கப்படவில்லை எனத்தெரிவித்தார்.
முன்னாள் வடஅயர்லாந்துக்கான செய லாளர் திரு போல் மேர்பி, Islington North பாராளுமன்ற உறுப்பினர் திரு. ஜெரமி கோர்பின், Richmond Park  பாராளுமன்ற உறுப்பினர் செல்வி. சுசான் கிராமர், Croydon, Central பாராளுமன்ற உறுப்பினர் திரு. அன்று பெலிங், சச்சுஞ்கு-ரக்சூஞ் North-West Cambridgeshire  பாராளு மன்ற உறுப்பினர் திரு. சைலேஸ் வாரா, Walthamstow பாராளுமன்ற உறுப்பினர் திரு. நீல் ஜெராட், ;>  Lewisham West  பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஜிம் டோவ்ட், Ilford South பாராளுமன்ற உறுப்பினர் திரு. மைக் கேப்ஸ் ஆகியோரும் விவாதத்தில் கலந்து கொண்டனர்.
- எழுபரிதி