கொண்டாடும் மனசு ......

கொண்டாடும் மனசு .............

நாம் பிறந்த மண்ணிலே ,
நாள்தோறும் குண்டு மழை
போதாதென்று மழை வெள்ளம்
அழுது ஓடிய கண்ணீர் வெள்ளம் ,
தசை பிளந்து ரத்த வெள்ளம் ,
இத்தனைக்கும் பயந்த சன வெள்ளம்
எங்கு ,ஓடி அடைக்கலம் தேடும்
இவை எல்லாம் நம் சனத்தை
ஆட் கொள்ள ,கொண்டாட மனம் வருமா

பட்டியல் நீளும் ,பாதை போன்று
அப்பாவை காணவில்லை ,
அண்ணாவை காணவில்லை ,
பள்ளி சென்ற அக்காவையும்
காணவில்லை ,தகவல் இல்லை
இந்நிலையில் கொண்டாட மனம் வருமா

தினசரியைபார்த்தால் தினம் தோறும்
இணைய தளத்திலும் துயர செய்தி தான்.
இத்தனையும் நடக்கும் போது
கொண்டாட மனம் வருமா ?
அமைதியின் ஏசுவை ,தரிசிக்க
கோவிலிலும் குண்டு மழை ,
கோவில் சிலை (சொரூபம் )களுக்கும் தான்
இந்நிலையில் கொண்டாட மனம் வருமா

கொண்டாட ஒரு காலம் வரும் ,அது வரை
கொண்ட கொள்கை மாறாமல் ,
புலம் பெயர் ,மண்ணில் உள்ளக்கோவிலில்
இறைவனை ,ஏசு பிறப்பை உள்ளத்தில்
மண்ணில் சமாதானம் வர மன்றாடுவோம் . ,

இந்தக் கருத்து nillamathy அவர்களால் மாற்றியமைக்கப்பட்டுள்ளது: நேற்று, 01:11 AM

--------------------
நட்புடன் நிலாமதி
Go to the top of the pageReport Post

Edit Post

Comments

самые

самые популярные шрифты популярные шрифты рефераты по географии скачать реферат по географии nokia mobile manuals fly mobile manuals ykapral2

பிரார்த்தனை என்றாவது பிரச்சனை தீர்க்குமா?

எரிவதை எடுத்தால் கொதிப்பது அடங்கும்,வழிமுறை அங்கு நிச்சயம் உண்டு,ஆயின் நமதான இரங்கலை,வீறாப்பாகமாற்றுவோம்,இழப்பில்லாத,போராட்டமில்லாத,துயரமில்லாத,சோகமேயற்ற,வாழ்வெங்கு கண்டீர்,வரலாறு நமக்கு கைகொடுத்து கூறும் செய்திகள்,அதாவது வரலாற்றில் இழப்பற்ற வெற்றி எங்காவது உதித்தது கண்டோமா?படித்துத்தான் உள்ளோமா?ஒன்றின் இழப்பில்தான் மற்றொன்றின்வாழ்வு,வாழ்வாதாரமேஇதுதான்.ஆகவேசோகங்களைசொந்தம்கொண்டாடாமல்,அதிலிருந்து மீட்சிபெற மானசீக இரங்கலுடன் மாற்றீட்டை யாகிப்போம்,வெல்ல,மலரும் ஈழம்.மன உறுதியை முதலில் உறுதி கொள்வோம்.நயமான நெகிழ்வுடன்.....நன்றியுடனும்ஒன்று மட்டும் எப்போதும் உறுதி தமிழீழ மலர்வின் போது கொண்டாடும் கொண்டாட்டம் தவிர்ந்த எந்த கொண்டாட்டமும் கொண்டு, ஆடும் ஆட்டம் இல்லை.