சர்வதேசப் பயங்கரவாதம், இனவழிப்பு ஆகியவற்றை கையாளும் விடயத்தில், மேற்கு நாடுகளும் அதனுடன் அணி சேர்ந்திருக்கும் மற்றய நாடுகளும், ஒத்தகருத்துடன் செயற்பட்டு வருகின்றன. அவை ஆயுதம் ஏந்திப்போராடும் அரசுகள் சாராத அனைத்து அமைப்புக்களையும் பயங்கரவாத அமைப்புகளாக வகைப்படுத்தி வருகின்றன.
சொந்த நாட்டு மக்களின் மனிதவுரிமைகளினை மீறும் அல்லது இனவழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் அரசுகள் மீது பொருளாதார அழுத்தத்தினைப் பிரயோகிப்பதிலும், மிகுந்த தயக்கம் காட்டப்படுகிறது. சிறிலங்காவிற்கு வழங்கப்பட்டு வருகிற GSP plus எனும் ஏற்றுமதி வரிச்சலுகையை நிறுத்துவதில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கைக்கொண்டுவரும் அணுகுமுறையிலிருந்து இதனை தெரிந்து கொள்ளலாம்.
அரச படைகளுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுக்கள் பயங்கரவாத அமைப்புகளுக்குள் அடக்கப்படவில்லை. இதனை உறுதிசெய்யும் விதத்தில், கிழக்கில், சிறிலங்கா இராணுவதத்துடன் சேர்ந்தியங்கும் துணைக்குழுக்களை வழிக்கு கொண்டுவருவதற்கான, திட்டமிடலில் பங்காற்றியதற்காக, அமெரிக்கத் தூதரகத்தில் மூத்த அரசியல் அதிகாரியாக கடமையாற்றும் மைக்கல் டி ரார் (Michael De Tar) என்பவருக்கு மனிதவுரிமைக்கான விருது இவ்வாரம் வழங்கப்பட்டுள்ளது.
கிழக்கில் துணை இராணுவக்குழுக்களினால் கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைகள் அதிகரித்துச் செல்வதைப்பார்த்தால், மைக்கல் என்பவருக்கு வழங்கிய விருது பொருத்தமற்றது என்பது தெளிவாகும். ஆனால், அமெரிக்கா சிறிலங்காவிற்கு எந்தெந்த வழிகளில் உதவுகின்றது என்பது இந்த விருதின் மூலம் தெரியவருகிறது.
விடுதலை அமைப்புகள் உள்ளிட்ட எல்லா வன்முறை அமைப்புக்களையும் ஒரேவிதமாகக் கையாளும் விடயத்தில், புதிய அமெரிக்க அரசின் வெளிவிவகாரச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும், திருமதி ஹில்லரி கிளின்ரன் அவர்கள், உடன்படவில்லை. வௌ;வேறு நாட்டு பயங்கரவாத (தீவிரவாத) இயக்கங்கள் ஓரே மாதிரியான தந்திரங்களை கையாண்டாலும், அவர்கள் தத்துவார்த்த ரீதியில் வேறுபட்;டவர்களாக இருக்கிறார்கள் எனவும், அதற்கு உதாரணமாக விடுதலைப்புலிகளையும் ஸ்பெயின் நாட்டில் இயங்கும் பாஸ்க் அமைப்பிiரையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அவரது பணிக்காலத்தில், அமெரிக்கா தனது கொள்கைகளில் மாற்றங்களைக் கொண்டுவருமாயின், அது விடுதலை வேண்டி நிற்கும் தேசிய இனங்களிற்கு வாய்ப்பாக அமைவதுடன், சர்வதேசப் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தினையும் இலகுபடுத்தும் என நம்பலாம்.
Recent comments
3 weeks 2 days ago
3 weeks 2 days ago
3 weeks 2 days ago
3 weeks 2 days ago
3 weeks 2 days ago
14 weeks 7 hours ago
14 weeks 1 day ago
1 year 4 days ago
1 year 5 days ago
1 year 6 weeks ago