வணக்கம்!
இது மாவீரர் வாரம் ஆதலால் நாங்கள் எங்களை உற்சாகப்படுத்திக் கொண்டு, ஒரு நாள் முன்னதாகவே பிரித்தானியாவில் பேப்பரை வெளியிடுகிறோம். கனடாவிலை விசேட பதிப்பு ஒண்டு வெளியிடுறம். அதாலை வேலைப்பழு அதிகரிச்சுட்டது. பேப்பரிலை பிழையள் இருந்தால் மன்னியுங்கோ. இதென்ன வழமையான விசயந்தானே எண்டு நீங்கள் சொல்லிறது விளங்குது. இருந்தாலும் சொல்ல வேண்டியது எங்கடை கடமை எல்லோ!
சினிமா நடிகர்களைப்பற்றி தரக்குறைவாக எழுதாதேங்கோ எண்டு ஒரு சில விசிலடிச்சான் குஞ்சுகள் குறைப்படிருக்கினம். ஆரோ தல எண்ட ஆளை நாங்கள் அவமதிச்சுப்போட்டமாம். ஆர் அந்த தல எண்டு எங்கட சினிமாப்பகுதியை கேட்பம் எண்டால் அவையயை பிடிக்கேலாமல் இருக்கு. அவை வேறை கலை நிகழ்ச்சியளிலை பிசியாயிட்டினம்.
ஒரு பேப்பருக்கு ஆக்கங்களை அனுப்புறவை அதை நேரத்துக்கு அனுப்புங்கோ. நீங்கள் கடைசிநேரத்திலை அனுப்ப நாங்கள் இரவிரவாய் அதை ஒழுங்குபடுத்தேக்கை, நித்திரைத் தூக்கத்திலை சரியாய் செய்யாமல்விட எங்கடை ஆசிரியர் குழுவிலை இருக்கிறவை நூற்றெட்டு கேள்வி கேட்டு எங்களை நோகடிக்கினம்.
செல்வா எண்டு எங்கடை வாசகர் ஒராள் ஒரு பேப்பரையும் அதன் குழுவையும் புகழ்ந்து தள்ளி ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அண்டு முழுக்க எங்களுக்கு நித்திரை வரேல்லை. அவ்வளவு மகிழ்ச்சியாயிருந்தது. ஆனா எங்கடை பணிப்பாளருக்கு ஒரு சந்தேகம் இருககு. அதென்னான்டால் தான் நினைச்சு வைச்சு குரங்கைப்பிடிக்க அது என்னண்டு பிள்ளையாராய் வந்ததெண்;டதுதான் அவரின்ரை சந்தேகம்.
வுநநn Pயிநச ஐ நிறுத்தியது தொடர்பாக சில இளசுகள் கவலை தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பிருக்கிறார்கள். அதனை திரும்ப வெளியிடுவது பற்றி யோசிச்சுக் கொண்டு இருக்கிறம். புதுவருசத்திலை பார்ப்போம்.
சில தொழில்நுட்ப சிக்கல்களால், போன இரண்டு பேப்பருமு; எங்கட இணைய தளத்திலை தரவேற்றம் செய்யேல்லை. இந்த பேப்பருடன் சேர்த்து அவையளையும் தரவேற்றம் செய்வோம்.
முந்தியும் சொன்னதுதான் திரும்பவும் சொல்லிறம், நடந்த நிகழ்வுகள் பற்றிய படங்களை அனுப்பக்கிள்ளை தரமான (ர்iபா சநளழடரவழைn) படங்களை அனுப்பிவையுங்கோ. இணையத்தளங்களில் பிரசுரிக்கிற தரம், பதிப்பிற்கு போதுமானதாக இருக்காது.
பின்னை அடுத்த பேப்பரிலை சந்திப்பம்.
Recent comments
1 year 20 weeks ago
1 year 21 weeks ago
1 year 26 weeks ago
1 year 29 weeks ago
1 year 29 weeks ago
1 year 29 weeks ago
1 year 30 weeks ago
1 year 33 weeks ago
1 year 38 weeks ago
1 year 43 weeks ago