தமிழீழப் போராட்டம் ஒரு முக்கியமான கட்டத்தை அடைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டிலிருந்து ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான குரல்கள் பலமாக ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இந்தக் குரல்கள் தமிழீழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் வாழும் தமிழர்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளன. இதுவரை ஈழத் தமிழர்கள் பிரச்சனையில் பாராமுகமாக இருந்த கட்சிகளும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பத் தொடங்கியிருப்பது இதில் ஒரு முக்கியமான விடயம். தமிழ் நாட்டில் வாழும் தமிழர்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக திரும்பியுள்ளதை இது எடுத்துக் காட்டுகின்றது.
தமிழ்நாட்டு மக்களின் உணர்வினை புறந்தள்ள முடியாத நிலையில் அனைத்துக் கட்சிகளும் இருக்கின்றன. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ள தங்கபாலு கூட "இலங்கைத் தமிழர்கள் மீது இந்திய அரசு அனுதாபம் கொண்டுள்ளது" என்பது போன்று அறிக்கை விடுகின்றார். ஈழத் தமிழர்களுக்கு எதிராகப் இனிமேல் தமிழ்நாட்டில் பேச முடியாத ஒரு நிலை தோன்றியிருப்பது தெளிவாகத் தெரிகின்றது.
ஏற்கனவே மதிமுக, பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகளும் திராவிட இயக்கங்களும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வெளிப்படையாக ஆதரிக்கன்றவைகளாக தமிழ்நாட்டில் இருக்கின்றன. இந்தக் கட்சிகளும் இயக்கங்களும் ஈழத் தமிழர்களுக்காக பல போராட்டங்களையும் நடத்தியிருக்கின்றன. ஆனால் அண்மையில் இந்திய கம்யூனிசக் கட்சி நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் தவிர்க்க முடியாதபடி மற்றக் கட்சிகளும் ஈழத் தமிழருக்காக பேச வேண்டிய நிலையை உருவாக்கி விட்டது.
இந்தியக் கம்யூனிசக் கட்சி நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் ஒரு அரசியல் நகர்வாகவும் பார்க்கப்பட்டதுதான் இதற்குக் காரணம். ஈழத் தமிழருக்கான போராட்டத்தின் அடிப்படையில் ஒரு புதிய கூட்டணி உருவாகின்ற நிலை ஏற்பட்டது. இந்தக் கூட்டணியில் இணைவதற்கு சில கட்சிகளும், இந்தக் கூட்டணியை குழப்புவதற்கு சில கட்சிகளும் எடுத்த நடவடிக்கைகள் ஈழத் தமிழர்களுக்கு சாதகமான ஒரு நிலையை தமிழ்நாட்டில் உருவாக்கி விட்டன.
இந்தியக் கம்யூனிசக் கட்சியின் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆதரித்து ஜெயலலிதா அறிக்கை விட்டதும் தமிழ்நாட்டு அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. புதிய கூட்டணி ஒன்று உருவாவதாக பலரும் கருதினார்கள். அதிமுக கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்றும் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
இந்தியக் கம்யூனிசக் கட்சி தமிழ்நாட்டில் வலுவாக இல்லாவிட்டாலும் கூட, இந்திய அளவில் அது ஒரு பலமான கட்சி. விரைவில் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பிஜேபி கூட்டணிகளில் சேர விரும்பாத கட்சிகள் இந்தியக் கம்யூனிஸக் கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கு ஆவலாகவே இருக்கின்றன. காங்கிரஸ் கட்சிக்கு வழங்கி வந்த ஆதரவை விலக்கிக் கொண்ட கம்யூனிசக் கட்சிகள், தமிழ்நாட்டில் திமுக அரசுக்கான ஆதரவையும் அண்மையில் விலக்கி இருக்கின்றன.
இந்த நிலையில் கம்யூனிசக் கட்சியின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஜெயலலிதா ஆதரவு தெரிவித்தது ஒரு புதிய கூட்டணிக்கான அடித்தளமாக பலரும் கருதினர். தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலில் தனித்து நிற்பதாக முழங்கிக் கொண்டிருக்கும் விஜயகாந்த் வரவிருக்கும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியக் கம்யூனிசக் கட்சியுடன் கூட்டணி வைப்பதற்கு ஆர்வமாக இருக்கின்றார். இந்த நிலையில் கம்யூனிசக் கட்சியினருடன் ஜெயலலிதா நெருங்கி வருவதை விஜயகாந்த் விரும்புவதற்கு வாய்ப்புகள் இல்லை.
உடனடியாக விஜயகாந்தும் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆதரிப்பதாகவும், தமது கட்சியினர் கலந்து கொள்வதாகவும் அறிவித்தார். உண்ணாவிரதப் போராட்டத்தில் விஜயகாந்தின் தேமுதிக கட்சியினர் பெருமளவில் கலந்து கொண்டனர். கட்சிக் கொடிகளோடும், தனிச் சீருடையோடும் வந்த அவர்கள் அருகில் இருந்த கடைகளில் தேனீர் அருந்தியபடி உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். தேமுதிகவின் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசி முடித்த பிற்பாடு கலைந்தும் சென்றார்கள்.
விஜயகாந்த் கட்சியினர் கண்ணை உறுத்தும் தனித்த சீருடைகளோடும் கட்சிக் கொடிகளோடும் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டிருப்பதை அறிந்த ஜெயலலிதா தன்னுடைய கட்சியினர் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்வதை தடுத்து விட்டார். இதே காரணத்தினால் மருத்துவர் ராமாதாஸின் பாட்டாளி மக்கள் கட்சியினரும் கலந்து கொள்ளவில்லை. வைகோ தயங்கித் தயங்கி மாலையில் வந்து கலந்து கொண்டார்.
விஜயகாந்த் தமிழ்நாட்டின் பல கட்சிகளுக்கு ஒரு பிரச்சனையாக இருப்பது தெளிவாகத் தெரிகின்றது. ஆனால் விஜயகாந்த் போலவே அவருடைய கட்சித் தொண்டர்களும் ஒரு உறுதியான கொள்கை அற்றவர்களாக இருக்கின்ற விடயமும் அந்தத் தொண்டர்கள் நடந்து கொண்ட விதத்தின் மூலம் வெளிப்பட்டது. இந்த இடத்தில் கலைஞரின் தொண்டர்கள் வித்தியாசமானவர்கள்.
இந்தியக் கம்யூனிசக் கட்சியினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் நாடாளுமன்றத் தேர்தலில் அமைய இருக்கும் கூட்டணிகளை ஓரளவு கோடிட்டுக் காட்டியுள்ளது. உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளாத அதிமுக, பாமக மற்றும் பிந்திக் கலந்து கொண்ட மதிமுக ஒரு கூட்டணியாகவும், உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட கம்யூனிசக் கட்சிகள், விஜயகாந்தின் தேமுதிக ஒரு கூட்டணியாகவும், ஆளும் கட்சியாக இருக்கின்ற கலைஞரின் திமுக மற்றும் காங்கிரஸ் ஒரு கூட்டணியாகவும், மொத்தம் மூன்று பெரிய கூட்டணிகள் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படியான அரசியல் பரபரப்பை இந்த உண்ணாவிரதம் ஏற்படுத்தி பலருடைய கவனத்தையும் பெற்றுள்ளது.
உண்ணாவிரதத்திற்கு வராத ஜெயலலிதா அடுத்தநாள் ஒரு சு10டான அறிக்கையை வெளியிட்டார். சிறிலங்காப் படையினருக்கு இந்தியா ஆயுதப் பயிற்சி வழங்குவதை கடுமையாக சாடிய ஜெயலலிதா, ஈழத்தில் நடக்கின்ற இனப்படுகொலைக்கு இந்திய துணை புரிவதாக கண்டித்தார். ஜெயலலிதாவின் இந்த அறிக்கை ஈழத் தமிழர்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பதாக இருந்தது.
தமிழ்நாட்டின் முக்கிய கட்சிகள் ஈழத் தமிழர் பிரச்சனையை கையில் எடுப்பதைக் கண்ட கலைஞர் ஒருவாறு தன்னுடைய மௌனத்தைக் கலைத்தார். ஈழத் தமிழர்களுக்காக பிரதமருக்கு தந்தி அடிக்கும் போராட்டத்தை அறிவித்தார். தமிழ்நாட்டு மக்கள் வாக்குச் சாவடிகளில் வரிசையாக நின்று வாக்களிப்பதைப் போன்று தபால்நிலையங்களில் வரிசையில் நின்று தந்தி அடித்தார்கள். பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்ற அளவிற்கு நிலமை இருந்தது. தமிழ்நாட்டு மக்களின் உணர்வினை அது படம் பிடித்துக் காட்டியது.
ஆறாம் திகதி கலைஞர் தலைமையில் திமுக மிகப் பிரமாண்டமான ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தியது. இந்தக் கூட்டத்தில் கலைஞர் மிகவும் உணர்ச்சிகரமான ஒரு உரையை நிகழ்த்தினார். சிறிலங்கா அரசு தொடர்ந்தும் இனப்படுகொலையை நிடத்தினால் நாம் கையைக் கட்டிக் கொண்டு சும்மாயிருக்க மாட்டோம் என்று எச்சரித்தார். ஈழத் தமிழர்களுக்காக உயிரைக் கொடுக்கவும் தயங்கோம் என்றார். கலைஞர் இப்படி உணர்ச்சிகரமாக உரையாற்றிக் கொண்டிருந்த பொழுது, திமுக தொண்டர்கள் "பிரபாகரன் வாழ்க" என்று கோசம் எழுப்பினார்கள்.
80களின் ஆரம்பத்தில் உருவான எழுச்சி தமிழ்நாட்டில் மீண்டும் உருவாகியிருக்கின்றது. திமுக தொண்டர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. தமிழணர்வைத் கற்றுத் தந்த கலைஞர், தமிழீழத்தையும் அதற்காக போராடுபவர்களையும் ஆதரிக்கக் கற்றுத் தந்த கலைஞர் தமிழீழப் பிரச்சனையில் மௌனமாக இருக்கிறாரே என்று மிகவும் வேதனையோடு இருந்த தொண்டர்கள் இப்பொழுது உற்சாகத்தோடு இருக்கின்றார்கள்.
இப்படி தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான உணர்வு பெரும் எழுச்சியாக மாறி வருகின்றது. அதே வேளை தமிழ்நாட்டில் தமிழீழ மக்களுக்கு ஆதரவான நிலை உருவாகக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து வரும் இந்துத்துவப் பார்ப்பனியம் இன்றைய மாற்றத்தைக் கண்டு அதிர்ந்து போய் நிற்கின்றது. அதுவும் ஜெயலலிதாவின் அறிக்கை பார்ப்பனியவாதிகளை திடுக்கிடச் செய்துள்ளது. துக்ளக் சோ விழுந்தடித்து ஜெயலலிதாவிடம் ஓடினார். ஏறக்குறைய ஒரு மணித்தியாலம் ஜெயலிதாவுடன் பேசி அவருடைய மனதை மாற்ற முற்பட்டார்.
ஜெயலலிதாவுடன் கூட இருக்கும் சுப்ரமணியசுவாமி போன்றவர்களும் ஜெயலலிதாவின் தற்போதைய நிலைப்பாட்டை மாற்ற முனைவார்கள் என்று எதிர்பார்க்கலாம். புதுடெல்லியில் அரசியல் தரகு வேலைகளை செய்வதில் வல்லவரான சுப்ரமண்யசுவாமியின் தயவு சிலவேளைகளில் ஜெயலலிதாவிற்கு தேவைப்படலாம். ஆனால் அசாத்திய துணிச்சல் மிக்க ஜெயலலிதா இவர்களை புறந்தள்ளி ஈழத் தமிழர்களை ஆதரிப்பார் என்று நம்புவோம்.
ஜெயலலிதா நேற்று வியாழக் கிழமை வெளியிட்ட அறிக்கையிலும் தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதாக தெரிவித்துள்ளார். ஆயுதப் போராட்டத்தை எற்றுக் கொள்ளாத அதே வேளை, தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்திற்கு ஆதரவு கொடுப்பதாக கூறியுள்ளார். ஜெயலலிதாவின் நிலைப்பாட்டைப் பொறுத்தவரை இது ஒரு குறிப்படத்தக்க முன்னேற்றம்தான்.
இதுவரை ஈழத் தமிழர் விடயத்தில் மௌனமாக இருந்த தமிழ்நாட்டின் கட்சிகள் இனிமேல் ஈழத் தமிழரை ஆதரிப்பதில் போட்டி போடும் என்று எதிர்பார்ப்போம்.
Comments
hi
i should point out certain thing tha MK did for tamils and he should continue the same path without worrying about his position. He will one day be rrespected by the whole world for his service.
He did not go to receiption of IPKF who killed 6500 inocent tamils civilians in Tamils land. I will salute where ever i see him.
It is parathithasa who told to beat those tamils who do not beat those who beat tamils. Do not think think that Tamils have forgotten the action of Rajeev regeme. We try to forget and move forward. It seems that india does not (Not TSouth India) realise their errors and keep on doing the same for the people immigrated to Sri Lanka i(tamils land ) llegally.
I strongly advise you to the North Indian to think and act what is good for India. Not to asssit Sinhalese regeme by providing man power, arms and ammunition, technological assistance and passing information about tamils.
These activites will not assist indai anyway.
The Great Man, Prabakaran knows in and out and he knows siththantham and tamils history including north indians arrivals and sinhalese arrival very well. He is a natural choice whether you accept or not not like sing Sink and Sonia . Oraba born to save Tamils all over the world.
It is better india to save its from Snakes. if not, not only snake but also tigers will bit,
Tamils excuse them only for the mother Indira who has seen all the consequences wisley. There is no leaders in her calibre except VP Sink and Vajpajee.
comments are required to this statement