விடிவைத் தருமா தமிழக எழுச்சி?

by:
எழுபரிதி

சிறிலங்கா அரசு தமிழ்மக்கள் மீது நடாத்தும் யுத்தத்தில், இந்தியா சிறிலங்கா அரசை ஆதரித்துவருவதும், ஆயுத-தளபாட வழங்கல், படைப்பயிற்சி, கடல் கண்காணிப்பு, புலனாய்வுத்தகவல்களை பகிர்ந்து கொள்தல் எனப்பல்வேறு வழிகளில் உதவிவருவதும் இப்போது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. ஆனால் தமிழ்நாட்டைப்பொறுத்தவரை நிலமை நேரெதிராக இருக்கிறது என்று கொள்ளலாம். போருக்கான உதவி அல்லது பொருளுதவி எதனையும் தமிழ்நாட்டிலிருந்து பெற்றுக் கொள்ளமுடியாவிட்டாலும், தமிழ்நாட்டு மக்களின் தார்மீக ஆதரவு ஈழத்தமிழ் மக்கள்பால் உள்ளதனை உணரமுடிகிறது.

தமிழ்நாடு இன்னமும் இந்தியாவின் ஒரு மாநிலமாகவும், ஒரு முழுiயான சமஸ்டி அலகாக இல்லாதபோதும், இந்தியா, தமிழ்நாடு என்ற இரண்டு அலகுகளுக்கும் இடையிலான வேறுபாடு தெளிவாக உள்ளமைக்கு காரணம் தமிழக-தமிழீழ மக்களிற்கிடையிலான இனரீதியான பிணைப்பு என்பதனை எவருமே; விளங்கிக் கொள்ள முடியும். இவ்விடயத்தில் தமிழ்நாட்டை இந்தியாவிலிருந்து பிரித்துப்பார்ப்பது தவிர்க்க முடியாதாகிவிடுகிறது.

அண்மைகாலமாக ஈழத்தமிழர் விடயத்தில் மெத்தனத்தை கடைப்பிடித்துவந்த தமிழக அரசியல் கட்சிகள், இந்திய கொமியுனிஸ்ட் கட்சியின் தமிழ்நாட்டு அணி ஆரம்பித்து வைத்த ஈழத்தமிழர்களுக்கான ஆதரவுப்போராட்டங்களை தொடர்ந்து, வௌ;வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றன. இதனை தமிழக மக்களின் எழுச்சியாக ஒட்டுமொத்த தமிழ் தேசிய ஆதரவு ஊடகங்களும் கற்பிதம் செய்து வருகின்றன.  தமிழக அரசியற் கட்சிகளினதும், தலைவர்களினதும் நோக்கங்கள் எதுவாயிருப்பினும், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் பிரச்சனையின் தாற்பரியத்தை வெளிப்படுத்தியுள்ளமை வரவேற்கத்தக்க நகர்வாக கருதமுடியும். ஆனால் இந்நடவடிக்கைள், இந்திய அரச இயந்திரத்தின் இலங்கைத்தீவு தொடர்பான நிலைப்பாட்டில் ஏதாவது மாற்றத்தினை எற்படுத்துமா என்பதே இப்போதுள்ள கேள்வி.

பெரும்பான்மை தமிழ் நாட்டு மக்களின் விருப்பிற்கெதிராக செயற்படுவதில் இந்திய ஆட்சி இயந்திரத்திற்கு சிரமம் இருக்கிறது என்பது உண்மையே. ஆயினும்  தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு செயலுருவம் கொடுத்து அதனை அரசியல் ரீதியாக வெளிப்படுத்தும் வகையில் உருப்படியான எந்தச் செயற்பாட்டையும் தமிழ்நாட்டுத் தலைவர்கள் இதுவரை செய்யவில்லை என்பதைக் குறிப்பி;ட்டாகவேண்டும். இவ்விதம் குறிப்பிடுவது பல தமிழகத் தலைவர்கள் ஈழத்தமிழர்கள் மீது வைத்திருக்கும் அன்பையும் அனுதாபத்தையும் குறைத்து மதிப்பிடுவதாக அர்த்தங்கொள்ள வேண்டியதில்லை.

இந்தியத் துணைக்கண்டம் காலனித்துவ ஆட்சிக்கு உட்பட்ட காலத்திற்கு முன்பிருந்த நிலையை விட்டுவி;;ட்டாலும் கூட, காலனித்துவ ஆட்சியில் குறிப்பாக பிரித்தானிய ஆதிக்கத்திற்குட்பட்ட காலத்தில், ஈழத்தமிழர்கள் இந்தியாவையும், தமிழ் நாட்டையும் கடலால் பிரிக்கப்பட்ட தமது தேசத்தின் ஒரு பகுதியாகவே கருதிவந்தார்கள். அக்காலத்தில் தமிழ்நாட்டுடன் அவர்கள் வைத்திருந்து கலாச்சார, வர்த்தக தொடர்புகளிலிருந்து இன்னமும் அவர்காளால் விடுபடமுடியவில்லை. புலம்பெயர்ந்த தமிழர்களும் அதே நிலைப்பாடடு;டனேயே இருக்கிறார்கள். இந்நிலையில் தமக்கு இன்னல்கள் ஏற்படும்போது தமிழகத்திடம் உதவிவேண்டி நிற்பது இயற்கையே.

சிங்கள மக்களுக்கு இருந்து வருவதுபோல் “அகண்ட பாரதம்” (ஐனெயைn நஒpயளெயnளைஅ)  பற்றிய அச்சம் ஈழத்தமிழர்களிடம் என்றைக்கும் இருந்ததில்லை. இன்னமும் சொல்லப் போனால், அப்படியொரு நிலையேற்பட்டிருந்தால் அதனை ஈழத்தமிழர்கள் வரவேற்றிருக்கக்கூடும். சிங்கள கிராம இளைஞர்களின் எழுச்சியாக ஆரம்பித்த ஜே.வி.பி இயக்கம் தமிழ் இளைஞர்களை தமது அணியில் சேர்த்துக் கொள்ளாமைக்கு தமிழ் மக்களின் மேற்படி நிலைப்பாடு தொடர்பான ஐயப்பாடே காரணமாக அமைந்தது. இந்திய விஸ்தரிப்பு வாதத்தினை ஒட்டிய ஜே.வி.பி. யின் ஐந்தாவது வகுப்பு, இந்தியாவிற்கு ஈழத்தமிழர்கள் வழங்கி வரும் ஆதரவை சந்தேகக் கண்ணுடன் அவதானிப்பதாக அமைந்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

1987ல் இந்திய-சிறிலங்கா அரசுகளுக்கிடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பதந்தத்தினை தொடர்ந்து, இந்திய எதிர்ப்பு வாதத்தை நேரடியாகவே முன்வைத்து ஜேவிபி போராட்டம் நடாத்தியது. அப்போது இந்தியப் பொருட்களை புறக்கணிக்குமாறு ஜேவிபி வேண்டுகோள்விடுத்திருந்து. அதனை சிங்கள மக்களில் பெரும்பகுதியினர் ஏற்றுக் கொண்டனர். சிறிலங்காவின் அப்போதைய வர்த்தக அமைச்சர் லலித் அத்துலத்முதலி தன்பங்கிற்கு, நெதர்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு கூட்டுறவு மொத்த வியாபார நிலையத்தால் (ஊறுநு) விற்பனை செய்யப்பட்டுவந்த “பம்பாய் வெங்காயம்” எனும் பெரிய வெங்காயத்தை “லங்கா பெரிய வெங்காயம்” என பெயர் மாற்றினார்.  அதே காலப்பகுதியில் தமிழீழப்பகுதிகளில் நிலை கொண்டிருந்த இந்தியப்படையினரால் பெரும் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியிருந்த தமிழ்மக்கள் இந்தியதேசத்திற்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையிலும், வெறும் அடையாளத்திற்கேனும் இறங்கவில்லை என்பதிலிருந்து இந்த வேறுபாட்டை விளங்கிக் கொள்ள முடியும்..

இந்திய-சிறிலங்கா ஒப்பந்தத்திற்கு முற்பட்ட காலத்தில் தமது பிரச்சனைகளுக்கான தீர்வினை இந்திய அரசு பெற்றுத்தரும் என்ற எதிர்பார்ப்பு ஈழத்தமிழ் மக்களிடையே காணப்பட்டது என்பது உண.மையே. போராளி இயக்கங்கள் இந்தியாவில் நிலைகொண்டிருந்தமையும், மிதவாத தமிழர் தலைவர்கள் தீவிர இந்திய விசுவாசிகளாகவும் இருந்தமையும் மட்டுமல்லாமல் ஆண்டாண்டு காலமாய் இந்தியா மீதிருந்த நேசிப்பும் இதற்கு காரணமாகவிருந்தது. ஆனால் ஒப்பந்தத்ததை தொடர்ந்து இந்திய இராணுவம் தமிழீப்பகுதிகளில் நிலை கொண்டு, விடுதலைப்புலிகளை அழிப்பதாகக்கூறி பொதுமக்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டதனை தொடர்ந்து இந்தியாமீதான நம்பிக்கை  சிதறடிக்கப்பட்டுவிட்டது. இருப்பினும் தாம் கலாச்சார உறவுகளை பேணிவரும், பிராந்தியத்தில் பெரிய சக்தியான இந்தியாவை பகைத்துக் கொள்ள ஈழத்தமிழர்கள் இன்றும் விரும்பவில்லை.

தமிழர்களுடனான போரை வெல்வதற்காக எந்த சாத்தானுடனும் உறவு கொள்ளத்தயாராகவிருக்கும் சிங்களப் பேரினவாதிகளுக்கு, இந்தியா ஆதரவாகச் செயற்பட்டு வருவது அவர்களை இந்தியாவை நோக்கி தமது நேசக்கரங்களை நீட்ட வைத்துள்ளது. அதற்காக இந்திய நலன்களுக்கு ஏற்ப விட்டுக் கொடுப்புக்களை செய்யவும் சிங்களம் தயாராய் இருக்கிறது. இவ்விடத்தில், சிங்கள மக்களிடமிருந்து  இந்திய விஸ்தரிப்பு வாதம் தொடர்பான அச்சம் விலகி விட்டதா என்ற கேள்வி எழலாம். அதற்கு இல்லை என்றே பதிலளிக்க வேண்டும்.

பிராந்தியத்தில் ஆதிக்கத்தைச் செலுத்திவரும் மற்றய நாடுகளான சீனா, பாக்கிஸ்தான் போன்ற நாடுகளுக்கிடையில் தனது காய்நகர்த்தல்களை மதிநுட்பத்துடன் சிறிலங்கா செய்து வருகிறது. இவ்வகையான வாய்ப்பான சு10ழல் தமிழர்களுக்கு இல்லை என்றே கூறவேண்டும். சீனா, பாக்கிஸ்தான் போன்ற நாடுகளுடன் தமிழர்தரப்பு எவ்விதமான தொடர்புகளையும் கொண்டிருக்கவில்லை.  சீனா விடுதலைப்புலிகளுக்கு ஆயுத உதவிகளை வழங்குகிறது எனச் சந்தேகம் தெரிவித்து அண்மையில் இந்திய பத்திரிகையாளர் ஒருவர் எழுதியிருந்தாலும் அது அதீத கற்பனையின் வெளிப்பாடு என்பதனை ஐயத்திற்கு இடமின்றி மறுதலிக்கலாம்.

பிராந்தியத்தில் வேறெந்த நாடுகளின் ஆதரவுமின்றி .இருக்கும் ஈழத்தமிழர்களுக்கு, பொருளாதார ரீதியிலும், அரசியல் ரீதியாகவும் பெரும் வல்லாதிக்கமாக வளர்ந்துவரும் இந்தியாவின் ஆதரவு கிட்டாமலிருப்பது அவநம்பிக்கையை  தோற்றுவிக்கும். உண்மையில் அதுவல்ல நிலவரம்.  தமக்கு அருகில் ஆறுகோடித் தமிழர்கள் இருக்கிறார்கள் அவர்களது தார்மீக ஆதரவு தங்களுக்கு இருக்கிறது என்பதே ஈழத்தமிழர்களுக்கு பெரும் பலத்தைக் கொடுக்கிறது.

தமிழ்நாட்டு மக்களின் ஆதரவை தமிழநாட்டு தலைவர்கள் கட்சி வேறுபாடுகள் கடந்த ஒரு அரசியற்பலமாக மாற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எமக்கு உள்ளது. அவ்விதம் செயற்படுவார்களேயானால், இந்திய ஆட்சிமையத்தின் ஈழத்தமிழர் தொடர்பான நிலைப்பாட்டில் நிட்சயம் மாற்றம் ஏற்படும் என்பதனை நம்பலாம். அப்போது,  மேற்கத்தைய நாடுகளுக்கும்; இந்தியாவுடன் சேர்ந்தோடவேண்டிய தவிர்க்கமுடியாத நிலை ஏற்படும்.

வெறும் அடையாளப் போராட்டங்களிற்கு அப்பால், அடுத்த கட்டமாக, அரசியல்ரீதியாக தமது பலத்தை வெளிப்படுத்த தமிழக மக்களுக்கு அவரகளது அரசியல் தலைவர்கள் சந்தர்ப்பம் தருவார்களா என்பதே எம்முன்னுள்ள வினாவாக உள்ளது. இவ்விடயத்தில் நம்பிக்கைதரும் சமிக்ஜைகள் எதுவும் இதுவரை தென்படவில்லை என்பதனையும் இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும்.