வணக்கம்! கடந்த பேப்பரில் ஒரு மாறுதலுக்காக ஒரு “கருத்து}ண்” (காட்டுனுக்கு இதுதான் தமிழாம்) உடன் பயோடேற்றாவும் பிரசுரித்திருந்தோம். அது பற்றி பலரும் தமது கருத்துக்களை எங்களுக்கு தெரிவித்திருக்கிறார்கள். அந்த சிறுபத்தியில் கொஞ்சம் கியூமருடனும், எள்ளலுடனும் நிரம்ப விசயங்கள் கலந்திருந்தாலும் எங்களுக்கு கிடைத்த கருத்தக்கள் ஒன்றுக்கு ஒன்று வேறுபட்டனவாக இருந்தன. கருத்துச்சுதந்திரத்தை மதிக்கும் ஒரு சனநாயகவாதி மட்டும் கொஞ்சம் குழம்பிப்போய் எங்களது பணியக தொலைபேசியை தொல்லைபேசியாக மாற்றியிருந்தார்.
எங்களுக்கு இருக்கிற குழப்பம் என்னெண்டா தொடர்ந்து வேறை பயோடேற்றாக்களையும் பிரசுரிக்கிறதா அல்லது மிகச் சிறுபான்மையான எங்களது வாசகர்களின் கருத்தை செவிமடுத்து பிரசுரிக்காமல் விடுறதா என்பதுதான். எனவே உங்களது கருத்துக்களை தொடர்ந்து எங்களுக்கு அனுப்புங்கோ உங்கட கருத்துக்களையும் பாத்திட்டு அடுத்த பேப்பருக்கு முன்னர் ஒரு முடிவு எடுப்பம்.
ஆங்கிலத்தில் தமிழ் சினிமா நடிக-நடிகைகளின் Profileகளை எழுதி அனுப்பும் சில இளையவர்களின் கவனத்திற்கு. மன்னிக்கோணும் சினிமா பகுதிக்கு தமிழில் வரும் ஆக்கங்களை மட்டுமே பிரசுரிப்போம். நீங்கள் வேண்டுமானால், சினிமாத்துறை அல்லது மாற்று சினிமா பற்றிய ஆக்கங்களை ஆங்கிலத்திலும் எழுதி அனுப்பலாம்.
ஒருபேப்பர் குழுவைச் சேர்ந்த நாங்கள் எல்லாரும் ஒரு பணிமனையிலிருந்து வேலை செய்யிறேல்லை. எங்களை தொடர்பு கொள்ளிறதற்கு சுலபமான வழி மின்னஞ்சல் மாத்திரமே. உங்களது கருத்துக்களை (நல்லதோ கெட்டதோ ) எங்களுக்கு அனுப்புங்கோ நாங்கள் பதில் அனுப்புவம்.
பிரான்சிலிருந்து வெளிவரவிருக்கும் இன்னொரு பிரெஞ்சு திரைப்படத்திலும் “ஒரு பேப்பர்” தோன்றுகிறது. பிரெஞ்சுக்காரருக்கு ஒரு பேப்பர் பிடித்துப் போனதன் காரணம் தெரியவில்லை. மருந்துக்கும் பிரெஞ்சிலை ஒரு சொல்லும் பிரசுரிக்கிறதாலை இருக்கலாம்.
“கடந்தது நடந்தது” தொடரை எழுதிவரும் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள் நோய்வாய்ப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். எப்போதுமே மற்றவர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் அந்த நல்ல இதயம் விரைவில் குணமடையவேண்டும் என மனதார விரும்புகிறோம்.
அப்ப சந்திப்பம் என..
Recent comments
1 year 20 weeks ago
1 year 21 weeks ago
1 year 26 weeks ago
1 year 29 weeks ago
1 year 29 weeks ago
1 year 29 weeks ago
1 year 30 weeks ago
1 year 33 weeks ago
1 year 38 weeks ago
1 year 43 weeks ago