பல்வேறு துறை பற்றிய ஆய்வுகளில் டி.என்.ஏ (DNA) முக்கிய பங்கு வகிக்கிறது. மனித இடப்பெயர்வு பற்றிய வரலாற்றை விஞ்ஞான பூர்வமாக நிலைநாட்ட இது உதவுகிறது. 21 ஆம் நூற்றாண்டின் முக்கிய ஆய்வாக விஞ்ஞான புதை பொருள் ஆராய்ச்சிகளில் இது இடம் வகிக்கிறது. DNA என்பதற்கு மரபணு என்ற பதம் பரவலாக உபயோகிக்கப்பட்டு வருகிறது. இது ஒரு தவறான சொற்பிரயோகம் ஆகும்.
DNA எனும் சுருக்கத்தின் விரிவாக்கமானது Deoxy Ribo Nuclic Acid என்பதாகும். மரபணு என்பது முற்றிலும் வேறுபட்ட ஒன்றாகும். DNA யைத் தமிழில் எழுத வேண்டுமாயின் `ஒட்சிசன் அற்ற றைபோ நியுக்கிளிக் புரத அமிலம்' ஆகும். இந்நீண்ட சொல்லைப் பயன்படுத்துவதை விட்டு, தவறான மரபணு எனும் சொல்லையுந்தவிர்த்து DNA எனும் சொல்லை உபயோகப் படுத்தி வருவதே பொருத்தமானதாகும்.
மனிதனின் உடலின் எப்பாகத்திலிருந்தும் ஒரு தூசு அளவு வலிக்கை கிடைத்தால் அதை வைத்துக்கொண்டு இவ் ஆய்வினை நிகழ்த்த முடியும். உலகில் வாழும் மனிதர்கள் யாவரும் ஒரு நடமாடும் சுவடுகள் (Fosics) ஆவர். நாம் எமது மூதாதையரின் வரலாற்றுப் பதிவு களைச் சுமந்து கொண்டிருக்கின்றோம்.
ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டு பெற்றோர் (தாய்-தகப்பன்), நான்கு பாட்டன்- பாட்டிகள், எட்டு பூட்டன்- பூட்டிகள் காணப்படுவர். இப்பட்டியல்கள் பின்நோக்கி காலஞ் செல்லச்செல்ல மிக அதிகமாக அதிகரித்துச் செல்லும். இவ்வகையாக அதிகரித்துச் செல்லும் பட்டியலை DNA ஆய்வு செய்து கொண்டு போக வரலாற்று ரீதியான புதிய உண்மைகள் புலப்படும். இவ் வாய்வில் கவனிக்கப்பட வேண்டியது Y குரோமசோம் எனப்படும் ஆண்கள் வழி மட்டும் காணப்படும் இரசாயனமாகும். ஆண்கள் வழி எனக் கூறுகையில் பெண்களுக்கும் தகப்பன் இருப்பதனால் அவர்களின் சந்ததியையும் உய்த்துணரலாம்.
DNA ஆய்வு மூலம் பூமியில் வாழும் சகல பிரதேச மனிதர்கள் இடம்பெயர்ந்த வரலாறு பற்றிய வரைபடம் ஒன்றைத் தயாரிக்கும் முயற்சி இன்று சர்வதேச ரீதியாகப் பிரசித்தி பெற்று வருகிறது. இதன் ஆரம்ப கால முயற்சியாக வட அமெரிக்காவில் வாழும் சிவப்பு இந்தியர்கள் பற்றிய தேடல் ஆரம்பமாயிற்று.
தேடலின் முடிவில் அவர்கள் 30,000 வருடங்களுக்கு முன்பு பூமியைச் சூழவிருந்த சமுத்திரங்கள் உறைந்த நிலையில் காணப்பட்ட பனிக்கட்டி யுகத்தில் வடசீனா -வட ஜப்பான் போன்ற பிரதேசங்களில் இருந்து கால் நடையாக அலாஸ்காவின் பேரிங்தொடு கடல் வழியாக வந்து கனடா, வடஅமெரிக்கா போன்ற இடங்களில் தங்கியவர்களின் சந்ததியினரே (செவ்விந்தியர்) எனக் கண்டறிந்தனர். தற்கால ஆய்வுகளில் இவர்களின் சந்ததிகளாக இன்றும் வடசீனா, ஜப்பான் பகுதிகளில் வாழும் மனிதர்கள் அடையாளங் காணப்பட்டனர். DNA ஆய்விற்கு கிடைத்த முதல் வெற்றி இதுவாகும்.
இலங்கையில் வாழுகின்ற சிங்களவர்களும் தாங்கள் ஆரிய இனத்தவர்கள் என்றும் வடஇந்தியாவில் இருந்து வந்தவர்கள் எனவும் வாதிடுகின்றனர். முதலாவது இங்கு கவனிக்கப்பட வேண்டியது ஆரியர், திராவிடர் என்பது ஒரு இனக்குழுவைப் பிரதிபலிக்கும் பதம் அல்ல. அவை இரண்டும் மொழிக் குடும்பத்தைப் பிரதிபலிக்கும் சொற்பதமாகும். இலங்கை மக்கள் மயமாதல் பற்றி DNA மூலம் நிகழ்த்திய ஆய்வுகளில் முற்றிலும் மாறுபட்ட செய்திகளே வெளிவந்துள்ளன.
1976 இல் B.I.Kinkஎன்பவர் நிகழ்த்திய ஆய்வுகளின் அடிப்படையில் (American Journal of Physical Anthropology Vol 75 PP 91-100 ; The legend of Price Vijaya, A study of Sinhlese origin) எனும் தலைப்பில் வெளிவந்த கட்டுரையில் சிங்களவர்கள், வடஇந்தியர்கள் அல்ல என்பதும் இலங்கையில் குடியேறியவர்கள் தென் இந்திய மக்கள் அத்துடன் கூடுதலாகத் தமிழ்நாடு, கேரளா போன்ற பிரதேசத்தவர்கள் என்பதுவும் ஒரு சிலர் வங்காளத் தொடர்புடையவர்களாகவும் கூறப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் DNA சான்றுகள் சிலவும் ஏனைய வரலாற்றுச் சான்றுகளும் முக்கியத்துவம் தரப்பட்டு ஆராயப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து 1988 இல் American Journal of Physical Anthropology Vol 75 PP 217-225ல் Nsha என்பவர் முன்பு Kink எழுதிய கட்டுரையினின்று கூடியளவு DNA சான்றுகள் உபயோகித்து Blood genetic makers of Sri Lanka Population - Reappraisal of the legend of Prince Viajaya எனும் தலைப்பில் கட்டுரை வெளியிட்டார். அதில் இலங்கை, கேரளா, தமிழ்நாடு, வங்காளம், வடஇந்தியா போன்ற பிரதேசங்களில் இருந்து பெறப்பட்ட இரத்த மூலக்கூறுகளை அடிப்படையாக வைத்து ஈசஅ தொடர்புகள் ஆராயப்பட்டன.
இவரது ஆய்வின் முடிவில் இலங்கை மக்களும், தென் இந்தியாவில் வாழ்ந்தவர்களும் ஒரே இனத்தவர்கள் என்பதும் மிகச்சிறியளவு மக்கள் வங்காளத்துடன் தொடர்புடையவர்கள் என்பதும் காணப்பட்டது. இதனைத் தொடர்டந்து 1996 இல் Human History எனும் சஞ்சிகையின் 68 வது Vol No. 5 PP 707 - 737 வெளிவந்த DNA ஆய்வுக் கட்டுரையில் S.S. Papina, S.S. Mostana, H. Jayasekara முதலியோர் வெளியிட்ட கருத்துக்கள் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.
இவர்கள் செய்த ஆய்வானது இலங்கை மக்கள் மயமான வேளையில் மனிதர்கள் எங்கிருந்து வந்தனர்? வந்தவர்கள் யார்? வந்தவர்களிடையிலான உறவுமுறை என்ன? என்பதனை Genetical Variations of Sri Lankan Population எனும் தலைப்பில் DNA ஆய்வு நிகழ்த்தி ஒரு அறிக்கையும் வெளியிட்டனர். அவ் ஆய்வானது இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்களினதும் இந்திய மக்களினதும் இரத்த மாதிரிகள் பெறப்பட்டு பாதுகாப்பாக லண்டனுக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்டு DNAபரிசோதனை நிகழ்த்தப்பட்டது.
முடிவில் இலங்கை வாழ் மக்களில் தமிழர்
சிங்களவர்கள் ஆகிய யாவரும் ஒரே இனத்தவர்கள்தாம், காலப் போக்கில் பௌத்த சமயத்தை தழுவிய ஒரு பிரிவினரிடையே பாலி, பிராகிருதச் செல்வாக்கால் சிங்கள மொழி தோற்றம் பெற்றது என்ற முடிவும் எட்டப்பட்டது. கிறஸ்தவ மதத்தை இலங்கையில் தழுவியவர்களிடையே எவ்வாறு ஆங்கிலம் செல்வாக்குப் பெற்றதோ அவ்வாறே பௌத்த மதத்தை தழுவியவர்களிடையே சிங்கள மொழி செல்வாக்குப் பெற்று சிங்கள மொழி பேசுபவர்களாக அவர்கள் மாற்றமடைந்தனர் என்றும் அறிக்கை வெளியிட்டனர்.
ஒட்டு மொத்தமாகப் பார்க்கையில் இலங்கை வாழ் மக்களிடையே ஒரே இனத்தவரான தென் இந்தியர்களே ஆரம்ப காலம் முதல் வாழ்ந்து வருகின்றனர். பிற்காலத்தில் சமூக, பொருளாதார, கலாச்சார வளர்ச்சிகளின் விளைவாகத் தமிழர், சிங்களவர்கள் என்கின்ற தேசிய இனங்கள் தோற்றம் பெற்றன எனலாம்.
Recent comments
2 weeks 3 days ago
7 weeks 2 days ago
7 weeks 4 days ago
10 weeks 2 days ago
12 weeks 2 min ago
12 weeks 10 min ago
12 weeks 10 min ago
22 weeks 1 day ago
22 weeks 1 day ago
22 weeks 3 days ago