வணக்கம்!
நூறாவது பேப்பர் பற்றி .. அதுவும் நூறு வரை வந்து விட்டதையிட்டு பலரும் எங்களுக்கு வாழ்த்துகள் தெரிவிச்சினம். மேற்கொண்டு என்ன செய்யோணும் எண்டு சின்ன சின்ன அட்வைசுகளும் தந்தினம். எல்லாருக்கும் நன்றி. முடிந்தவரை உங்கடை அட்வைசுகளை சிரமேற்கொள்ள முயற்சிக்கிறோம்.
நூறாவது பேப்பர் வந்திடுத்து எங்யைடியப்பா உங்கடை ஒரு விழா எண்டு பலர் கேட்டிச்சினம். கொஞ்சம் பொறுங்கோ! நாட்டு நிலமையள் சரியில்லை இப்ப விழாக்கள் வைக்கிறது நல்லாத் தெரியேல்லை இதுதான அவையளுக்கு நாங்கள் சொன்ன பதில். உங்களுக்கும் அதைத்தான் சொல்லிறம்.
நூறு பேப்பர் அடிச்சிட்டம் எண்டதாலை சின்னதாய் இன்னொரு பேப்பரை தொடங்கீட்டம் எண்டும், “சின்ன வீடு” வைச்சுக்கொள்ளிற ஆசாமியள் போலை அதைப்பற்றி நாங்கள் வெளியாலை சொல்லாமல் இருக்கிறம் எண்டும் ஒரு வதந்தி தமிழ் ஊடக மட்டத்தில் (அப்பிடியொண்டும் பெரிசாய் இல்லை) அடிபடுகிறதாய் அறியிறம். எங்கட விளம்பரதாரருக்குத்தான் அதிகமாய் இதில் குழப்பமிருப்பதால், வர்த்தக விளம்பரங்களில் சொல்லிற மாதிரி சொன்னால், “ஒரு பேப்பருக்கு வேறு (சின்னப்) பேப்பர்கள் கிடையாது. போலிகளைப் படித்து ஏமாற வேண்டாம்”. சுருக்கமாய் சொன்னால் நாங்கள் ஒரு பேப்பர் தவிர வேறெந்தப் பத்திரிகையும் பிரசுரிப்பதில்லை.
விளம்பரதாரருக்கு, அவரகளை விளம்பரங்கேட்டு அணுகுபவர்கள் விடயத்தில் சந்தேகமிருப்பின் எமது பணிமனையுடன் தொடர்புகொண்டு உறுதி செய்து கொள்ளுமாறு தயவாய் கேட்டுக் கொள்கிறோம்.
ஒருபேப்பர் இணைய தளம் இடம்மாற்றப்பட்டதனால் கடந்த சில பேப்பர்கள் தரவேற்றம் செய்யப்படவில்லை. தற்போது அது மறுசீரமைக்கப்படுவதால் வெகுவிரைவில் புதுப்பொலிவுடன் வெளிவிடப்படும் என எங்களது தொழில் நுட்பப்பிரிவு உறுதியளித்துள்ளது. அதுவரை பொறுத்திருங்கள்.
மின்னஞ்சலில் படங்களை அனுப்புறவையள் அவற்றை தனிக் கோப்பாக (file) அனுப்புங்கோ. Word ல் ஒட்டி அனுப்பினால் அவை பிரசுரத்திற்கு ஏற்ற தரத்தில் இருக்காது, ஆகையால் அவற்றை எங்களால் பிரசுரிக்க முடியாது என்பதனை உங்கட கவனத்துக்கு கொண்டு வாறம்.
ஒரு பேப்பர் பற்றி உங்களது கருத்துக்களை தொடர்ந்து எழுதுங்கள். நேரப்பிரச்சனை அல்லது எழுதுவதற்கு தயக்கம் எனில் தொலைபேசியிலும் உங்கள் கருத்துக்களை எங்களுக்கு தெரிவிக்கலாம்.
மீண்டும் சந்திப்போம்
Recent comments
16 hours 21 min ago
16 hours 48 min ago
1 week 7 hours ago
4 weeks 22 hours ago
9 weeks 1 day ago
14 weeks 11 hours ago
14 weeks 2 days ago
17 weeks 16 hours ago
18 weeks 5 days ago
18 weeks 5 days ago