“The problem is, Karnanishi symbolises Tamil, the rhetoric. The tragedy of Tamil Nadu is, as I look at it as a student of Tamil literature and as a Marxist, there has been a de-ideolgisation of politics. As a Marxist I would say that the basic problem was that the Dravidian ideology was not shaped in terms of economics”
- Prof. Karthigesu Sivathamby
அறுபது ஆண்டு கால திராவிட இயக்கத்தின் செயற்பாட்டு அரசியல் தொடர்பான தனது விமர்சனத்தில் பேராசிரியர் சிவத்தம்பி மிக முக்கியமான குற்றச்சாட்டை முன்வைக்கிறார், அதாவது தலித் மக்களின் பொருளாதார விடிவை உறுதிப்படுத்துப்படுத்தும் விதமாக நில உரிமை தொடர்பான காத்திரமான சீர்திருத்தம் எதனையும் திராவிட இயக்கங்கள் அமுல்ப்படுத்தவில்லை என்பதே அவரது குற்றச்சாட்டாகும்.
இதனை நிவர்த்தி செய்யும்விதமாகப்போலும் மாண்புமிகு முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் அண்மையில் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டில் சொத்துக்கள் வாங்குவதை அனுமதிக்க வேண்டாம் என்று அரச அதிகாரிகளை கேட்டுள்ளார்.
கலைஞரின் அண்மைய அறிவிப்பிற்கு மேற்கூறிய “கொள்கை விளக்கத்தை” தவிர வேறு எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது, முரசொலி இதழில் இவ்வாறான “கொள்கை விளக்கம்” வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
வரலாற்றுக்காலம் தொட்டே இந்திய தேசமானது ஒடுக்கப்பட்ட மக்கள் குழுமங்களுக்கு ஒரு புகலிடமாக விளங்கி வருகின்றது. தற்போதும் பல மிலலியன் மக்கள் இந்தியாவில் சட்டரீதியான ஆவணங்கள் இன்றி வாழ்ந்து வருகின்றனர். இன்னொருவிதத்தில் சொன்னால் ஈழத்தமிழர்கள்தான் இந்தியாவில் தஞ்சம் கோரும் முதலும் இறுதியுமான இனக்குழுமம் அல்ல. இந்தப்பின்னணியில் கலைஞரின் ஈழத்தமிழர்கள் சொத்துக்கள் வாங்குவது தொடர்பான பேச்சுக்களானது நாம் அடிப்படைகளை ஒழுங்காக விளங்கிக் கொள்ள வேண்டிய தேவையை மேலும் அதிகரித்துள்ளது எனலாம்.
முத்துவேலர் கருணாநிதி – யார் இந்த மனிதர்?
They started from humble positions and graduated to positions of power. You cannot say that basically Kalaignar was a capitalist. He comes from a poor family from Thirukkuvalai, His having reached this stature is marvellous.. stupendous. But for their political equality did not imply economical equality. And they were subsumed later under class interests.
- Prof. Karthigesu Sivathamby
கலைஞர் கருணாநிதி தமிழை இலாவகமாக பேச, எழுத, பாட வல்லமை பெற்ற ஒரு மனிதர். பிரித்தானிய காலனியாதிக்க காலத்தில் ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருத மொழிகளின் அதிகரித்த செல்வாக்கை எதிர்த்து தமிழை உயர்த்திப்பிடித்துப் பேசவும், பாடவும், எழுதவும் பலர் தேவைப்பட்டனர். பெரியார் தலைமையிலான சுயமரியாதை இயக்கம் மற்றும் நீதிக்கட்சியில் கலைஞர் கருணாநிதி போன்ற தமிழில் புலமைபெற்ற பல இளைஞர்கள் இணைந்தனர். பிற்காலத்தில் திராவிட அரசியல் இயக்கமானது தமிழக அரச அதிகாரத்தை கைப்பற்றி தொடர்ந்து நாற்பதாண்டு காலம் ஆட்சி செய்வது அனைவரும் அறிந்த வரலாறாகும்.
பேராசிரியர் சிவத்தம்பி தனது விமர்சனத்தில் மேலும் கூறுகிறார், திராவிட அரசியல் இயக்கமானது ஒடுக்கப்பட்ட மக்களின் பொருளாதார முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும்விமாக பொருளாதார கொள்கைகளை தனது சித்தாந்தத்தில் இணைக்காமையே தற்போதைய அரசியல் சித்தாந்த வங்குரோத்து நிலைக்கு காரணமாகும் என்கிறார். அன்று இந்தித் திணிப்பை எதிர்த்து மாணவர்கள் தீக்குளித்த தமிழக்த்தில் இன்று ஆரம்பப் பாடசாலைகளில் தமிழை கற்பிப்பதற்கு அரசு ஆணையிட முடியாத அளவுக்கு திராவிட அரசியல் மோசமான நிலையில் உள்ளது.
திமுக வின் 1967 சட்டமன்றத் தேர்தல் வெற்றி முதல் இன்று வரையுள்ள திராவிட அரசியலை கவனமாக ஆராய்ந்தால் அண்ணாத்துiயின் ஒரு சில வருட ஆட்சிக்கு பிற்பாடு கலைஞர் கருணாநிதியே வியாபித்துள்ளார். கலைஞரின் அதிகார ஆசையால் எம்.ஜி.ஆர் பிரிந்து சென்று அ.தி.மு.க வைத் தொடங்கினார். அத்துடன் திராவிட இயக்கத்தின் சீரழிவு தொடங்கியது எனலாம். இறுதியில் ஜெயலலிதா முதலமைச்சரானதுடன் திராவிட அரசியல் ஒரு கோமாளிக் கூத்தாக மாறியது.
தி.மு.க.வைப் பொறுத்தவரையில் அது கலைஞரின் குடும்பக் கொம்பனியாக நடாத்தப்பட்டு வருகின்றது. ஒட்டு மொத்தத்தில் திராவிட அரசியல் இயக்கமானது. தனது மரணத்தை ஏற்கனவே அடைந்துவிட்டது எனலாம். இதற்கு முழுமுதல் காரணம் கலைஞர் கருணாநிதியின் சுயநல அரசியலும் தனது குடும்ப நலன்களுக்காக தமிழ் நாட்டையே தாரை வார்க்கவும் தயாராகவுள்ள அவரின் ஊழல் அரசியலும் ஆகும்.
கேரளாவின் நம்பூதிரிபாத் போன்றோ மேற்கு வங்கத்தின் ஜோதி பாசு போன்றோ தமிழகத்தில் கலைஞரால் எந்த ஒரு புரட்சிகரமான மாற்றத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. ஏனெனில் கலைஞரிடம் அதற்கான சரக்கு இல்லை என்பதே சாலப்பொருத்தமானது ஆகும். கலைஞரின் அரசியல் வாழ்;க்கை என்பது வெற்றுப் பேச்சினாலும் வெகுஜன சினிமாவின் மீதும் கட்டமைக்கப்பட்டது. அவருக்கு ஆடசிப் பொறுப்பை சிறப்பாகவும் நேர்த்தியாகவும் நடாத்தக்கூடிய பின்புலமோ, பொருளாதாரப் புலமையோ கிடையாது எனலாம். அத்துடன் எம்ஜி;ஆர் ஜெயலலிதா போன்றவர்களுக்கு எதிராக அரசியல் நடாத்துவதற்கு இவ்வாறான புலமைப் பின்புலம் அவசியம் இல்லை என்றே கூறலாம்.
கலைஞர் ஒருவரால்தான் வலதுசாரி இந்து அடிப்படைவாதக் கட்சியான பா.ஜ.க வுடன் கூட்டணி அமைத்ததை “திராவிட சித்தாந்தத்தின்” மூலமாக மக்களுக்கு விளங்கப்படுத்த முடியும். மொத்தத்தில் அயோத்திதாசர், பெரியார் போன்றோர்களால் முன்னெடுக்கப்பட்ட சமூகநீதி மற்றும் பகுத்தறிவுக் கொள்கை கருத்தியல்களை தமிழக அரசியலில் இருந்தே முற்று முழதாக காணமற் போய்விட்டன. இதற்கு முழுப்பொறுப்பும் கலைஞர் கருணாநிதியே என்றால் அது மிகையாகாது.
அன்று “ரோமாபுரிப் பாண்டியன்” எழுதிய கலைஞருடைய மகன் அழகிரி இன்று இன்னொரு பாண்டியனாக மதுரையில் கட்டப்பஞ்சாயத்து நடாத்துகின்றார்.
கலைஞர் கருணாநிதியும் தமிழீழத்தேசிய விடுதலைப்போராட்டமும்.
எண்பதுகளில் தமிழக அரசியல்கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு தமிழ்இயக்கங்களுக்கு உதவியது யாவரும் அறிந்த வரலாறாகும். இந்திய-இலங்கை உடன்படிக்கைக்குப் பின்னான கசப்பான சம்பவங்களுக்கு பின்னர் உள்ள தற்போதைய சு10ழலில், தமிழீழ விடுதலைப்போராட்டமானது தமிழகத்தின் ஆதரவை என்றுமில்லாதவாறான வகையில் எதிர்பார்த்து நிற்கின்றது.
ஆனால் தமிழக அரசியல் நிலவரமோ மிகவும் ஏமாற்றம் தருவதாக உள்ளது, முக்கியமாக கலைஞர் கருணாநிதியின் “பிதற்றல்கள்” அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது என்றே கருதலாம். கலைஞரைப்பொறுத்தவரையில் ஆட்சிப்பொறுப்பையும், கட்சிப்பொறுப்பையும் எந்தவிதப்பிரச்சனையும் இல்லாமல் நேர்த்தியாக தனது மகன் ஸ்டாலின் கையில் ஒப்படைப்பதையே தனது தற்போதைய வேலைத்திட்டமாக கொண்டுள்ளார். அவருக்கு இதனைத்தவிர வேறு எந்த விடயத்திலும் நாட்டமில்லை.
சிறுபான்மை ஜக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து அண்மையில் மாயாவதி தனது பகுஜன் சமாஜ்கட்சியுடன் வெளியேறியுள்ளார். இந்நிலையில் கூட்டணியில் திமுகவினதும் கருணாநிதியினதும் பலமும் செல்வாக்கும் மேலும் அதிகரித்துள்ளன எனலாம்.
அதாவது இந்திய மத்திய அரசிற்கு ஒருதொலைபேசி அழைப்பின் மூலம் ஈழத்தமிழர்கள் தொடர்பான இந்தியாவின் கொள்கையை கலைஞரால் மாற்றமுடியும் ஆனால் இத்தனை ஆண்டுகளாக கலைஞரின் வரலாற்றைப்படிக்கும் ஒருவருக்கு அவர் இவ்வாறு செய்வார் என எதிர்பார்க்க முடியாது.
இந்த வாரம் தமிழ்நெட் இணையத்தளத்தில் ஒருபத்தி எழுத்தாளர் பின்வருமாறு எழுதுகின்றார். அதாவது ஈழத்தமிழரின் சுயநிர்ணய உரிமையை ஆதரித்து தமிழுநாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவது பற்றி எழுதியிருக்கின்றார். கேட்பதற்கு நல்ல யோசனைதான், ஆனால் கலைஞர் கருணாநிதியால் இவ்வாறான வரலாற்று முக்கியத்துவமுள்ள ஒரு முடிவை எடுப்பதற்கு முடியுமா என்றால் இல்லை என்றே பதில் கூறலாம்; எனவே தான் ஈழத்தமிழர்களாகிய நாம், எமது விடுதலைக்கான திறப்பு தமிழ்நாட்டில் உள்ளது, தாழ்ப்பாள் புதுதில்லியில் உள்ளது என்று”ஆய்வு” செய்வகை நிறுத்திவிட்டு தமிழகத்தில் தமிழின உணர்வாளர்களையும் , செயற்பாட்டாளர்களையும் நோக்கியதாக நாம் பரப்புரையை மேற்கொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டது என்பதுதான் யதார்த்தமாகும்.
Recent comments
9 weeks 2 days ago
9 weeks 2 days ago
9 weeks 3 days ago
10 weeks 22 hours ago
10 weeks 22 hours ago
10 weeks 5 days ago
11 weeks 1 day ago
11 weeks 5 days ago
12 weeks 5 days ago
12 weeks 5 days ago