ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் குழுவில் அங்கத்துவம் பெறுவதற்கான தெரிவில் சிறிலங்கா தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. அப்பட்டமான மனிதவுரிமை மீறல்களைப் புரிந்து வரும் சிறிலங்கா அரசு அனைத்துலகப் பரப்பில் ஒரு தவறான உதாரணமாக அமைந்துவிடும் என்பதால், இக்குழுவில் சிறிலங்கா இடம் பெறுவதை பல நாடுகள் விரும்பவில்லை.
தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தில், சட்டத்திற்கு புறம்பான கொலைகள், சித்திரவதைகள், ஆட்களை கடத்துதல். பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் எனப் பாரியளவில் மனிதவுரிமை மீறல்களை சிறிலங்கா அரசு புரிந்துவருகிறது. இது விடயமாக நிலமையை ஆராய்ந்து அறிக்கை வெளியிட்ட வெளிநாட்டு நிபுணர்களின் ஆலோசனைகளை அது உதாசீனம் செய்துவருகிறது. ஒரு இறைமை கொண்ட அரசு என்ற வகையில், சிறிலங்காமீது உலக நாடுகள் காட்டிய மென்போக்கை, சிறிலங்கா தனது இனவழிப்பு நடவடிக்கையை தொடர்வதற்கான அனுமதியாக கருதிச் செயற்பட்டுவந்தது.
இந்நிலையில், உலகப் பொதுமன்று ஒன்றில், சிறிலங்கா அரசு அம்பலப்படுத்தப்பட்டுள்ளது என்ற வகையில் இது ஒரு வரவேற்கத்தக்க நகர்வாக அமைந்துள்ளது. இந்நகர்வுக்கு ஆதரவாகச் செயற்பட்ட சர்வதேச மனிதவுரிமை காப்பகம் உள்ளிட்ட அரசு-சாரா அமைப்புகளும், மனிதவுரிமை ஆர்வலர்களும் தெரிவித்த கருத்துக்கள் சர்வதேச அரங்கில் ஒரு தாக்கததை ஏற்படுத்தியுள்ளது. இது நீதியின் அடைப்படையில் அமைந்த செயற்பாடு எனினும், இவ்விடயத்தில் அக்கறையுடன் செயற்பட்ட அனைவருக்கும் ஈழத்தமிழர்கள் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளனர்.
மனிதவுரிமைக் குழுவில் சிறிலங்கா இடம்பெறவேண்டும் என்பதில் இந்தியா, சீனா, பாக்கிஸ்தான் ஆகிய நாடுகள் ஆர்வங்காட்டியிருந்தன. தமிழர்கள் மீது சிறிலங்கா தொடுத்திருக்கும் நீதியற்ற யுத்தத்திற்கு ஆயுத உதவி வழங்கி வரும் இந்நாடுகள், தத்தம் நாடுகளில் உள்ள சிறுபான்மையினரின் உரிமைகளை மறுத்து வருபவை. ஆதலால் மனிதவுரிமை விடயங்களில் இந்நாடுகளின் அக்கறையை விளங்கிக் கொள்ளக் கூடியதாகவிருக்கிறது.
ஈழத்தமிழ் மக்கள்மீது அக்கறை கொண்டுள்ளதாகக் கூறிவரும் இந்திய அரசு, இவ்விடயத்தில் சிறிலங்காவை வெளிப்படையாக ஆதரித்துள்ளது. மீண்டும் ஒரு முறை இந்தியா தன்னை வெளிப்படுத்திக் கொண்டுள்ளது என்பதில் தமிழர்கள் திருப்தியடைந்து கொள்ளலாம்.
Comments
Dignified pain
Unwary bikers startled by a jumping toad,
Passing the road to Uruthirapuram.
Cattle makes their way to the pastures near Iranaimadu;
Calves moo- the sight of their mothers; deserting.
The sun rises from the golden tank,
One more spring vapourised,
Into the morning heat, of our time.
Unwary children chased - by fierce dogs, in pursuit
Down the slippery Killinocchi lanes.
Ten Tamils arrested in Colombo.
Another journalist, mercilessly beaten in the South.
The wind blows the sand from Thandikulam,
A mirage of a hero, appears and disappears.
Into the midday heat, of our lives.
Unwary fish gobbled by a crane in wait.
A lone, fisherboy waits in despair at the lake in Akarayan.
The cranes fly in and out of the paddy fields,
As the bats circle the trees in daylight,
Startled by the sounds of distant guns.
Nothing much has changed, since
Your last breath, your final stroll.
Tamil people in dignified pain.
Without you, amidst us
And this new dawn.