மே 23, வெள்ளிக்ககிழமை

வணக்கம்!
தமிழர் சேனையை வழிநடத்தி களம்பல வென்ற சகோதரர் ஒருவரது இழப்பின் சோகத்திலிருக்கிறோம். முன்னர் கதைப்புத்தங்களிலேயே படித்திருந்த வீரதீரத்தை, நிசத்தில் இவர்களிடம்தான் பார்த்தோம். கண்ணீரை துடைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லுவதற்கு இது வெறும் செலுலோய்ட் சுருள்களில் வெளிப்பட்ட வீரமல்லவே. உணர்வோடு ஒன்றிப்போய்விட்ட நிகழ்வு.

கடந்த ஒரு பேப்பரில், லண்டனில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டைபற்றி பல கட்டுரைகள் வெளிவந்தன. கொஞ்சம் குறைத்திருக்கலாம் எண்டு சிலர் அபிப்பிராயப்பட்டிச்சினம். இப்பத்தான் ஊடகங்கள் தொடர்பாய் ஒண்டு நடந்திருக்கு எனவேதான் முக்கியத்தும் கொடுத்திருந்தோம். அதில் பிரசுரி;க்கப்பட்ட கட்டுரைகள், மற்றும் அதனை எழுதியவர்கள் பற்றியும்; சிலர் காரசாரமாய் விவாதித்து வருகிறார்கள். இது சம்பந்தமாய் ஒண்டு சொல்லிறம், ஒரு பேப்பரில் ஆரும் எழுதலாம், தகவல் சரியெண்டால் எங்களுக்கு சரி.

ஒரு பேப்பர்காரிகளின் ஆக்கங்கள் இப்ப குறைஞ்சு போட்டு எண்டு நீங்கள் சொல்லிறது உண்மைதான். ஆளாளுக்கு பிசியாய் போயிட்டினம் புது ஆக்கள்தான் முன்வர வேண்டும். அதுபோலை புவனமக்கா, கிரேசக்கா ஆக்களின்ர கடிதங்களையும் கனகாலமாக காணவில்லை.

நீங்கள் ஒரு பேப்பர் சந்தாரராய் இருந்து, பேப்பர் வருகிறது நிண்டு விட்டது எண்டால் கூச்சப்படாமல் எங்களுக்கு ஒரு ஈமெயில் போடுங்கோ, அல்லது போன் அடிச்சு பாலாண்ணையோடை கதையுங்கோ. ஆவன செய்வோம். சந்தாரராய் சேர்வதன் மூலம் உங்கள் பேப்பரை தவறாமல் பெற்றுக் கொள்ளலாம்.

கனடாவிலை இயங்குகிற ரேடியோக்களுக்குள் ஒரு பேப்பர்காரர் குழப்பத்தை ஏற்படுத்தியிருகினம் எண்டு அடிபடுகிற வதந்திகளில் எந்தவிதமான உண்மையுமில்லை. ஒரு ரேடியோவை நடத்தேலாமல் நிறுத்தி விட்டு குத்துவிளக்குக்கு பக்கத்திலை நிக்கிறம், சும்மா தமாஸ் பண்ணாதேங்கோ!

யாழ் நூலக எரிப்பு பற்றிய “எரியும் நினைவுகள்” என்ற ஆவணப் படத்தை நாங்கள் லண்டனிலை வெளியிடுகிறோம். வெளியிடப்படும் திரையரங்கு இன்னும் முடிவாகவில்லை. அநேகமாக மே 31ம் திகதி சனிக்கிழமை மாலையில் இந்த வெளியீட்டு விழா நடைபெறும். வந்து பாருங்கோ, ரசியுங்கோ, படம் எடுத்தவையை உற்சாகப்படுத்துங்கோ!

ஒரு விருதுக்கான மொபைல் கமராவில் எடுத்த காணொளிப்படங்களை அனுப்புமாறு கேட்டிருக்கிறோம். இது வித்தியசமான முயற்சி உங்கள் கலைத்திறனை காட்ட நல்ல சந்தர்ப்பம். நீங்கள் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள் என எதிர்பார்க்கிறோம்.