காலக்கரைதலைப் பதிவாக்கும் ஊடகத்தாரின் ஒன்று கூடல்

by:
இதயச்சந்திரன்

சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்த மாநாடு, கடந்த சனிக்கிழமை ஏப்ரல் 26ஆம் திகதி இலண்டனில் நடாத்தப்பட்டது.

ரேச்சல் கோகன்

சம்பிரதாய பூர்வ மங்கள விளக்கேற்றலுடன், உயிர்நீத்த ஊடகவியலாளர்கள் மற்றும் கொல்லப்பட்ட மக்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.

இம்மாநாட்டினை ஓழுங்கமைத்த ~ஒரு பேப்பர்| ஆசிரியரும், ஒன்றியத்தின் பிரதிநிதியுமான திரு. கோபி இரத்தினத்தின் வரவேற்புரையினை அடுத்து திரு. ஐவன் பேதுருபிள்ளையின் தலைமையில் முதல் அமர்வு தொடங்கியது.

உலகின் பலபாகங்களிலுமிருந்து ஊடகவியலாளர்கள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தாலும், தாயக விடுதலைக்காகத் தமது பங்களிப்பினை வழங்கிக் கொண்டிருக்கும் ஊடகவியலாளர் பலர் இம்மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.

குறிப்பாக அவுஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்ப+ர், சுவிஸ், ஜேர்மனி, நோர்வே நாடுகளிலுள்ள பத்திரிகைத்துறை சார்ந்த எழுத்தாளர்கள் சமூகமளிக்காதது பெருங் குறையாகத் தென்பட்டது.

அத்தோடு ~உதயன்| ஆசிரியர் திரு. வித்தியாதரன் இந்நிகழ்வில் கலந்து கொண்டாலும், சிறீலங்காவைச் சார்ந்த வேறு ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டிருந்தால், இன்னமும் சிற்ப்பான விரிந்த பார்வை கொண்ட மாநாடாக இது அமைந்திருக்கும். சகலரையும் உள் வாங்கக்கூடிய நிதிவளம், ஒன்றியத்ததிற்கு இல்லாமல் இருந்திருக்கலாம்.

ஆயினும் பலதரப்பட்ட ஊடகவியலாளர்களின் நேரடி அறிமுகம் பெறும் வாய்ப்பு, இம் மாநாட்டினூடாகக் கிடைக்கப் பெற்றதென்பது சிறிது ஆறுதலான விடயமே.

கனடாவிலிருந்து வருகை தந்திருந்த ஆய்வாளர் திருச்செல்வம், கவிஞர் சேரன், அவுஸ்திரேலியா ~இன்பத்தமிழ்| வானொலியைச் சேர்ந்த பிரபாகரன் ஆகியோர் தமது கருத்துக்களை இம்மாநாட்டில்; விளக்கமாக முன் வைத்தனர்.

இந்நிகழ்வின் இரண்டாவது அமர்விற்கு தலைமை வகித்த தமிழ் கார்டியனின் (Tamil Guardian) உதவி ஆசிரியை செல்வி. வினோதினி கணபதிப்பிள்ளை, பேச்சாளர்களை அறிமுகப்படுத்தும் போது ஊடகப் பரிமாணம் குறித்தத அவரது ஆழமான புரிதல் வெளிப்பட்டது.

சிறீலங்காவிலுள்ள இருமொழி ஊடகங்கள் வெளிப்படுத்தும் வித்தியாசமான பார்வையை ஒப்பீட்டாய்வு செய்த தமிழ் கார்டியனின் ஆசிரியர் சுதா. நடராஜா அவர்கள், 2004ஆம் ஆண்டுத் தேர்தலில் சிங்கள ஊடகங்கள் போட்ட இரட்டை வேடத்தையும், 2003இல் தோற்றமுற்ற பொஞ்குதமிழ் எழுச்சி நிகழ்வுகளை அவ்வ+டகங்கள், சிறு கட்டச் செய்தியாக்கியிருந்த விதத்தை அம்பலமாக்கினார்.

ஊடகமென்பது நிகழ்வுகளைப் பதிவாக்கி வெளிப்படுத்தும் கண்ணாடியாகவும் அமையலாம் அல்லது உள்வாங்கப்பட்ட விடயத்தை சுயமான பார்வைக்கு உட்படுத்தி கருத்துக் கூறும் தளமாகவும் இருக்கலாம்.

இதிலிருந்து வேறுபட்ட கோணத்தில் அமைந்திருந்தது கவிஞர் சேரனின் ஊடகம் பற்றிய பார்வை.

சுதந்திமாகக் கருத்துக் கூறுவது, உண்மையான ஜனநாயகச் சமூகத்தின் வெளிப்பாடாவென விரிவுரையாற்றிய சேரன், தமிழிலும், சிங்களத்திலும் காத்திரமான பத்திரிகைகள் கிடையாதென தனது ஊடகம் பற்றிய கருத்தியலை நிறுவினார்.

ஆயினும் கொலைக் களத்தில், ஒற்றைக் காலில் நின்றவாறு எழுத்துச் சமராடும் பத்திரிகையாசிரியர் ஒருவர், சேரனின் கூற்றினை முழுதாக நிராகரித்தார்.

தமிழ்பத்திரிகையாளர்கள் அனைவரும், தம்மை நிபுணர்களாக (EXPERTS) கற்பிதம் கொள்வதால் உண்மையான கலாநிதிப் பட்டம் சுமக்கும் நிபுணர்களிடம் ஆலோசனை பெறுவதில்லையென்கிற குற்றச்சாட்டை சேரன் சுமத்தும்போது, ~மாமனிதர்| தராகி சிவராமின் நினவுகள் ஒரு கணம் ஓடி மறைந்தது.

போராட்ட காலத்தோரும், சுயவிமர்சனத்தினூடாக சரியான பாதையில் பயணித்த காத்திரமான ஊடகவியலாளருமாகிய சிவராமை, இம் மாநாட்டில் பங்குபற்றிய எவரும் நினைவு கூரவில்லையென்கிற ஆதங்கம் பார்வையாளர்கள் பலரிடம் காணப்பட்டது.

தத்துவமும், நடைமுறையும் ஒன்றிணைந்து, மக்கள் நலன் சார் கருத்தியலை தன்னகத்தே வரித்துக் கொண்ட ஊடகத்தார் பலர், நம்மிடையே இன்றும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மைத் தரிசனங்களையும், தேச பக்தியையும் (PATRIOTISM) வகைபிரித்துப் பார்க்கும் பார்வையில், உண்மையென்பது எதனையும் சாராத தனிநிர்ணயம் (ABSOLUTE) என்று நிறுவும் முயற்சியில் மேற்குலகச் சிந்தனை ஆக்கிரமிப்புச் செலுத்துகிறது.

தேசியம், தாயகம், தேசபக்தி போன்ற கருத்துருவங்களை உடைத்து நொருக்கி ஏதுமற்ற புதிதான தளத்தில் பின் நவீனத்துவங்களை நிறுவும் பாதையில் உண்மை| என்கிற சொல்லாடலை கடவுளாக்கும் முயற்சியும் நடைபெறுகிறது.

புதிய இருப்பிற்கான நிலைநிறுத்தலில், முரண்பாடுகளுள் அகப்படாமல், அந்நியமாகி பொது மனிதப் பார்வையை தனது உருவமாக வெளிக்காட்டும் போக்கு மக்களிடமிருந்தே இவர்களை தனிமைப்படுத்திவிடும்.

சர்வதேச தமிழ் ஊடகப் பரப்பில் தேசிய விடுதலைப் போராட்ட நியாயப்பாடுகளை உளபூர்வமாக ஏற்றுக் கொள்ளும் பத்திரிகைகள், வானொலிகள் அதிகமென்பது உண்மை.

அதற்காக, மாறறுக் கருத்துக் கொண்ட சஞ்சிகைகள், பத்திரிகைகள் வெளிவருவதில்லையென்கிற யதார்த்தம் உண்மைக்குப் புறம்பானது.

அவ்வாறு வெளிவரும் சஞ்சிகைகள், ஆரோக்கியமான விமர்சனத் தளமொன்றை உருவாக்கினால், இனத்துவ விழுமியங்களை செழுமைப்படுத்தும் வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.

அதைவிடுத்து, ஊடகங்களெல்லாம் பக்கச்சார்புப் பரப்புரைகளை முன்னெடுப்பது போலவும், துறைசார் நிபுணர்களின் கருத்துக்களை செவிமடுக்காமல் அரைவேட்காட்டுத் தனமான செய்திகளை வெளியிடுகின்றன என்பது போன்ற விமர்சனங்களை முன்வைப்பது பொருத்தமானதல்ல.

தமது குரல் வளத்தினூடாக சில பிம்பங்களையும், பிரமிப்புக்களையும் பொது ஜனங்கள் மத்தியில் ஒரு சிலர் உருவாக்கலாம்.

மன்னர் காலத்து பண்டைய இலக்கியங்களையும், மக்கள் இலக்கியத்தையும் வகை பிரித்தறியமுடியாத பிரம்மாக்கள், நாற்காலிகளை இறுகப்பற்றிப் பிடிக்கலாம்.

ஆனாலும் ஒருவருக்கொருவர் முதுகு சொறிந்து, புகழாரங்களைப் பரிமாறிக் கொள்ளாத மேடையினை இம் மாநாட்டில் கண்டு கொண்டோம். சற்று ஆறுதலான விடயம். இங்கு உரை நிகழ்த்திய அனைவரும், தமது கருத்துக்களை நேர்த்தியான விமர்சனப் பாங்கில் பல மரிமாணங்களில் வெளிப்படுத்திய விதம், ஆரோக்கியமாக இருந்தது.

தனித் தமிழீழமே நிரந்தரமான தீர்வென்பதை, இந்தியவிலிருந்து வருகை தந்த டெக்கான் குரோனிகல்ஆசிரியர் திரு பகவான் சிங் அவர்கள் பிரகடனம் செய்தார்.

இலண்டனில் இயங்கும் தீபம், தரிசனம் தொலைக்காட்சியினரோடு, ஐ.பி.சி வானொலியில் பங்காற்றும் இளந்தலைமுறையினரும், தேசம்| ஆசிரியரும் கலந்து கொண்டது இம்மாநாட்டின் சிறப்பு அம்சமாகக் கருதலாம்.

பேச்சாளர்கள், பார்வையாளர்களுடன் கருத்துப் பகிர்வினை ஏற்படுத்திக் கொண்ட இத் தொலைக்காட்சி ஊடகத்தார் உலக மக்களின் தரிசனத்திற்கு அந்நிகழ்வினையும் நேர்காணல்களையும் கொண்டு சென்றுள்ளனர்.

இம்மாநாடு ஏற்படுத்திய எழுச்சியின் விளைவாக, பல தேசங்களிலும் (இந்தியா உட்பட) இவ்வகையான ஊடக மாநாடுகள் நடாத்தப்படும் ஏது நிலைகள் உருவாகுவது போலத் தெரிகிறது.

தேசிய விடுதலைப் போராட்ட நியாயப்பாடுகளை சர்வதேச மட்டத்தில் கொண்டு செல்லக் கூடிய பரப்புரையாகவும் உண்மைக் களநிலவரத்தை வெளிச்சமாக்கும் நிகழ்வாகவும் இம்மாநாடுகள் அமைந்தால் களத்திற்குப் பலம் சேர்க்கும்.