“தமிழர்களுக்கு எதிரானதாக ஏன் கருதுகிறீர்கள்? அது வணிகரீதியானதாக கூட இருக்கலாமே”.
இலங்கை அரசுக்கு இந்திய அரசு வழங்கும் ஆயுத மற்றும் கடன் உதவிகள் பற்றி நடிகர் விஜயகாந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது. “புரட்சிக்கலைஞர்" வழங்கிய பதிலிது.
இத்தோடு நிற்காமல். “வருங்கால தமிழக முதல்வர்” புவிசார் அரசியல் (Geo politics) தொடர்பான தனது “மேதமையை” மேலும் வெளிப்படுத்தினார். அதாவது சீனா, பாக்கிஸ்தான் போன்ற நாடுகள் இலங்கையுடன் ஒட்டி உறவாடுவதைத் தடுக்கவே இவ்வாறான உதவிகள் வழங்கப்படுகின்றனவாம்! இச்செய்தியை பி.பி.சி. நிறுவனம் தனது தமிழ், சிங்கள சேவைகளில் குருரமான புளங்காகிதத்துடன் “போட்டுத் தாக்கியிருக்கின்றது”.
அயோத்திதாசர். பெரியார் என்று பகுத்தறிவுவாதிகள் சமூக நீதி கேட்டுப் போராடிய தமிழக அரசியல் இன்று இலவச கலர் ரீவியிலும், பிரியாணி பொட்டலத்திலும் தஞ்சம் புகுந்திருப்பதுதான் ஒவ்வொரு தமிழனையும் வெட்கித் தலைகுனிய வைக்கும் விடயம். அண்ணாத்துரை முதல் விஜயகாந் வரை அரசியலுக்காக சினிமாவையும், சினிமாவுக்காக அரசியலையும் பயன்படுத்தி முழு தமிழக அரசியலையும் கோமாளிக் கூத்து மேடையாக்கி விட்டனர்.
தற்போது வரலாற்றில் என்றுமில்லாதவாறு ஒரு கொடுர யுத்தத்தையும், அழிவுகளையும் தமிழீழ மக்கள் எதிர்கொண்டுவரும் வேளையில், தமிழகத்தின் நத்தை வேக எதிர்வினையானது (ஒரு சில தமிழ் உணர்வாளர்களைத் தவிர்த்து) தமிழகத்தின் அரசியற் பிரதிக்ஞையானது சீரழிவின் விளிம்பில் இருப்பதை புலப்படுத்துகிறது. கலைஞர் கருணாநிதியின் அண்மைய சட்ட மன்ற உரை இதனை தெளிவுபடுத்துகின்றது.
அன்று கல்லக்குடியில் தமிழ் மானம் காக்கப் போராடிய கலைஞர் இன்று, வெறும் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காக தமிழினத்தை விற்கத்துணிந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்திற்கு வக்காலத்து வாங்குகிறார். ஒரு சிலர் கருணாநிதியின் வயது காரணமாக அவர் dementia நோயினால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் எனக் கருதும் அளவுக்கு அவரது உரை மோசமாக இருந்தது. இதே கலைஞர்தான் சில வருடங்களுக்கு முன்பு செக்கோஸ்லாவிய நாட்டை செக் குடியரசாகவும், சிலாவாக்கிய குடியரசாகவும் பிரித்ததுபோல் இலங்கைத்தீவை பிரித்துவிட்டால் தமிழர்கள் பிரச்சனை தீர்ந்து விடும் என்றார். இதைக் கேள்விப்பட்ட “இந்தியா ருடே” வாஸந்தி பதறிப்போய் கலைஞரின் நாக்கில் சனி புகுந்துவிட்டது என்று அடுத்த இதழில் எழுதியிருந்தார்.
இலங்கை அரசுக்கு உதவி செய்வது என்பது தமிழர்கள் மீதான போர்நடவடிக்கைக்கு மறைமுகமாக உதவியளிப்பதாக இருக்கும் என்று கருதி மொழியாலும் கலாச்சாரத்தாலும் வேறுபட்ட பல நாடுகள் உதவியளிப்பதை தவிர்க்கும் வேளையில் நடிகர் விஜயகாந்தின் இவ்வாறான பேச்சு ஒட்டுமொத்த தமிழர்களையும் முட்டாள்கள் எனக்கருதி வெளியிட்;;டதாகவே முடிவுக்கு வரவேண்டியுள்ளது.
நாங்கள் ஜீ.ஜீ. பொன்னம்பலம் முதல் அமிர்தலிங்கம் வரை நிறைய சட்டம் படித்த “எம்டன்” களை பார்த்தவர்கள், கமராவை நோக்கி கையை உயர்த்தி வசனம் பேசுவதற்கும், காலைத்து}க்கி ஒரே நேரத்தில் நாலுபேரை அடிப்பதுபோல் “பாவ்லா” காட்டுவதற்கும் அப்பால் ஒரு இழவும் தெரியாத கோமாளி நடிகன் தனக்குத் தெரிந்த விடயங்களை நடிக நடிகையரின் படுக்கையறைத் தகராறுக்கு சமரசம் செய்தல், காவிரி நீர், முல்லைப் பெரியார் அணை, இலவச வேட்டி, சேலையோடு தனது பிதற்றல்களை நிறுத்திக் கொள்வது நல்லது.
தமிழீழ தேசிய விடுதலைப்போராட்டம் என்பது வாழ வேண்டிய வயதில் ஆண்களும், பெண்களும் இரத்தமும் சதையும், நிணமுமாகச் சிதைத்து தாயகவிடுதலையை நோக்கி நகரும் உன்னதமான மானிடவிடுதலைப் போர். மகனுக்கு பிரபாகரன் எனப்பெயரிட்டு “படம்காட்டும்” விடயமல்ல இது. காமாளை கண்ணை மறைத்து கறுப்புக்கண்ணாடியணிந்து நமீதாவின் அல்குல் தடவும் வேலையும் அல்ல இது. ஒரு இனத்தின் இருப்பிற்கான போர். இழப்பதற்கு எதுவில்லையென்றான பின்., செய் அல்லது செத்து மடி என்றான போர் இது.
தமிழ் சினிமாவின் சந்தைப்படுத்தலில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் பங்களிப்பானது ஏறத்தான 30லிருந்து 50 விழுக்காடு வரையிருக்கும் என்று கூறப்படுகின்றது. இன்னொரு வகையில் கூறுவதானால், படத்தயாரிப்புச் செலவை மீளப்பெறுவதற்கு உத்தரவாதமான சந்தையாக நமது ஈழத்தமிழர்கள் விளங்குகிறார்கள். இதற்கு ஏதுவாக ஒரு சில ஈழத்தமிழ் வியாபாரிகளை தமிழக சினிமா பயன்படுத்துகின்றது. இந்த ஈழத்தமிழ் வியாபாரிகள் நமது மக்கள் தலையில் “பொறுக்கி”, “போக்கிரி” என்று கழிசடைப்படங்களை கட்டியடித்து வி;ட்டு இலாபத்தை சுரட்டிக் கொள்கிறார்கள்.
இவ்வாறான நிறுவனங்களும், வியாபாரிகளும் புலம்பெயர் தமிழரின் விரக்தியையும், கோபத்தையும் தமிழக சினிமாத்துறைக்கு எடுத்துரைக்க வேண்டிய தருணம் வந்து விட்டது. அதாவது தமிழக சினிமாத்துறையானது ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டம் தொடர்பில் ஒரு காத்திரமான நிலைப்பாட்டை எடுக்க வேண்;டியதுடன், ஈழத்தமிழரின் வாழ்வையும் உணர்வுகளையும் வெளிப்படுத்துகின்ற படைப்புக்களை உருவாக்குவதற்கு ஊக்கமளிக்க வேண்டும். (மாங்குளத்தில் மலையைக்காட்டாவிட்டால் சரி). அவ்வாறு இல்லாதவிடத்து ஒரு முழுமையான தமிழ் சினிமா புறக்கணிப்பு இயக்கம் உருவாவதை அந்த ஆண்டவன் ஐங்கரனாலும் தடுக்க முடியாது.
இறுதியாக “புரட்சி கலைஞர்” விடயத்திற்கு வருவோம், விஜயகாந்து புது தில்லியில் கூறிய கருத்திற்கு நிபந்தனையற்ற வகையில் மன்னிப்புக்கோர வேண்டும். அவ்வாறு செய்யத்தவறும் பட்சத்தில் அவரது 150வது படமான “அரசாங்கம்” ஐ தன்மானமுள்ள ஈழத் தமிழர்கள் புறக்கணிப்பார்கள் என்பதனை அவருடன் கூடிக்குலாவும் ஈழத்தமிழ் வியாபாரிகள் அவருக்கு கூறவேண்டும், தவறும்பட்சத்தில் அவர்களது வியாபார நிறுவனங்களும் புறக்கணிப்புக்கு உள்ளாக நேரிடும
Recent comments
5 weeks 3 days ago
5 weeks 3 days ago
5 weeks 4 days ago
6 weeks 1 day ago
6 weeks 1 day ago
6 weeks 6 days ago
7 weeks 2 days ago
7 weeks 6 days ago
8 weeks 6 days ago
8 weeks 6 days ago