சொர்க்கமும் நரகமும் நம் வசமே..

என்னுடைய வியாக்கியானங்களைக் கேட்டு (நண்பர் ஒருவருக்கு அது விதண்டாவாதம்)  நண்பர் ஒருவருக்கு கோபம் அல்ல; கடுங்கோபம். அவரே கோபத்துடன் தான் சொன்னார்.

"உங்கள் தரவளிக்கெல்லாம் மோட்ச வாசல் திறபடாது. அடைபட்டுத்தான் கிடக்கும்''
அவருக்கு நான் சொன்னன்.
"அப்பிடி திறபடாட்டில் உதைஞ்சு திறப்பன்''.

இதைப் பகிடியாகத்தான் சொன்னேன். என்றா
லும், அவர்களின் அறியாமைக்கு நான் கொடுத்த `உதை' என்றும் இதனைப் பார்க்கலாம்.

`சொர்க்கமும் நரகமும் நம் வசமே' என்று `வசந்த மாளிகை' திரைப்படத்தின் `கலைமகள் கைப்பொருளே' என்ற பாடலில் கண்ணதாசன் சொல்கிறார். `உனக்கான சொர்க்கம் இந்த உலகிலேயே உண்டு' என்றார் ஓர் அறிஞர். உண்மை அதுவே.

நாம் செய்பவை தான் நமக்கான சொர்க்கம்
அல்லது நரகம். நாம் செய்வதற்கு அப்பால்பிரார்த்
தனையாலேயோ,கும்பிடுவதாலேயோ, நேர்த்திக்கடனினாலேயோ, அபிஷேகத்தினா
லேயோ, ஆராதனையினாலேயோ,மேலேயோ,
கீழேயோ, சொர்க்கம்-நரகம் என்று எதுவும் கிடையாது.

மேற்சொன்ன உரையாடலும் ஒரு பேப்பர் இல் வந்த
ஒரு விசயம் தொடர்பான விவாதத்தில் இருந்து தான் தோன்றியது. இறுதியாக வந்த ஒரு பேப்பர்  இல் `ஊரின் வாசம்' என்ற பந்தியில் கவுணாவத்தை வேள்வி பற்றி ப.வை. ஜெயபாலன் எழுதியிருந்தார். அதனை வாசித்த நண்பா ஒருவர் வேள்வி செய்பவர்கள் நரகத்தைத் தான் அடைவார்கள் என்ற தொனிப்பட பறைந்தார்.

அவருடைய கருத்துப்படி இறைச்சி தின்பதே பாவம். அதிலும் கோயிலில் இறைவனுக்கு முன்னால் உயிர்களைப் பலியிடுவது என்பது கடும் பாவம். அவர்களுக்கு அப்பீலே கிடையாது. ஸ்ரெயிற்றா (straight) நரகம் தான். இது அவர் அபிப்பிராயம்.
இப்பிடிக் கதைப்பவர்களுக்கு சில விசயங்களை
விளங்கப்படுத்த நினைத்தேன். அப்படிக்
கதைக்கப் போய் தான் எனக்கு `சொர்க்க வாசல்' அடைபட்டது.
 வேள்வி என்ற சொல் எங்கிருந்து முளைத்தது என்று பார்க்க வேண்டும். வேள்விக்கு இன்னொரு பெயர் யாகம். இந்த வேள்வியானது புராண காலக் கதைகளின் படி முனிவர்களாலேயே செய்யப்பட்டது. அந்த வேள்வியில் ஆகுதி வளர்த்து அவிர்பாகம் இட்டார்கள். ஆகுதி என்பது நெருப்பு, அவிர்பாகம் என்பது தானிய வகைகள் போன்றவற்றுடன் ஆடு,  மாடு,குதிரை போன்ற உயிரினங்களாகும்.

அதாவது முனிவர்கள் நெருப்பினில் ஆடு,மாடு, குதிரை முதலான உயிரினங்களைப் பலியிடுகிறார்கள். இவ்வாறு பலியிடுவதிலிருந்து வந்த பெயர் தான் வேள்வி.

அந்த வேள்வி தான் இப்பொழுது கவுணா
வத்தை வைரவர், உரும்பிராய் காட்டு வைரவர்,
அன்னமார்,  அய்யனார் முதலான தமிழ்த்
தெய்வங்களின் கோயில்களில் நடைபெறுவ
துண்டு. `தமிழ்த் தெய்வங்கள்' என்று நான் சொன்னதும் ஒரு அர்த்தத்துடன் தான். அதாவது சிவன்,  விஷ்ணு, பிள்ளையார், கந்தசாமி முதலான தெய்வங்கள்  தமிழ்த் தெய்வங்கள் அல்ல. அவை ஆரியத் தெய்வங்கள்.

வைரவர், அன்னமார்,  முதலிமார், அய்யனார்,
காத்தவராயர் முதலானவை தமிழ்த் தெய்வங்கள். முருகன், அம்மன் போன்றனவும்  தமிழ்த் தெய்வங்கள் தாம்.
ஆயினும் வைரவர் முதலானவற்றிலிருந்து  முருகன், அம்மன் முதலான தெய்வங்கள் வேறுபடுவது வேறொரு அர்த்தத்தில்.
அவை பற்றி இதில் விளக்கப்புகின் இந்தப் பத்தி போதாது. அவை பற்றி பிறிதொரு சமயம் பார்க்கலாம். சிறு தெய்வ வழிபாடு நிகழும் இந்தக் கோவில்களில் நடைபெறும் வேள்வி என்பது தமிழ்ப் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்று. உயிர்களைப் பலியிடுதல் என்று சொல்கிற போது அல்லது அதனைப் பார்க்கிற போது மனதுக்கு சங்கடமாகத் தான் இருக்கிறது. என்ற போதிலும் கருத்து ரீதியாக அதில்  சங்கடப் பட ஒன்றுமில்லை.

`படைக்கப்பட்ட அனைத்து உயிர்களும் மனிதர்
களுக்காகவே' என்கிறது பைபிள். மனிதர் உணவு
க்காக பிற உயிர்கள் பலியாவது பிழையல்ல என்கிறது குர் ஆன். தமிழ்ப் பண்பாடும் அதையே சொல்கிறது.

இந்து மதம் கூட ஆரம்பத்தில் புலால் உண்ணலை மறுக்கவில்லை. இரண்டாயிரம் வருடங்களுக்கு முற்பட்ட இந்து மதம்  புலால் உண்ணலை அனுசரித்தே வந்தது.

கி.பி. 3ம் நூற்றாண்டளவில் பல்கிப் பெருகிய சமண மதம் தான் புலால் உண்ணலை முற்றாக நிராகரித்தது. பஞ்சமாபாதகங்களுள் ஒன்றாக புலால் உண்ணலைச் சேர்த்தது. அதனையே பின்னர் ஆரிய வழி வந்தோர் கைக்கொள்ளத் தொடங்கினர். சமண மதக் கொள்கைகள் பல
வற்றை இந்து மதம் தனதாக்கிக் கொண்டது.
ஆரியர் தமது பண்பாட்டை எம்மீது திணித்
ததன் ஒரு கூறுதான் புலால் உண்ணலைப் பாவம்
என்பது. ஆரியர் பண்பாட்டிலிருந்து சொர்க்கம்,
நரகம் என்ற சொற்களும் நம்மிடையே வந்தது.

தமிழ் மனிதப் பண்பாடு ஒன்றுதான். `மனிதர்களாக வாழ்வோம் மனிதர்களுக்காக வாழ்வோம்'. அதுவே சொர்க்கம். அதனால் தான் சொல்கிறேன்
`சொர்க்கமும் நரகமும் நம் வசம்'