வணக்கம்!
முன்னமே சொன்னமாதிரி இந்தப் பேப்பர் மாதத்தின் இரண்டாவது வெள்ளியன்று வெளிவருகிறது. மற்றயபடி உங்களை சிலர் பயப்படுத்தியது மாதிரி எங்களை யாரும் அள்ளிக் கொண்டு போகவில்லை.
எங்களது பணிமனை அமைந்துள்ள கட்டிடத்தொகுதி பிரித்தானிய உள்ளக காவல்துறையினரின் தேடுதலுக்கு உள்ளானது உண்மைதான். இருந்தாலும் அது எமது பத்திரிகையின் நடவடிக்கை சம்பந்தப்பட்டதோ அல்லது ஒரு பேப்பர்காரன்கள் காரிகள் சம்பந்தப்பட்டதோ இல்லை என்பதை சொல்லி வைக்க விரும்புகிறோம். எல்லாம் உள்ளது உள்ளபடியே இருக்கின்றது என்பதையும் சொல்லவேணும்.
இந்தச் செய்தியை “பனை நடந்து வந்து பந்தல்கால் போட்டது” கணக்கில் எழுதி தமது நம்பகத்தன்மையை சில இணைய தளங்கள் வெளிப்படுத்தின அவர்களுக்கு நாங்களும் நீங்களும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறம். சும்மா சொல்லக்கூடாது இருந்த இடத்திலை இருந்து கொண்டு என்னா மாதிரி கதை எழுதியினம். ஆச்சரியம்தான். Keep it Up!
சோடிச்ச இந்த கதையளைக் கேட்டு பதற்றப்பட்டு எங்களைத் தொடர்பு கொண்ட அனைவருக்கும் நன்றி. உங்களிடமிருந்தோ காவல்துறையினரிடமிருந்தோ மறைப்பதற்கு எங்களிடம் எதுவும் இல்லை என்பதை நீங்கள் விளங்கிக் கொண்டால் சரி.
எங்கட கூட்டாளி ஒருவர், ஏன் பேரை மறைப்பான், ஜெர்மனி வி.சபேசன் போன கிழமை தமிழ் முறைப்படி தோழி கலைநிதியை திருமணம் செய்து கொண்டார். எல்லாம் தமிழிலை எண்டதாலை வடிவா விளங்கிச்சுது. உங்கள் சார்பிலும் அவையளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தோம். நீங்களும் ஆரும் தமிழ் முறைப்படி திருமணம் செய்யிறதெண்டால் அவரிட்டை விபரம் கேட்கலாம். நாங்களும் வந்து வாழ்த்துகிறோம்.
ஒரு பேப்பர் (பிரித்தானியப் பதிப்பு) முழுமையாக Pனுகு வடிவில் எமது இணையத்தளத்தில் இப்போது தரவேற்றம் செய்யப்படுகிறது என்பதை அறியத்தருகிறோம்.
ஒரு விழா பற்றிய அறிவித்தல்கள் சிலவற்றை இந்தப் பேப்பரில பிரசுரிச்சிருக்கிறம். மேலதிக விபரங்களை அடுத்துவரும் பேப்பருகளிலை பிரசுரிப்பம். இந்த விழாவுக்கு வருவதற்காக தமிழகத்திலை ஒருவர் சுடச்சுட எடுத்த பாஸ்போர்ட்டுடன் காத்திருக்கிறார். ஆர் எவர் எண்டதை பிறகு சொல்லிறம்.
மீண்டும் சந்திப்போம்
Recent comments
5 weeks 3 days ago
5 weeks 3 days ago
5 weeks 4 days ago
6 weeks 1 day ago
6 weeks 1 day ago
6 weeks 6 days ago
7 weeks 2 days ago
7 weeks 6 days ago
8 weeks 6 days ago
8 weeks 6 days ago