வணக்கம்!
கனடாக்காரர் ஒரு பேப்பருக்கு ஆக்கங்களை அனுப்பிறது குறைஞ்சிட்டுது எண்டு போன பேப்பரிலை எழுதினதாலேயே என்னவோ, இந்தமுறை ரொறன்ரோவிலிருந்தே ஒரு பேப்பர்காரன்கள் காரிகளின்ர ஒப்பாரியை எழுத வேண்டியதாய் போயிட்டு;து (ஏன் அபசகுனமாய் ஒப்பாரி எண்டு தொடங்கிறியள் நினைக்கிறவை அதை பூபாளம் எண்டு அல்லது விரும்பினமாதிரி மாத்தி வாசியுங்கோ). சும்மா சொல்லக்கூடாது சுத்திவர சினோவை பாத்துக் கொண்டு ரிம் ஹோட்டன் கோப்பியை குடிச்சுக் கொண்டு எழுதிறது நல்லாய்தான் இருக்கு.
இஞ்ச வாற இரண்டு டசின் பேப்பருகளுக்கிள்ளை ஒரு பேப்பரையும் நீங்கள் தேடி எடுக்கிறதாய் தமிழ் கடைக்காரர் சொல்லேக்கை இந்த குளிருக்கையும் எங்களுக்கு வோர்ம் ஆய் இருக்குது. கனடாவிலை ஒரு பேப்பர் பிந்தி பிந்தி வருகிறது எண்ட குற்றச்சாட்டுக்களை உரியவர்களின் கவனத்தில் கொண்டு வந்துள்ளோம். இனி மாதத்தின் முதல் வெள்ளியும் மூண்டாம் வெள்ளியும் தப்பாமல் வரும் குறிச்சுக் கொள்ளுங்கோ.
அது போல பேப்பர் முழுக்க ஊர் வாசமில்லை ஐரோப்பிய வாசம்தான் மணக்குது எண்ட உங்கட புறணியும் எங்களுக்கு விளங்குது. ஆனால் அதுக்கு நீங்கள்தான் உதவிசெய்யோணும். நெடுகச் சொல்லிற விசயம்தான் திரும்பவும் சொல்லிறம்.. ஒரு பேப்பரில் எழுதுவதற்கு எந்த மேதாவிலாசமோ, முன் அனுபவமோ தேவையில்லை. ஊடகத்துறையில் அல்லது எழுத்துத்துறையில் நீண்ட கால அனுபவமிருந்தால் .. நீங்கள் எழுதிறது எங்களுக்கு விளங்காமல் உங்கட ஆக்கங்களை நாங்கள் பிரசுரிக்காமல் விட சந்தர்ப்பம் இருக்குது எண்ட விசயத்தையும் முன்னமே சொல்லி வைக்கிறம்.
ஒரு பேப்பரின் பத்தி எழுத்தாளர்களில் பெரும்பகுதியினர் எமது பணிமனைகளிலிருந்து செயற்படுவதில்லை. சிலபேரை நாங்கள் கண்ணாலையே கண்டதில்லை. ஆகவே அவர்களுடன் தொடர்பு கொள்ளிறதற்கு நீங்கள் விரும்பினால் உங்களது தொடர்பு விபரங்களையும் எது விடயமாக தொடர்புகொள்ள விரும்பிறியள் எண்டதையும் எங்கட பணிமனையில் உள்ளவைக்கு சொல்லுங்கோ. நாங்கள் உங்கடை மெசேஜை உரியவைக்கு சேர்ப்பிப்பம். அதை விட்டுட்டு எங்களுக்கு போன்பண்ணி ஆளைக் கொண்டா எண்டால் நாங்கள் எங்கை போறது?
பொதுவான விநியோகம் இல்லாத இடங்களில் உள்ள தமிழ் உணர்வுள்ளவைக்கு ஒரு பேப்பரை சேர்பிக்கிறதற்காக, கண்டங்கள் கடந்து, களமோ, தடுப்பு முகாமோ என்று பாராமல் எங்கள் வசதிக்கு உட்பட்ட அளவுக்கு, பேப்பரை அனுப்பி வருகிறம். யாராவது விடுபட்டிருந்தால் சொல்லுங்கோ. அவையள் அலாஸ்காவில் இருந்தாலும் சரி பூசாவில் (அங்கே உள்ளே கொண்டு போக விடுவினமோ?) இருந்தாலும் சரி நாங்கள் அனுப்பி வைப்பம்.
எங்கட வழமையான ரீன் பேப்பர் எழுத்தாளர்கள் சிலர், எக்சாம் பீவரிலும், கோர்ஸ் வேர்க் சுமையிலும் நொந்து நூலாய்(?) போய் இருக்கினம். அதாலை அவையள் இப்ப எழுதிறது குறைஞ்சிட்டிது. புதுமுகங்களை அறிமுகம் செய்ய வேண்டியிருக்குது. உங்களுக்கு தெரிஞ்ச பெடி பெட்டையள் இருந்தால் சொல்லுங்கோ. ஏன் நீங்களே எழுதக்கூடாது? (நீஙகளும் ரீன்தானே? மனதளவிலாவது)
மீண்டும் சந்திப்போம்
Recent comments
1 year 20 weeks ago
1 year 21 weeks ago
1 year 26 weeks ago
1 year 29 weeks ago
1 year 29 weeks ago
1 year 29 weeks ago
1 year 30 weeks ago
1 year 33 weeks ago
1 year 38 weeks ago
1 year 43 weeks ago