பேப்பர் 89

வணக்கம்!

மூன்று வார கால இடைவெளியில் சந்திக்கிறோம். பெப்பிரவரி 29 வெள்ளியன்று வந்ததால் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை 7ம் திகதியாகி வி;ட்டது. இந்த இடைவெளியை பொறுக்க முடியாமல் என்னடியப்பா இன்னமும் பேப்பரைக் காணேல்லை .. என்ன செய்யிறியள்.. எண்டு கேட்டு போன் அடிச்ச ஆக்களுக்கு நன்றி. இப்பிடியான நாட்களிலைதானே எங்களுக்கு ஊர்லாப் (urlaub) கிடைக்கிறது. (அனுபவிக்க விடுறியள் இல்லை)

ஒரு பேப்பரின்  ஆண்டுவிழாவை எப்பிடிக் கொண்டாடிறது எண்டு சிலர் தங்கடை ஐடியாக்களை எங்களுக்கு அனுப்பியிருக்கினம். அவற்றைபற்றி எங்கடை குழுவோடை கலந்தாலோசித்து என்ன செய்யப்போறம் என்பதை சீக்கிரம் அறிவிக்கிறம். அதுக்கிடையிலை மற்றாக்களும் உங்கட அபிப்பிராயங்களை எழுதி அனுப்புங்கோ.

ஒரு பேப்பரின் சந்தாதாரர்களின் கவனத்திற்கு…. உங்களுக்கு தபாலில் ஒரு பேப்பர் வருவது சொல்லாமல் கொள்ளாமல் நின்றுவிட்டால் தயவுசெய்து எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். நாங்கள் ஆவன செய்கிறோம் சந்தாக்காலம்  முடிந்துவி;ட்டால் அதனை நீங்கள் புதுபிக்க வேண்டும்.

கனடாக்காரர் எங்களை கொஞ்சமும் கவனிக்கிறதாய் தெரியேல்லை. நீங்கள் இரவு-பகலாய் ஓடி ஓடி உழைக்கிறியள் சரி;. ஆனால் கொஞ்ச நேரத்தை ஒதுக்கி ஓரு பேப்பர் பற்றிய உங்கள் கருத்துக்களை, பூராயங்கள், புறணியளை எங்களுக்கு தெரியப்படுத்துங்கோ! அப்பத்தானே நீங்கள் விரும்பிற மாதிரி பேப்பரை வெளியிடலாம்.

உங்களிடமிருந்து எங்களுக்கு வரும் ஆக்கங்களில் பெரும்பகுதி அரசியல் சார்ந்தவையாகவே இருக்கின்றன. எங்கள் பத்தி எழுத்தாளர்களும் அரசியல் சார்ந்த கட்டுரைகளையே எழுதுகிறார்கள். ஒரு பேப்பர் முற்றிலும் அரசியல் பேப்பராக மாறிவிடாமல் பலவிடயங்களையும் தாங்கி வரும் ஒரு பேப்பராக இருக்க வேண்டும் என்பதையே நாம் விரும்புகிறோம். பல்வேறுவிடயங்கள் பற்றி சற்று வித்தியாசமான ஆக்கங்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.

உஙகட பூராயங்களை படிக்கிறதுக்கு ஒரு பெரிய வாசகர் குழாம் இருப்பது எங்களுக்கு தெரியும். இந்த பகுதியில் நீங்கள் என்ன பூராயத்தையும் எழுதலாம் நாங்கள் பிரசுரிப்போம். ஆனால் அவற்றை ஒரு மூண்டு நாலு வசனத்துக்கு மேலை நீளாமல் பார்த்துக் கொள்ளுங்கோ.


முனைள Pயிநச க்கு வந்து குவியும் சிறுவர்களின் கைவண்ணங்களையிட்டு மகிழ்ச்சியடைகிறோம். ஆக்கங்களை அனுப்பும் சிறுவர்களுக்கும் அவர்களை ஊக்குவிக்கும் பெற்றோர்களுக்கு எமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.