கருணா இல்லாத கருணா குழு!

by:
வி. சபேசன்

தமிழீழ மக்களுக்கு பெரும் வரலாற்றுத் துரோகம்
 இழைத்து மூன்று வருடங்கள் நிறைவு பெற்றுவிட்ட நிலையில் கருணா இப்பொழுது மீண்டும் வெளிநாட்டிற்கு தப்பி ஓடி விட்டதாக செய்திகள் வருகின்றன.  இம் முறை அவர் ஓடியதற்கு காரணம் விடுதலைப் புலிகள் அல்ல. கருணா குழுவினரே கருணாவை வேட்டையாடுவதற்கு தேடி வருகிறார்கள்.


கருணா விடுதலைப்புலிகளிடம் இருந்து பிரிந்து தனி அமைப்பை ஆரம்பித்த பொழுது, தமிழர் விரோத சக்திகள் எல்லாம் விழுந்தடித்து அவருக்கு ஆதரவு அளித்தன. மற்றைய ஒட்டுக்குழுக்களை விட கருணா குழுவிற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தன. அதற்கு மிக முக்கிய காரணம் கருணா பிரதேசவாதத்தை முன்வைத்ததுதான்.

 மற்றைய ஒட்டுக்குழுக்கள் ஏதோ ஒரு வகையில் உதட்டளவிலேனும் வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் பற்றி பேசிக் கொண்டிருக்க, கருணா கையிலெடுத்த பிரதேசவாதமோ தமிழ் மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளான தாயகம், தேசியம்,
தன்னாட்சி என்பவற்றை சிதைப்பதாக இருந்தது. வடக்கு கிழக்கை துண்டாடி தமிழர் தாயகம் என்பதை இல்லாது செய்கின்ற போது தேசியம் என்பதும் தன்னாட்சி என்பதும் தாமாகவே வலுவிழந்து போகின்றது.

 ஆகவே தமிழர்களின் போராட்டத்தை மொத்தமாக துடைத்தெறிவதற்கு கிடைத்த ஆயுதமாக கருணாவை சிங்களமும் மற்றைய அந்நிய சக்திகளும் கருதின. தமிழர் தாயகத்தை இரண்டாக உடைப்பதற்கு உருவாக்கப்பட்ட கருணா குழு இன்று இரண்டாக உடைந்து விட்டது. ஆனால் இந்தச் செய்தி கருணா குழுவை ஊன்றிக் கவனித்து வருபவர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்திருக்காது. கருணா குழு என்பது கருணாவின் விசுவாசிகளை மட்டும் கொண்ட அமைப்பாகவோ, கருணாவின் கட்டுப்பாட்டில் இயங்கிய அமைப்பாகவோ இருந்ததில்லை.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து கருணா பிரிந்து சென்ற பொழுது, கூடச் சென்றவர்களில் பலர் விடுதலைப் புலிகளிடம் மீண்டும் வந்து சரணடைந்து விட்டார்கள். பலர் கொல்லப்
பட்டு விட்டார்கள். பலர் வெளிநாடுகளுக்கு ஓடிவிட்டார்கள்.

இந்த நிலையில் கருணா குழுவின் ஆட்பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு இந்திய, சிறிலங்கா புலனாய்வுத்துறையினர்
பல நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ராசிக் குழு போன்ற ஒட்டுக்குழுக்களில் இருந்தவர்கள் கருணா குழுவுடன் இணைக்கப்பட்டார்கள். இந்தியாவில் இருந்து செயற்பட்ட ஈஎன்டிஎல்எவ் அமைப்பும் இணைக்கப்பட்டது. ஆனால்
பெரும்பாலான ஈஎன்டிஎல்எவ் உறுப்பினர்கள்
விடுதலைப் புலிகளின் தாக்குதலை சமாளிக்க முடியாது திரும்பிச் சென்று விட்டார்கள்.

சிறிலங்கா இராணுவமும் கருணா குழுவும் ஆட்
களை சேர்ப்பதற்கு பிள்ளை பிடிக்கும் வேலையில் இறங்கியது. பல சிறுவர்கள் வலுக்கட்டாயமாக கருணா குழுவில் இணைக்கப்பட்டார்கள். சில இளைஞர்களும் பண ஆசை காட்டி கருணா குழுவில் சேர்க்கப்பட்டார்கள். கிழக்கின் பெரும்
பகுதியை சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்ததன்
பின்னர் வெளிநாடுகளில் இருந்த சில கருணா விசுவாசிகளும் மீண்டும் வந்து கருணா குழுவில் இணைந்து கொண்டார்கள்.


அனுபவம் மிக்க உறுப்பினர்கள் என்று பார்க்
கின்ற பொழுது, இருபதுக்கும் குறைவானவர்களே கருணா குழுவில் இருக்கிறார்கள். இதற்குள் மற்றைய ஒட்டுக் குழுக்களில் இருந்து இணைக்கப்பட்டவர்களும் அடக்கம். வெளிநாடுகளில் இருந்து
திரும்பி வந்தவர்களும் அடக்கம். இரண்டாம்
கட்டத் தலைவர்கள் என்று வகைப்படுத்தப்
படும் இவர்களுக்கு சிறிலங்காப் புலனாய்வுத்துறை
ஒவ்வொரு பகுதியையும் பிரித்துக் கொடுத்தது.

பிரித்துக் கொடுக்கப்பட்ட பகுதிகளில் அவர்கள்
குறுநில மன்னர்களாக அட்டகாசம் புரிந்து
வந்தார்கள். இவர்கள் கருணாவின் கட்டுப்
பாட்டில் இருக்கவில்லை. இவர்களை வழிநடத்து
பவர்களாக சிறிலங்கா புலனாய்வுத்துறையின் அதிகாரிகள் இருந்தார்கள்.

இப்படி சிறு சிறு குழுக்களாக சிறிலங்கா புலனாய்வுத்துறையின் கட்டளைப்படி செயற்பட்டுக் கொண்டிருந்தவர்களின் அடையாளப் பெயராக மட்டுமே 'கருணா குழு' என்பது இருந்தது. மற்றையபடி அவர்கள் கருணாவின் கட்டளைப்படி இயங்குகின்ற ஒரு அமைப்பாக இருக்கவில்லை.

கருணா சிறிலங்காவில் இருப்பது வெகு குறைவு, அதுவும் கிழக்குப் பக்கம் செல்வதே இல்லை என்றநிலையில் கருணா குழு கருணாவின் பிடியில் இருந்து விடுபட்டு சென்று விட்டது. இதை சற்றுப்
பிந்தியே உணர்ந்த கருணா சில நடவடிக்கைகளை மேற்கொண்டார். கடைசியில் அதுவே கருணாவிற்கு வினையாகியும் விட்டது.

சிறு சிறு குழுக்களாக சிறிலங்கா புலனாய்வுத்துறையின் கட்டளைப்படி செயற்பட்டுக் கொண்டிருந்தவர்களின் அடையாளப் பெயராக மட்டுமே `கருணா குழு' என்பது இருந்தது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் கருணா
குழுவின் சந்திப்பு ஒன்று நடந்தது. இதில்
கருணாவும் கலந்து கொண்டதாக கூறப்படு
கிறது. இந்தச் சந்திப்பில் கருணா குழுவின் முதன்நிலைப் பொறுப்பாளராக பிள்ளையான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதன் மூலம் கருணா குழுவினது
இரண்டாவது தலைவராக பிள்ளையான் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டார். முதன்நிலைப் பொறுப்பாளர் என்ற அடைமொழி
யோடு பிள்ளையானின் பேட்டிகளையும் சிங்கள சார்பு ஊடகங்கள் வெளியிட்டன.

முதன்நிலைப் பொறுப்பாளராக பிள்ளையான் தேர்ந்தெடுக்கப்பட்டது இனியபாரதி போன்றவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை. இனியபாரதிக்கு நிதிப் பொறுப்பாளர் பதவி
வழங்கப்பட்டது. கடத்தல் மற்றும் கொள்ளைக் கும்பலாகிய கருணா குழுவில் 'நிதிப் பொறுப்
பாளர்' என்பது உண்மையில் மிக உயர்ந்த பதவிதான். அந்த வகையில் இனியபாரதி சமா
தானம் அடைந்தாலும், போகப் போக பிரச்சினைகள் பெரிதாகின.

முதன்நிலைப் பொறுப்பாளர் என்ற ரீதியில் நிதி
விடயங்களில் தலையிட்ட பிள்ளையான் பின்பு
அந்தப் பொறுப்பையும் தானே பார்த்துக்
கொள்ளவும் தொடங்கினார். அமைப்பின் பணத்தை பிள்ளையான் கையாடுவதாக குற்றச்
சாட்டுகளும் எழுந்தன. இதை விட வேறு சில பிரச்சனைகளும் தோன்றின. வெளிநாடுகளில் இருந்து திரும்பிய கருணா விசுவாசிகள் கருணா குழுவில் முக்கிய பொறுப்புக்களில் வருவதை பிள்ளையான் விரும்பவில்லை. வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த கருணா விசுவாசி ஒருவர் பிள்ளையான் அணியினரால் கொல்லப்பட்டார்.

இந்தச் சம்பவங்களை அடுத்து பிள்ளையானின் அதிகாரங்களை குறைக்க கருணா முயன்ற போது மோதல் பெரிதாகியது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் கருணா குழுவின் முகாமுக்கு கருணா விஜயம் செய்ததாக சில புகைப்படங்களை சிங்கள சார்பு ஊடகங்கள் வெளியிட்டன. அதில் கருணா குழுவின் முக்கிய தலைவர்கள் இடம்பெற்றிருந்தார்கள்.

அந்தப் புகைப்படங்களில் கருணாவை வரவேற்று அழைத்து வரும் குழுவில் பிள்ளையான்
இல்லை. கருணா நின்று கொண்டு பேசுகின்ற
புகைப்படங்களில் முதன்நிலைப் பொறுப்பாள
ராகிய பிள்ளையான் மிகத் தள்ளி ஒரு சாதாரண பாதுகாவலர் போல் நின்று கொண்டிருக்கிறார். கருணாவுடன் அருகில் இருக்கும் புகைப்படத்தில் பிள்ளையானின் முகத்தில் எந்த ஒரு உணர்வும் இல்லை. உள்விடயங்கள் தெரியாதவர்களுக்கும் அந்தப் புகைப்படங்கள் கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோதலை படம்பிடித்துக் காட்டின.

கருணாவின் விஜயம் நடந்து ஓரிரு நாளில் கொழு
ம்பின் முத்துராஜவெல பகுதியில் 5 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்தச் சடலங்கள் மட்டக்களப்பை சேர்ந்தவர்களுடையது என்று இனம் காணப்பட்டன. அப்பாவித் தமிழ் மக்கள் சிங்களப்
புலனாய்வுத்துறையினரால் கொல்லப்பட்டுள்ளார்கள் என்ற சந்தேகம் ஆரம்பத்தில் எழுந்தது. ஆனால் அவர்கள் கருணா குழுவைச் சேர்ந்தவர்கள் என்று பின்னர் தெரிய வந்தது.

கொழும்பில் 5 கருணா குழு உறுப்பினர்கள் கொல்லப்பட்ட விடயம் சிறிலங்கா தரப்பால் பெரிதுபடுத்தப்படவில்லை. விடுதலைப்புலிகள் தரப்பில் இருந்தும் எந்தச் செய்தியும் வெளியாக
வில்லை. தற்பொழுது நடைபெறும் சம்பவங்களை
வைத்துப் பார்க்கும் போது இந்த ஐவரும் கருணா-பிள்ளையான் மோதலில் கொல்லப்பட்டவர்களாகவே இருக்க முடியும்.

பிள்ளையானையும் கருணாவையும் முரண்பட வைத்ததில் சிறிலங்காப் புலனாய்வுத்துறைக்கும்
பெரும் பங்கு உண்டு. கருணா குழு ஒரு அளவிற்கு
மேல் வளர்வதை சிறிலங்காப் புலனாய்வுத்துறை விரும்பவில்லை. பல ஆண்டுகளாக விடுதலைப்புலிகளோடு இருந்தவர்கள் தனித்துவமாக இயங்குவது தமக்கு ஆபத்து என்று சிறிலங்கா புலனாய்வுத்துறை நம்பியது. கருணா குழு பலம் பெறுவதை தடுப்பதற்காகவே கருணா குழுவை பல சிறிய குழுக்களாக இயங்கச் செய்தது.

ஆனால் கருணா குழு இப்படி இரண்டாக உடைவதையும் சிறிலங்காப் புலனாய்வுத்துறை விரும்பியிருக்கவில்லை. கருணா பிள்ளையான் தரப்பை சமாதானம் செய்ய விரும்பிய சிறிலங்கா புலனாய்வுத்துறை மட்டுஅம்பாறையை இரண்டாக பிரித்து பிரச்சனையை தீர்க்க முயன்றது. மட்டக்களப்பின் ஆரயம்பதியில் இருந்து தெற்காக பொத்துவில் வரை கருணா குழுவுக்கும், வடக்கே வெருகல் வரைக்கும் பிள்ளையான் குழுவுக்கும் பிரித்துக் கொடுத்தது. ஆனால் இது பிரச்சனையை மேலும் அதிகரித்ததே தவிர குறைக்கவில்லை.

சிறிலங்காஅரசு கிழக்கை கைப்பற்றி தன்னிடம் ஒப்படைக்கும் என்று கருணா பகல் கனவு கண்டு கொண்டிருக்க, சிறிலங்கா புலனாய்வுத்துறையின் செயற்பாடுகள் கருணா குழுவையே இல்லாமல் செய்து விட்டது.
சிறிலங்காஅரசு கிழக்கை கைப்பற்றி தன்னிடம் ஒப்படைக்கும் என்று கருணா பகல் கனவு கண்டு கொண்டிருக்க, சிறிலங்கா புலனாய்வுத்துறையின் செயற்பாடுகள் கருணா குழுவையே இல்லாமல் செய்து விட்டது.

கருணா குழுவில் ஏற்பட்ட பிளவின் போது நடந்த
சம்பவங்கள் சில புருவத்தை உயர்த்த வைப்ப
வையாக இருக்கின்றன.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கருணா மீது
வைக்கப்பட்ட நிதி சம்பந்தமான குற்றச்சாட்டுக்கள்
பற்றிய விளக்கத்தை பெறுவதற்கு விடுதலைப்
புலிகளின் தலைமை கருணாவை வன்னிக்கு அழைத்தது. கருணா வன்னிக்கு செல்லாது அந்நிய
சக்திகளுடன் இணைந்து தனி அமைப்பை உருவாக்கினார்.
தற்பொழுது நிதி சம்பந்தமான குற்றச்சாட்டுக்
களை விசாரிக்க பிள்ளையானை கொழும்பு வரும்
படி கருணா அழைத்தார். பிள்ளையான் கொழும்பு செல்லாது, தனி அமைப்பை ஏற்படுத்தியுள்ளார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கருணா குழுவால் கடத்தப்பட்ட புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் கொடுரமாகக் கொல்லப்பட்டார்கள். இந்த கொடிய செயலை தலைமை தாங்கி நடத்தியவன் கருணா குழுவின் முக்கிய உறுப்பினனாகிய சிந்துயன்.
புனர்வாழ்வுக் கழகத்தின் பெண் பணியாளர் பிறேமினி சிந்துயனாலும் மற்றைய கருணா குழு
உறுப்பினார்களாலும் வல்லுறவுக்கு உட்படுத்தப்
பட்டு பின் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

தற்பொழுது அதே சிந்துயன் பிள்ளையானுக்கு ஆதரவாக இருந்த காரணத்தால் கருணாவை ஆதரிக்கின்ற இனியபாரதியால் சுட்டுக் காயப்படுத்
தப்பட்டு பின்பு சித்திரவதை செய்யப்பட்டு வெட்டிக்
கொல்லப்பட்டுள்ளான். சிந்துயனின் தந்தையும்
கருணா ஆதரவு அணியினரால் கொல்லப்
பட்டுள்ளார்.
 
கருணா - பிள்ளையான் மோதலில் பிள்ளையானின் கையே ஓங்கி உள்ளது. முக்கிய உறுப்பினர்கள் பிள்ளையானின் பக்கமே நிற்கிறார்கள். அத்துடன் கிழக்கில் உள்ள இராணுவ அதிகாரிகளும் பிள்ளையானையே ஆதரிக்கின்றார்கள். பிள்ளையான் களத்தில் நின்று செயற்படுவதாக கூறி இவர்கள் அனைவரும் பிள்ளையானை ஆதரிக்கிறார்கள்.

சிறிலங்கா புலனாய்வுத்துறை கருணா தரப்பையும் பிள்ளையான் தரப்பையும் இணைப்பதற்கு கடும் முயற்சி எடுத்து வருகிறது. 'கருணா' என்கின்ற அடையாளக்குறியை இழக்க சிறிலங்கா புலனாய்வுத்துறை விரும்பவில்லை. தற்பொழுது ஒரு புதிய திட்டத்தை சிறிலங்கா புலனாய்வுத்துறை முன்வைத்துள்ளது. அது கருணா இல்லாத 'கருணா'குழு என்பதாகும்.

 பலவீனப்பட்டு போயிருக்கும் கருணாவும் அவரது ஆதரவாளர்களும் ஒதுங்கியிருக்க, 'கருணா குழு' என்ற பெயரிலேயே தொடர்ந்து பிள்ளையான் தலைமையில் அந்தக் குழு இயங்குவது என்பது அந்தத் திட்டம். கருணா மற்றும் பிள்ளையான் குழுவினருக்கு சிறிலங்காப்புலனாய்வுத்துறையே தலைமை வகிப்பதால் கருணாவும் பிள்ளையானும் இந்தத் திட்டத்திற்கு கட்டுப்படுவர் என்று தெரிகிறது. இரு தரப்பும் சமாதானம் ஆகி விட்டதாக தற்பொழுது வெளிவரும் செய்திகளையும் இதன் அடிப்படையிலேயே நோக்க வேண்டும்.

 உறவு மீண்டும் ஏற்பட முடியாத வண்ணம் கருணா தரப்புக்கும் பிள்ளையான் தரப்புக்கும் மிக ஆழமான பிளவு ஏற்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.