அண்மையில் தமிழ்நாட்டில் சில ஈழத்தமிழர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்தைக் ;காரணங்காட்டி, கைதுசெய்யப்பட்டவர்களுக்கு புலி முலாம் பூசி, விடுதலைப்புலிகள் தமிழ்நாட்டை தளமாக பாவிக்கத் தொடங்கியுள்ளார்கள் என்ற பிரசாரத்தை இவ்விடயத்தில் அக்கறை கொண்ட சில வட்டாரங்கள் மேற்கொள்கின்றன. இதனை வாய்ப்பாக பயன்படுத்தி திரு. கருணாநிதி தலைமையிலான தமிழ்நாடு சட்;டசபையை கலைத்துவிட தமிழ்நாட்டுத் அரசியல்வாதிகள் சிலர் எத்தனிக்கின்றனர். மீளவும் விடுதலைப்புலிகள் விவகாரத்தை அவர்கள் தங்களது அரசியல் நலன்களுக்காக பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.
இதில் வேதனைக்குரிய விடயம் என்னவெனில், எதிர்த்தரப்பு அரசியல்வாதிகளின் அபத்தமான குற்றச்சாட்டுக்களை மறுதலிப்பதற்காக திரு. கருணாநிதி அவர்கள் கைக்;கொள்ளுகின்ற அணுகுமுறை அவரது உறுதித்தன்மையை வெளிக்காட்டவில்லை. மாறாக எதிர்தரப்பினது உத்திகளை நியாயப்படுத்தி நிற்கிறது. அரசியல்வாதிகளின் நடவடிக்ககைகள் தமிழ்நாட்டு மக்கள்மீதான கரிசனை தொடர்பானது அல்ல என்பதும், அவர்களது அரசியல் அபிலாசைகள் தொடர்பானது என்பதும் வெளிப்படையாகத் தெரிகின்றபோதிலும், தமிழ்நாட்டு மக்களின் உள்ளுணர்வை அறிந்து கொள்ள முடியாமலிருக்கிறது.
தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளின் ஊடுருவல், அதன் தலைவர்கள் சிகிச்சைகாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளமை போன்ற புரளிகளுக்கு தமிழ்நாட்டின் முன்னணி ஊடகங்கள் சில கொடுக்கும் முக்கியத்துவம் அத்தகைய ஊடுருவல் முயற்சி நடக்கலாம் என்ற எச்சரிக்கையுடனான, முன்னேற்பாடு நடவடிக்கையாக இருக்கலாம். அதேபோல் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்படுகிறார்கள் என்ற தோற்றப்பாட்டை தமிழ்நாட்டு மக்களுக்கும் இந்திய மக்களுக்கும் காட்டுவதற்கான இந்திய அரசு இயந்திரத்தின் முயற்சியாகவும் இருக்கலாம்.
தமிழ்நாட்டு அரசியலில் விடுதலைப்புலிகளை தொடர்புபடுத்துவதில் மாநில அரசியற்கட்சிகள் தனித்து இயங்குகின்றன எனக்கூற முடியாது. இந்திய மத்திய அரசு, சிறிலங்கா அரசுபோன்றவற்றின் ஆதரவினு+டாகவே இந்த பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
தமிழ்நாட்டு அரசியல்வாதிகளில் யாரை ஆதரிப்பது, அல்லது எதிர்ப்பது என்பதில் தமிழ்நாட்டு மக்களுக்கு, கொள்கையளவில் அல்லது தனி;ப்பட்ட முறையில் அபிப்பிராயங்கள் இருக்கலாம். ஆனால் இவற்றைக் கடந்து, இனவழிப்பிலிருந்து தங்களை காத்துக் கொள்ளப் போராடும் ஈழத்தமிழர்களுக்கு தார்மிக ஆதரவு வழங்க வேண்டியது தமிழ்நாட்டு மக்களின் கடமையாக உள்ளது.
பரந்துபட்ட தமிழ்நாட்டு மக்களின் ஆதரவினையே ஈழத்தமிழர்களும் நன்றியுடன் எதிர்பார்த்து நிற்கிறார்கள்.
Recent comments
1 year 20 weeks ago
1 year 21 weeks ago
1 year 26 weeks ago
1 year 29 weeks ago
1 year 29 weeks ago
1 year 29 weeks ago
1 year 30 weeks ago
1 year 33 weeks ago
1 year 38 weeks ago
1 year 43 weeks ago