வணக்கம்!
நேற்று காதலர் தினம், ஒரு பேப்பர் தயாரிப்பு பிசியில் அதை மறந்தே போனோம் வழமையாக வரும் தபாற்காரரும் கடந்த இரண்டு நாட்களாய் எங்கள் அலுவலகப்பக்கம் எட்டிப்பார்க்கவில்லை. கூரியரிலும் எதுவும் வரவில்லை என்ற எங்கட வயிற்றெரிச்சலைக் கொட்டாமல் மேலே தொடர்கிறோம்.
பிரான்சில் ஒரு பேப்பர் விநியோகம் ஒரளவு சீராகி விட்டது. ஜேர்மனியில்தான் இன்னமும் சரிவரவில்லை, தொடர்ந்து முயற்சிக்கிறோம். மற்றய ஐரோப்பிய நாடுகளில் ஒரு பேப்பரை விநியோகிக்க் அல்லது சந்தாதாரராக சேர்ந்து கொள்ள நீங்கள் விரும்பினால எங்களது லண்டன் பணிமனையில் பாலாண்ணையுடன் தொடர்பு கொள்ளுங்கள்.
ஒரு பேப்பரின் 4வது ஆண்டு நிறைவினையொட்டி 100வது பேப்பர் வெளியிட்டின் போது விழா ஒன்றை நடாத்தலாம் எண்டு இருக்கிறம். அந்த விழா எப்படியிருக்கும் எண்டு இப்பச் சொல்லேலாது. ஏனன்டெண்டால் எங்களுக்கு ஒரு ஐடியாவும் வருதில்லை. விழா எப்பிடியிருக்கோணும் எண்டு நீங்களே சொல்லுங்கோ. சினிமாக்காரரை கூப்பிட்டு சீடியிலை மியூசிக்கை போட்டு பாடவையுங்கோ.. அல்லது சின்னத்திரை நடிகையை கூப்பிட்டு வாயசைக்க வையுங்கோ என்று மட்டும் சொல்லியிடாதேங்கோ. அது அதுகளுக்கு வேறயாக்கள் இருக்கினம். நாங்கள் வித்தியாசமாய் செய்யோணும். எங்கட சேயோன் சொல்லிறமாதிரி விழாவை பறையடிச்சு தொடங்;கோணும் எண்டால் அதை கொன்சிடர் பண்ணுவம்.
திரும்பவும் சொல்லிறம், ஒரு பேப்பருக்கு ஆக்கங்களை அனுப்புவர்கள் அந்த ஆக்கங்களை மற்றய ஊடகங்களுக்கும் அனுப்பியுள்ளீர்களாக என்பதை மறவாமல் குறிப்பிடுங்கள்.
எமது சமூகத்தில் குளறுபடிகள் .. சுத்துமாத்து செய்பவர்கள் பற்றிய செய்திகள் பல எங்களை வந்தடைகின்றன. அவற்றை வெளியிட்டு இப்பிடியான சுத்துமாத்துக்காரரை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அதன்மூலம் இவர்களிடம் மக்கள் ஏமாறுவதை தவிர்க்க முடியும் எண்டும் சிலர் எங்களை கேட்டு வருகிறார்கள். இப்பிடியான முறைப்பாடுகளை சிலர் எங்களுக்கு அனுப்பி வைச்சும் உள்ளனர். சம்பந்தப்பட்ட தரப்பினரை தொடர்பு கொண்டு இக்குற்றச்சாட்டுக்களின் உண்மைத்தன்மையை தெரிந்துகொண்டு அவற்றை பிரசுரிப்போம்.
ஒரு பேப்பர் அச்சுப்பகுதியில் விசைப்பலகைகளை இயக்கும் விரல்கள்; பற்றி முன்னர் ஒரு தடவை குறிப்பிட்டிருந்தோம். ஜேர்மனி நாட்டில் வாழும் இரண்டாம் தலைமுறையை சேர்ந்த நமது இளையவர்களே இந்த விரல்களுக்கு உரியவர்கள். ஜேர்மனியில் உள்ள தமிழ்ப் பாடசாலைகளிலேயே தமிழைக் கற்ற இவர்கள் மற்றய துறைகளில் முன்னிற்கிறார்கள். சமயம் வரும்போது இவர்களை உங்களுக்கு அறிமுகம் செய்துவைக்கிறோம்.
மீண்டும் சந்திப்போம்.
Recent comments
1 year 20 weeks ago
1 year 21 weeks ago
1 year 26 weeks ago
1 year 29 weeks ago
1 year 29 weeks ago
1 year 29 weeks ago
1 year 30 weeks ago
1 year 33 weeks ago
1 year 38 weeks ago
1 year 43 weeks ago