வணக்கம்!
ஒரு புறம் குளிர் வாட்டினாலும், பேப்பரை நேரத்துக்கு உங்களிடம் கொண்டு போய் சேர்க்கவேண்டும் என்ற நோக்கத்தில் விசைப்பலகையை தொடும் போது பேப்பரை படித்து விமர்சிக்கப்போகின்ற அல்லது மகிழ்வடையப்போகின்ற உங்கள் முகங்களே தெரிவதால் வேறெதுதும் தெரிவதில்லை.
அண்மைகாலமாக ஒரு பேப்பர் பற்றிய விமர்சனங்கள் அதிகரித்துள்ளமை தெரியுது. இப்பத்தான் நாங்கள் பரந்த வாசகர் பரப்பை அடைந்திருக்கிறம் என்பது மகிழ்ச்சி தரும் விடயமே. ஒரே ஒரு கவலை, அந்த விமர்சனங்களை எங்களுக்கு அனுப்பினால் அதனை நாங்கள் பிரசுரித்து மற்றவர்களையும் வாசிக்க வைக்கலாம்.
அடிக்கடி சொல்லிற சங்கதிதான், திரும்பவும் நினைப்பூட்டிறம், நீங்கள் ஒரு பேப்பருக்கு ஆக்கங்களை அனுப்பும் போது அவை எந்தவிதமான திருத்தங்களும் இன்றி பிரசுரிக்கப்பட வேண்டும் என எதிர்பார்த்தால் எமது ஆசிரியர் குழுவுடன் தொடர்பு கொண்டு, எழுதப்போகிற விசயம், ஆக்கங்களின் (வார்த்தைக் கணக்கில்) அளவு போன்ற விடயங்களை அறிந்து அதற்கேற்ப எழுதி அனுப்புங்கோ. தருவதை அப்படியே பிரசுரிப்பதற்கு, நாங்கள் ஒரு பதிப்பகத்தை நடாத்தவில்லை என்பதை தயவாய் உங்களது கவனத்துக் கொண்டு வருகிறம். இதுகள் சரிவராது எண்டிற ஆக்கள் எங்களை விட்டுங்கோ, பிளீஸ்.
இந்த பேப்பரிலை “சைவமும் தமிழும்” என்ற தலைப்பிலை இளங்கோ எழுதியிருக்கிறார் அவரது கருத்துகள் பற்றிய உங்கட எதிர்வினையளை எதிர்பார்க்கிறோம். அதை விட்டு வி;ட்டு நீங்கள் எல்லாம் சைவத்தின் காவலர்களாக மாறி இளங்கோவையும் ஒரு பேப்பரையும் திட்டித் தீர்க்காதேங்கோ. எங்களிலையும் கனபேர் பிறப்பாலை சைவம்தான்.
எமது இணையத்தளத்தில் மீளவும் Pனுகு வடிவத்தில் ஒருபேப்பரை பார்வையிட வசதி செய்யப்பட்டுள்ளது. கொஞ்சகாலத்துக்கு இதையும் ஒசியாய் விடலாம் என எண்ணுகிறோம்.
சிறிலங்கன் எயர்லைன்சில பிரயாணம் செய்யாதீங்கோ எண்டு உள்ளுக்கு எழுதிறியள் அட்டையிலை அதிலை பறவுங்கோ எண்டு விளம்பரம் போடுறியள் ஏனிந்த முரண்பாடு எண்டு கனபேர் எங்களை கேட்கினம். உண்மைதான நாங்கள் விளம்பரதாரர் விசயத்திலை அளவுக்கு அதிகமாய் மூக்கை நீட்டுறதில்லை என்பதாலை இந்த முரண்பாடு ஏற்படுகிறது. இருந்தாலும் சிறிலங்கா அரசாங்கத்துக்கு வருமானத்தை கொடுக்கிற அலுவல்களில் நாங்கள் ஈடுபடுதிறதில்லை எண்டு சொல்லிற வர்த்தகர்களுக்கு விளம்பர விடயத்தில் சலுகை காட்டுவதற்கு நாம் தயாராய் உள்ளோம் என்பதை சொல்லி வைக்கிறம்.
ரீன் பேப்பரில் எழுதுபவர்கள் சற்று ஆர்வக்குறைவாய் இருக்கிறார்கள் அவர்களை நீஙகள் ஊக்கப்படுத்துவதில்லை எண்டு குறைப்படுகிறார்கள். தாங்கள் கொஞ்சம் வேறுபட்ட கருத்துக்களை எழுதினால் தங்களை திட்டித்தீர்க்கிற நீங்கள் மற்றயபடி அவர்கள் எழுதிறதுகளை கண்டு கொள்ளிறதில்லை எனபதே அவர்களது முறைப்பாடு. அவர்களது கருத்துக்களையும் உள்வாங்கி வளரும் சமுதாயத்தை தட்டிக்கொடுக்க வேணும். அதுக்காக அவர்கள் கிறுக்கிறது எல்லாததையும் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேணும் எண்டில்லை. எதுக்கும் அவர்கள் தமிழ் சமூகத்திற்கு என்னத்தை சொல்ல விரும்புகிறார்கள் என்பதை ஓரு பேப்பர் மூலமாய் சொல்லச் சொல்லி உங்கட குமருகளுக்கும் சொல்லிவிடுங்கள்.
மீண்டும் சந்திப்போம்.
Recent comments
13 hours 52 min ago
1 day 21 hours ago
2 days 20 hours ago
3 days 21 hours ago
4 days 21 hours ago
5 days 22 hours ago
1 week 21 hours ago
1 week 2 days ago
1 week 3 days ago
1 week 4 days ago