தமிழீழப் போரின் இருண்ட காலகட்டம் ஒன்றினுள் நாம் விரைவாகப் புகுந்து கொண்டிருக்கின்றோம். இலங்கையில் ஆதிக்கம் செலுத்த விழையும் உலக வல்லரசின் கவனம் முற்று முழுதாக தமிழீழத்தின் பால் செலுத்தப்பட்டுள்ள காலத்தில் நான் இருக்கின்றோம்.
மிதவாத சர்வதேச சமாதான உருவாக்கிகளாக இனங்காணப்பட்ட நோர்வேயின் ஆதிக்கத்தை மீறிய வகையில் ஈழப்போராட்டம் நகர்ந்து விட்டது. இந்நிலையில் அத்தனை விட்டு விட அமெரிக்கா தயாராகவில்லை என்பதையே அது பிரித்தானியாவை களமிறக்கி விட்டதில் இருந்து பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.
சண்டித்தனத்தில் அண்ணணுக்குக் குறையாத அதிரடி மிக்க தம்பியாகவே பிரித்தானியா இருக்கின்றது. இந்து சமுத்திரத்தில் அமெரிக்காவிற்கு இருக்கக்கூடிய ஆர்வத்தைநாம் அறியாமலில்லை. இப்பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கு இருக்கக்கூடிய ஆர்வத்திற்கான காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். அது எவ்வாறு தமிழ்த்தேசியத்தின் விடுதலைப் போராட்டத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றது, தொடர்ந்தும் செலுத்தப் போகின்றது என்பதில் இருந்தே இன்றுள்ள அமெரிக்காவின் அரசியல் பொருளாதார இராணுவ நோக்கில்- நாம் ஒரு இருண்ட கால கட்டம் ஒன்றினுள் நுழையப் போவதாக என்னால் கூறமுடிகின்றது.
இது இவ்வாறேதான் இருக்க வேண்டும் என்பதல்ல. மாற்றம் காண்பதற்குமான பல சாத்தியங்கள் இன்னும் இருக்கவே இருக்கின்றது. அது தமிழ்த்தேசியத் தலைமையும், அமெரிக்க நலன்களும் ஒன்றையொன்று புரிந்து கொள்ளும் போது சாத்தியமாகலாம்.
தற்போதைய நிலையில் போர்களற்ற சமாதான இலங்கையே அமெரிக்காவின் தேவையை நிறைவேற்றக்கூடியது என்பதை அமெரிக்கா கண்டுகொண்டுள்ளது.இடதுசாரி அதிதீவிரவாத இயக்கங்களின் வளர்ச்சியை ஏன் இருப்பைக் கூட அமெரிக்காவின் பிரசன்னம் தடை செய்துவிடும். இதை உணர்ந்து கொண்டமையாலேயே J.V.P போன்ற இடதுசாரி அதிதீவிர பௌத்த இன வாதக் கட்சிகள் பிரித்தானியாவின் வருகைக்கு போர்க்கொடி உயர்த்தத் தொடங்கி இருக்கின்றன. இதே போர்முலாவே தமிழீழத் தேசியத் தலைமையி மீதும் அமெரிக்காவால் செலுத்தப்படும் என்பதே துயரமான விடயமாகும். இன்றுள்ள அரசியல் இராணுவ சூழ்நிலையில் அமெரிக்கா விரும்பினால் கூட இவ்வாறு நிகழ்வதை தடை செய்ய முடியாது.
இதே நேரம் J.V.P போன்ற இனவாதக் கட்சிகளின் இவ்வாறான எதிர்ப்பு நிலையே தமிழ் மக்களாகிய எங்களுக்கும் பேரம் பேசும் வலுவைக் கொண்டுவருகின்றது. இதனை இவ்வினவாதக் கட்சிகள் உணர்ந்துள்ள போதும் தம் இருப்பை நிலைநாட்ட இவ்வாறு போராடுவதைத் தவிர வேறு வழி இல்லாத நிலையிலுள்ளன.
அபாய அலாரம் மிக உயர் நிலயிலேயே அடிக்கத் தொடங்கியுள்ளது. அமெரிக்காவுடன் முரண்படும் இந்திய நலன்களும் மற்றொரு புறத்தில் எம்பேரம் பேசும் வலுவைத் தூக்கிநிறுத்தக் கூடியது. இந்தியாவின் பிராந்திய வல்லரசுக் கனவு அமெரிக்காவின் உலக வ்ல்லரசுக் கனவுடன் முட்டிமோதும் நிகழ்வுகள் கூர்மையடையப் போகின்றன. இதனைத் தீர்மானிக்கும் இன்னுமொரு சக்தியாக சீனாவும் இருக்கப் போகின்றது.
Comments
Fear of Persecution!
please, when you write anything substantial issues like this then give some factual and/or reliable sources to make your thoughts valid! othervise please don't misguide the "innocent people " like me!
thanks
again well info., Poonkothai but the last bit of comment by you, "When it comes to South Asia US government’s policy is to work through India and never work against Indian interests", not fully addressed or by theory you may right! but in practice?
A flawed assessment
The observations on geopolitics and the current ‘world order’ by this columnist are far from the reality. Current US foreign policy is to contain the growing Chinese power in Asia and world wide. On the other hand India is increasingly suspicious about China’s motives in Asia. The ubiquitous Chinese presence is a direct threat to Indian influence in south Asia and Southeast Asia. The Chinese government’s military and economic cooperation with Myanmar, Pakistan, Iran and Sri Lanka is growing in alarming rate. Already they have established close ties with Myanmar, Chinese and Myanmar cities are linked with high ways and Chinese have the access to Myanmar ports. Recently opened deep water port in Gwadar, Pakistan was built by the Chinese money and expertise. Most conservative assessment of the cost of this project was nearly 250 million us dollars. The China has also invested $200 million in building a coastal high way that will connect the new port to Karachi. Also china is going to build a naval base for Pakistan. Five years ago Gwadar was just a fishing village on the Arabian Sea, a remote place on the edge of the desert and mountains of the Baluchistan region. The Gwadar is just 250 miles from the Strait of Hormuz, through which nearly 40 per cent of world oil supplies flow and President Musharraf wants to transform this port into an energy hub for the Gulf and central Asian states. The Chinese government also helping Iranians to build a port at Chabahar in Iranian Baluchistan. Indian and US governments have adequate reasons to be alarmed over this Chinese encroachment into ‘their’ territory. Therefore US government is working together with India in order to face the growing Chinese threat. When it comes to South Asia US government’s policy is to work through India and never work against Indian interests.
There is no basis to compare the Palestine struggle and Tamieelam struggle both conflicts are different in every aspect except the fact both nations are oppressed.